சுவாதி தந்தையின் உருக்கமான கோரிக்கை

swathy ramkumarஎஸ்.டி ரமேஷ் செல்வன் இயக்கத்தில் சுவாதி கொலை வழக்கு என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

கடந்த 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் 24 ஆம் திகதி தமிழ்நாட்டை உலுக்கிய சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் ரமேஷ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், இதனை பார்த்த சுவாதியின் குடுபத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்றும் இந்த திரைப்படத்தை நிறுத்துங்கள் எனவும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

எனது மகள் இறந்த பின்னர் நாங்கள் மிகவும் துக்கத்தில் உள்ளோம், எங்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு அமைதியான வாழ்க்கை தான், எனது மகளின் கொலையை திரைப்படமாக எடுத்து எங்கள் நிம்மதியை கெடுத்துவிடாதீர்கள்.

எங்கள் மகளின் மரணத்தை இன்று வரை எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை, அப்படியிருக்கையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் எங்கள் வேதனையை அதிகரித்துவிட்டது என்று கூறியுள்ளார்.

உண்மையான நிகழ்வுகளை முறையான அனுமதியின்றி திரைப்படமாக தயாரிப்பது சட்டபூர்வமானது அல்ல என்று வழக்கறிஞர் Sudha Ramalingam தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் செல்வன், இந்த படத்தில் சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை. அதே போல் ராம் குமாரையும் தவறாக சித்தரிக்கவில்லை.

சமூகத்துக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலேயே இது எடுக்கப்பட்டுள்ளது. படத்தை இரு குடும்பத்தாருக்கும் போட்டுக் காட்டுவோம். ஏதேனும் தவறுகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினால் அதை சரிசெய்வோம்.

மேலும் படத்தில் வரும் லாபத்தில் சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்துக்கும் கொடுப்போம் என கூறியுள்ளார்.

-lankasri.com