ரஜினி தன்னுடைய ரசிகர்களை நீண்ட வருடம் கழித்து அண்மையில் தான் சந்தித்தார். தொடர்ந்து 5 நாட்கள் சந்தித்த இவர் முதல் நாள் மற்றும் கடைசி நாளில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருந்தார். அதில் இருந்து அரசியல்வாதிகள் ரஜினியை பற்றி விமர்சித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சீமான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ரஜினியை பற்றி பேசும்போது, வெளிப்படையாக கபாலி படத்துக்கு அவர் இவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று கூற முடியுமா? எவ்வளவு வரி செலுத்தினார் என்று அவர் கூறுவாரா என பேசியுள்ளார். அவர் தன்னை நேர்மையானவர் போல் காட்டிக் கொள்கிறார்.
எனக்கு தெரிந்த வரை கமல்ஹாசன், மாதவன் போன்றவர்களிடம் கருப்பு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
-lankasri.com
இந்த சீமான் எல்லாம் ஒரு ஆளா? என்ன வென்று சொல்வது?
ரஜினிக்கு இது ஒரு பிரச்சனையே அல்ல. தன்னை நேர்மையாளர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் தன்னை நேர்மையாளர் என்று வெளிக்காட்ட சரியான தருணம். ஒரு நாட்டின் தலைவராக வர விரும்பும் ஒருவர் நேர்மையாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பதில் தவறில்லையே!
ஓ ரசிக்கும் சீமானே…இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை? ரஜினி அரசியலுக்கு வருவதா அல்லது அவர் வாங்கும் சம்பளமும் செலுத்தும் வருமான வரியுமா?
மீண்டு ஒரு சினிமாக்காரனா? சினிமா மூலம் பிரபாலான பிறகு அரசியலிலும் மீதி நாட்களை நடித்தே காலத்தை ஒட்டிவிடலாமோ? மற்ற மாகாணங்களில் சினிமாக்காரனா சினிமா வாய்ப்பு போனதும் அரசியலில் நடிக்க வந்துவிடுவார்கள்? தமிழக மக்களுக்கு சினிமாவில் நடிப்பது போல நிஜ வாழ்விலும் நடக்கும் என்ற நினைப்போ. சினிமாவில் கதையின் முடிவைக்கொண்டு கதை ஓடும், அதற்க்கு தகுந்தாற்போல் நடிகர்களும் நடிப்பார். நாடகத்தில் மன்னர் வேடம் தரித்த நடிகன் நிஜ வாழ்வில் மன்னனாகிவிடுவானா? தமிழ் மக்களே சிந்தியுங்கள். காமராஜர் சினிமாக்காரர் அல்ல. அப்துல் கலாமும் நடிகரல்ல . இந்திய நாட்டு பிரதமர்கள் எவரும் சினிமாக்காரர் அல்ல. தமிழ்நாட்டில் மட்டும் சினிமாக்காரன்தான் அரசியல் தலைவனாக வேண்டுமா? சிந்தியுங்கள். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
எம்,ஜி,ஆர்,ஜெயலலிதாஇருவரும் நடிகர்கள்
என்றாலும் அறிஞர்அண்ணாவின் தலைமை
யில்அரசியலில் தீவிரமாகசெயல்பட்டவர்கள்
கருணாநிதியின் ஊழலைஎதிர்த்து எம்,ஜி,ஆர்
தனிக்கட்சி ஆரம்பித்போது தலைவர்களும்
தமிழகமக்களும் ஏற்றுக்கொண்டார்கள்
ஆனால் நடிகை ஜெயா நடிகர்களேஆட்சிக்கு
வரக்கூடாதுஎன்ற ஒர்நிலையை ஏற்படுத்தி
விட்டார்,ரஜினிஅரசியலுக்கு வருமுன்பட்டாசு
வெடிப்பதுபோல்அனைத்து கட்சிகளும்,பொது
மக்களும் கடுமையாக எதிக்கிறார்கள் ரஜினி
ரசிகர்களைத்தவிர,ரஜினி மோடி விரிக்கும்
வலையில் சிக்கிக்கொள்வார் மீரினால்
ரைடு இதைத்தான் சீமான்சூசகமாக
ஒருபடத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறார்
நேர்மையாக வரி செலுத்தியுள்ளாரா?இதை
படிக்கும்ரஜினிதீவிர பக்தர்கள் என்மேல்
விழுந்து பிராண்டுவார்கள்!
சீமான் தைரியம் இருந்தான் மோதுங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்க உங்களக்கு என்ன உரிமை உள்ளது.
தொடை நடுங்குதா. இன்னொரு சினிமாக்காரன் அரசியலுக்கு வந்துவிட்டான் என்றா?
உங்களிடம் நேர்மை உழைப்பு மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் பொதுசேவைக்கு வரலாம்.
சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது! கடந்த ஐம்பது ஆண்டுகளில் சினிமாக்காரன் தமிழ் நாட்டை மொட்டை அடித்து விட்டான்! அதுவே போதும்! சொல்லிக் கொடுத்த வசனங்களை பேசுவதும் சொல்லிக்கொடுத்த நடிப்பை நடிப்பதைத் தவிர அவர்களால் சுயமாகச் சிந்திப்பது கிடையாது!