சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இது குறித்தும், படம் பற்றியும் பல தகவல்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இதில் ஏற்கனவே மும்பைக்கு சென்று தமிழ் மக்களுக்காக வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரின் கதை என சொல்லப்பட்டுள்ளது.
தற்போது அவரின் மகள் விஜயலட்சுமி பல உண்மைகளை பத்திரிக்கை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதில் நெல்லை, சேலம் பகுதிகளில் இருந்த திரவியம் சிறு வயதிலேயே சகோதரர்களுடன் சென்னை வந்தார். ஆனால் பர்மா போகவேண்டிய இவர் ரயில் மூலம் தவறுதலாக மும்பை வந்து இறங்கிவிட்டார்.
மொழி தெரியாத இடம், கூலி வேலை செய்து வாழ்ந்தார். சாலையோரம் பார்க் பெஞ்ச் தான் இவரின் படுக்கையிடம். அங்கேயே வாழ்ந்து வந்த இவர் 1950களில் டானாக மாறினார். போஸ்டரில் இருக்கும் 1956 தான் அவர் டானாக மாறிய நேரம்.
ஆனால் என் அப்பா திரவியம், இங்கு பிழைக்க வந்த தமிழ் பெண்கள் பாலியல் தொழில் செய்வதை விட வேறு ஏதாவது செய்யலாம் என வெல்லம் உருவாக்கும் தொழில் வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கி கொடுத்தார்.
மேலும் அப்பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தார். இவர் நல்லதையே செய்து வந்ததால் வெளியே பரவலாக தெரியவில்லை. ஆனால் ஹாஜி மஸ்தான் கடத்தல் தொழிலோடு சம்மந்தப்பட்டதால் அவர் பிரபலமானார்.
அப்பா பள்ளிக்கூடம் கட்டிகொடுத்தார். மருத்துவமனைகள் உருவாக்கினார். மேலும் மும்பையில் இவரை கூடுவாலா சேட் என சொன்னால் தான் தெரியும். இவருக்கு குட்டி காமராஜர் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அப்பா, காமராஜரின் ஆதரவாளராக திகழ்ந்தார்.
மேலும் காமராஜருக்கு காலா காந்தி என்ற பெயர் உண்டு. எனவே காலா என்பது இப்படத்திற்கு பொருத்தமான பெயர் என் கூறினார்.
-cineulagam.com