சென்னை இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் திகதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
அச்சமயத்தில் ஜாதி, அரசியல், இனம், மதம் ஆகிய பலவிதமான சாயங்கள் பூசப்பட்டு நாள்தோறும் பரபரப்பான யூகங்கள் வந்து கொண்டே இருந்தன.
பின்னர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராம்குமார் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதிலிருந்து, உண்மைகுற்றவாளியை தப்பிக்க விட்டது பொலீஸ் என்பது போன்று கருத்துகள் நிலவின.
இதனை உறுதிபடுத்தும் விதமாக தற்போது சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் ஒரு படமே வெளிவரத் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அதில் சுவாதியை கொன்றது நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்பொழுது, அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரை பொலிஸ் தான் கொலை செய்தனர் என்ற தகவல் வெளிவந்தன.
இந்நிலையில், இந்த ட்ரெய்லர் வீடியோவிலும் பொலிஸ் ராம்குமாரின் கழுத்தை அறுப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக இந்த பிரச்சனை குறித்து எந்த செய்தியும் வெளிவராத நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லரால் சுவாதி வழக்கில் இதுவரை வெளிவராத சில உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-manithan.com