மலாக்காவில் புக்கிட் கட்டில் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதியான புக்கிட் பாருவில் 32 “ஆவி வாக்காளர்கள்” ஒரே முகவரிக்குத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள தேர்தல் ஆணையம் இடமளித்தது எப்படி எனத் தேர்தல் சீரமைப்புக்காக போராடிவரும் பெர்சே கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்விவரம் கடந்த ஆண்டு கடைசி காலாண்டில் அரசிதழில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் காணப்படுவதாக பெர்சே அதிகாரி சான் ட்சு சோங் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
“ஆவி வாக்காளர்கள் என்றால், பதிவு செய்யப்பட்ட முகவரியில் குடி இராத வாக்காளர்கள் என்ற பொருளும் உண்டு”, என்றாரவர்.
கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் வேட்பாளர் முகம்மட் காசிம் 48-வாக்குகள் பெரும்பான்மையில்தான் புக்கிட் பாரு சட்டமன்றத் தொகுதியை வென்றார் என்பதையும் சான் சுட்டிக்காட்டினார்.
நல்ல கேள்வி. நம்பிக்கை நாயகனுக்கு எல்லாமே தெரியும். அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது.
எப்படி எப்படினு கேட்டா ? எல்லாம் அப்படி அப்படி தான் …
இதெல்லாம் சாத்தியமே! வங்காள தேசிகள் பலர் இப்படித்தான் வாழ்கிறார்கள்! அவர்களில் பலர் வாக்காளர்கள்! அவர்கள் எப்படியும் வருவார்கள். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார்கள்!