ரஜினிகாந்த் ஒரு தமிழரே அல்ல…நிச்சயம் தோல்விதான்: சுப்பிரமணிய சுவாமி

subramaniyan_002கொள்கையே இல்லாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

இன்று தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் குறித்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது பழையகதைதான் என்றாலும், நான் அரசியலுக்கு வந்தால் ஊழல்வாதிகளை சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று அதிரடியாக பேசி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிய சாமி கூறியதாவது, ரஜினிகாந்த் ஒரு தமிழரே அல்ல. அவர் கர்நாடகாவில் இருந்து வந்த மராத்தியர்.

ரஜினிகாந்துக்கு எந்த ஒரு கொள்கையுமே இல்லை. தோல்வி நிச்சயம் அவருக்கு தற்போது அரசியல் குறித்த தடுமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

-lankasri.com