மே-மாதம் 19 ஆம் தேதி, தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி என்ற இருமொழித் திட்ட அமலாக்கதை அகற்ற, புத்தராஜெயாவில் ஒரு பேரணியை நடத்தப் போவதாக மே19 இயக்கம் அறிவித்துள்ளது. இந்த “மே19 இயக்கம்” தமிழ்க்கல்வி மற்றும் தாய்மொழிக்கல்வி சார்ந்த செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் தோற்றுவிப்பாகும்.
மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு காப்பகமாக இயங்கும் தமிழ்ப்பள்ளிகளில் தற்போது இருமொழித் திட்டம் என்ற ஒரு வழிமுறை பள்ளியின் விருப்பத்தின் பேரில் ஊடுருவி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழில் போதிக்கப்பட்ட அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் ஆங்கில மொழியில் போதிக்கப்படுகிறது.
இதன் நுழைவு தமிழ் மாணவர்களின் தரத்தை பலவீனமாக்குவதோடு தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பையும், தமிழ்மொழியின் வழி அறிவியல் கணிதத்திற்கான கற்றல் கற்பித்தல் அமைப்பு முறைகளையும் முற்றாக அழித்துவிடும் தன்மை கொண்டது.
தமிழ்ப்பள்ளி என்பது தமிழ்மொழி வழிக்கல்வியை வழங்கும் தளமாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகளின் அறிவாற்றலுக்கும் தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மைக்கும் மிரட்டலாக இருக்கும் இருமொழித் தி ட்டத்தை தமிழ்ப்பள்ளிகள் அமலாக்கம்செய்யக்கூடாது என்று மே 19 இயக்கம் வலியுறுத்துகிறது.
அவ்வகையில் இவ்வியக்கம் தார்மீக உணர்வோடு தமிழ்ப்பள்ளிகளைக் காப்பதற்கும் மீட்பதற்குமான செயலாக்கங்களில் ஈடுபடும். அதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்தப்பேரணி அமையும். இதன் வழி நாட்டின் பிரதமருக்கும் கல்வி அமைச்சருக்கும் இவ்வியக்கத்தின் அறிவுசார்ந்த நோக்கம் விளக்கப்படும்.
இதற்கு முன் கல்வி அமைச்சருக்கு கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஒரு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சு நிர்ணயம் செய்த அடைவு நிலைகளை எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் அடையாத நிலையில், அவை அந்தத் திட்டதிலிருந்து விலக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட கல்வி இலாகவுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த வழியுறுத்தலுக்கு ஒரு படி மேலாக இந்த ஒவ்வாதத் திட்டத்தை இரத்து செய்வதே முறையான வழிமுறை என்கிறது மே19 இயக்கம். எனவேதான், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக புத்ராஜெயாவில் அதிருப்தி அமைதி ஒன்றுக்கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் கட்டத்திற்கு வந்துள்ளோம் என்கிறார்கள் அதன் ஒருங்கிணைபாளர்கள்.
மே19 ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணி வரையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெறும் இந்தப் பேரணியில் தமிழ்மொழியையும் தமிழ்ப்பள்ளிகளையும் காப்பாற்ற ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
இந்த மே19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பார்களாக வழக்கறிஞர் கா. ஆறுமுகம், வழக்கறிஞர் ஆர். பாலமுரளி, கௌத்தமன், தியாகு, பொன்ரங்கன், கணியமுதன், தமிழினியன், தமிழ்த்திறன், கலைமுகிலன் உட்பட மேலும் பலர் இயங்குகின்றனர்.
இது சார்பான மேலதிக தகவல் பெற சுரேன் – 0184632325 மற்றும் பொன்ரங்கன் – 0166944223 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
“நிர்ணயம் செய்த அடைவு நிலைகளை எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் அடையாத நிலையில், அவை அந்தத் திட்டதிலிருந்து விலக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட கல்வி இலாகவுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளது”
நகைப்புக்குறிய பதில். கல்வி இலாகா சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகுதியை ஆய்ந்த பிறகே அவற்றிற்கு டி எல் பி திட்டத்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இப்பொழுது தகுதி இல்லாத பள்ளிகள் தாமாகவே முன் வந்து கல்வி இலாக்காவிற்கு எழுத வேண்டுமென்றால் முன்னர் எந்த அடிப்படையில் கல்வி இலாகா அப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்தது ?
கல்வி இலாக்காவின் பதிலானது தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எங்களது இயக்க சார்பாக ஆதரவும் நிகழ்விலும் கலந்துக்கொள்கிறோம்..
தாமாகவே முன் வந்து விலகிக் கொள்ளும் பள்ளிகளையும், ‘தலை’களையும் கருப்புப் பட்டியலிடுவார்கள் என்று பயந்து எந்த ‘தலை’யும் இதற்குத் துணியாது என்பது கல்வி அமைச்சின் கணிப்பு போலும். தொடை நடுங்கும் ‘தலை’கள் முன்வருமா பார்ப்போம்…
இந் நாட்டில் 50% இந்தியர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இங்கேயே நாம் தோற்று போயிட்டோமே. இதற்கு தமிழ் அறவாரியம் என்ன செய்தது ? தமிழ் ஆர்வலர்கள் என்ன செய்தார்கள்? தற்போது 50% பிறகு 40% அதன் பிறகு 30%.அப்புறம் என்ன ? மூடு விழாதான்.முக்கியமா இதை கவனிங்க என் தமிழ் சமூகமே .
தமிழ்ப் பள்ளிகள் KPM கொடுத்த அடைவு நிலையை அடைய வில்லையா ? யார் சொன்னது ? போய் பாருங்க சார் . Listen to majority . இது ஒரு ஜனநாயக நாடு .
ஐயா கோவிந்தசமி, எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை, அதுலும் ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர் ஒருவர்தான் ஆனால், டி எல் பி வகுப்பு கொடுக்கப்பட்டது. என்ன கொடுமை இது. இன்னொரு பள்ளியில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.
எந்த அடிப்ப்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைகிரீர்கள்?
மேலும் இந்த டி எல் பி கொடுக்கப்ப்ட்டதா அல்லது திணிக்கப்பட்டதா? யாரால் திணிக்கப்பட்டது?
“இதன் நுழைவு தமிழ் மாணவர்களின் தரத்தை பலவீனமாக்குவதோடு தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பையும், தமிழ்மொழியின் வழி அறிவியல் கணிதத்திற்கான கற்றல் கற்பித்தல் அமைப்பு முறைகளையும் முற்றாக அழித்துவிடும் தன்மை கொண்டது.” – தமிழ்ப்ப்பள்ளிகளில் தமிழ் மட்டும்தான் தமிழில் இருக்கும். இது தெரியாத கபோதிகள் டி எல் பி வேணும் என்பது தமிழ் ப்பள்ளியை அழிக்கவா?
கேவலம் – சில தலைமை ஆசிரியர்கள் இதற்கு துணை போவது!
பழைய ரசாக் கல்வி முறைக்கு நாம் மாற வேண்டும். அதுவே சிந்திக்கும் திறனையும் கல்வியின் தரத்தையும் உயர்த்தும்–ஆனால் நடக்காது– காரணம் அவன் களுக்கும் தெரியும்.
ரசாக் கல்வி முறை ஆபத்தானது ஐயா! அதன் கொள்கை அனைத்தையும் தேசிய மயமாக்குதல்
ரசாக் கல்வி கொள்கையினால் தான் தமிழ் பள்ளி மாணவர்கள் ஆங்கில பள்ளிக்கு தோட்டங்களில் இருந்து போக முடிந்தது. இல்லாவிடில் தோட்டத்தில் மரம் குத்தி தான் இருந்திருக்க முடியும்–
அத்துடன் அப்போது L C E ,qualifying test ,M C E ,O S C -போன்ற தேர்வு எழுத வேண்டி இருந்தது. ஆனால் இப்போதைய நிலை என்ன?
வாழ்த்துக்கள்
மே 19 க்கு நாங்கள் ரெடி நீங்க ரெடியா னு கமலஹாசன் /அரவிந்த் / சூர்யா போல கேட்டால் விளங்கும் ..1 கோடிக்கு போட்டி வைக்க யாராச்சும் முன் வருவார்களா ? தம்பிகளா !!!திலிப் @2 ?
வனக்கம். தமிழ்ப்பள்ளிக்காக நான் இதில் கலந்து கொள்வேன். . தமிழ்ப்பல்ளியில் ஆசிரியராக உள்ள நான் இதில் கலந்து கொள்வதால் பெருமிதம் அடைவேன். எங்கள் பள்ளியில் இந்த திட்டத்தை இல்லை. அனுமதிக்க விடவில்லை.
யோவ், என்னை ஏன்யா பணத்துக்காக இருக்கிறீர்கள் ?