பிரபல சின்னத்திரை நடிகையும், செய்தி வாசிப்பாளருமான மோனிகா சமூக வலைதளங்களில் மக்கள் பிரச்னைக்கான என் குரல் பலமா ஒலிச்சுட்டுதான் இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
நடிகை மோனிகா சமீபகாலமாக மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறார். அதை அவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் மோனிகா, ஜெயலலிதா இறந்த காலக்கட்டத்தில் பல குழப்பங்கள், சந்தேகங்கள், பிரச்னைகள் இருந்தது. .இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு, எழுச்சி இயக்கம் என்ற ஓர் இயக்கத்தை ஆரம்பித்தேன்.
அதில் நான் பேசும் எல்லா வீடியோக்களையும் பதிவிட்டேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சினு பார்க்காமல், மக்கள் நலனைச் சிந்திக்காத எல்லா அரசியல் கட்சிகளையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.
உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். நடிக்கிறதோடு நிறுத்திக்கோ. இனி நீ அரசியல் பேசக் கூடாது. மீறி பேசினா நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்னு மிரட்டல்கள் வந்தது. அதேசமயம், நீங்க தொடர்ந்து தைரியமா பேசுங்கனு மக்கள் தரப்பில் ஆதரவும் வந்தது.
யாருமே பேசாம இருப்பதால் தான் அரசியல்வாதிகள் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். நான் தொடந்து பேசிக்கிட்டேதான் இருப்பேன்’னு சொல்லிட்டேன்.
நம்மில் பலரும் நடப்பு பிரச்னைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் குரல் கொடுத்தாலும், அந்தப் பிரச்னையோட மூலக்காரணத்தைப் பத்தி பெரிதாக பேசுவதில்லை.
நான் மூலகாரணங்களைப் பேசுறதோடு, பிரச்னைகள் வந்தால் அதையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கிறேன். பேசும் பிரச்னையின் ஆழத்தையும் மக்களின் கருத்துகளையும் தெரிஞ்சுகிட்டு, அதை எப்படி மக்களுக்குக் கொண்டுபோனால் பயன் தரும்னு யோசித்து தான் வீடியோவா வெளியிடுறேன்.
நான்கு பிரச்னைகள் இல்ல, நாற்பதாயிரம் பிரச்னைகள் வந்தாலும், நாம குரல் கொடுக்காத வரைக்கும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருப்பார்கள்.
17 வருடமாக மக்கள் மத்தியில் எனக்கான அடையாளத்தோடுதான் இருக்கேன். மக்களுக்கு நல்லது நடக்கணும் என்பது மட்டுமே என்னோட எண்ணம். அதேசமயம் நடிப்போடு நிறுத்திக்கோ அரசியல் பேசாத’னு யாரும் சொல்லாதீங்க என்று கூறியுள்ளார்.
-lankasri.com
அரசியல் எல்லா குடிமக்களுக்கும் சொந்தம். அது அவரவர் தொழிலை கொண்டு தீர்மானிப்பதல்ல. ஆனாலும் நடிகர்கள் திரையில் நடிப்பது போல் அரசியலிலும் நடித்துவிட கூடாது. அதாவது மக்களுக்கு நன்மை செய்வேன் என்று கூறி தனது நன்மையை மட்டும் நாடும் நடிப்பாகிவிட கூடாது என்பதுதான் வேண்டுகோள். நடிக்கும்போது சம்பாதித்ததை தனது தேவைக்கு வைத்துக்கொண்டு, அதற்கும் மேலாக தேவைக்குமேல் மக்களை சுரண்டிவிடக்கூடாது. நம்மை சுற்றி பார்ப்போம். எத்தனை அரசியல்வாதிகள் தங்களாலும் அவர்தம் பல சந்ததிகளும் செலவு செய்து முடிக்கமுடியாத அளவுக்கு பலவகையில் பதுக்கி வைத்துள்ளனர். அவர்களிடமுள்ள செல்வத்தை புழக்கத்தில் விட்டால் பலரும் நன்மையடைவர். அவைகளை புழக்கத்தில் விடமுடியாத நிலை. காரணம் அவை யாவும் கள்ளத்தனமாக பெறப்பட்டவை. சமீபத்தில் இந்திய பண புழக்கத்திலிருந்து இரு நோட்டுகளை அரசு நிறுத்தியபோது, அந்த சம்பந்தப்பட்ட நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட மொத்த நோட்டுகளில் முப்பத்து மூன்று விழுக்காட்டு நோட்டுகள் மட்டுமே புழக்கத்திலிருந்ததாக கூறப்பட்டது. ஆக மற்ற 67 விழுக்காட்டு நோட்டுகள் தேவையில்லாமல் போய்விட்டது. எங்கே போனது? சிந்திப்போம் செயல்படுவோம். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக
சினிமாவா இருந்தா என்ன ?
சின்னத்திரையா இருந்தா என்ன ?
கூத்தாடிகள்தானே !
இதுவரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் சினிமாவைப்போல 3 மணி நேரத்திற்கு தகுந்த மாதிரி கூத்தடித்தார்கள்,
இப்பொழுது சின்னத்திரையிலிருந்து அரசியலுக்கு வந்து வருட கணக்கில் கூத்தடிக்க போகிறீர்களா ?
தமிழ்நாட்டு மக்கள் செய்த பாவம்தான் என்னவோ ?
யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவன் ஆந்திராவைப் போல. கர்நாடாகாவைப் போல, கேரளாவைப் போல தமிழ் நாட்டில் ஒரு தமிழனாக இருக்கட்டும். அதுவே தமிழ் நாட்டுத் தமிழனுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்!
இந்த அம்மாமோனிக்காதன்னந்தனியாக
தன் அறிவைவீணடிக்கிறார்,இனம்
இனத்தோடுஒன்றுப்பட்டு குரலெழுப்பினால்
குரலுக்கு வலிமைசேர்க்கும்,நாம்தமிழராக
இணைந்தால்அறிவுபிரகாசிக்கும்!