பாலிவுட் கலைஞர்களுக்கு அப்படி என்ன தென்னிந்திய சினிமா மீது வயித்தெறிச்சல்?

baahubali451பாகுபலி-2 இந்திய சினிமாவே கொண்டாடும் வகையில் வசூல் மழை பொழிந்து வருகின்றது. இப்படத்தின் வசூலால் பல திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்படம் முதல் ரூ 1000 கோடியை தாண்ட, ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

தென்னிந்திய சினிமாவே இந்த வெற்றியை கொண்டாட, ஆனால், பாலிவுட் சினிமாவை சார்ந்த பிரபலங்கள் பாகுபலி-2 என்ற படம் வந்ததா? என்ற நிலையில் தான் உள்ளனர்.

உலகம் முழுவதும் மார்க்கெட் இருக்கும் நம்மாலேயே செய்ய முடியாததை இவர்கள் எப்படி செய்தார்கள் என்ற வயித்தெறிச்சல் தான் இதற்கு காரணம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

-cineulagam.com