நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ரஜினிகாத் தனது புதிய படமான காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து திரும்பி உள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள். முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழருவி மணியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியைச் சந்தித்தனர்.
நடிகர் ரஜினிகாந்தை நேற்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்து பேசினார்கள். பிரதமரிடம் ரூ.1 கோடி கொடுத்து நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்யும்படி வற்புறுத்தினார்கள்.
இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அர்ஜூன் சம்பத்துடன் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம.இரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர், குருமூர்த்தி உள்ளிட்டோர் ரஜினியைச் சந்தித்தனர்.
ரஜினிகாந்தை சந்தித்த பின் பேட்டி அளிக்கும் எல்லோரும் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என் கூறி வருகிறார்கள். ஆனால் அவரோ நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அரசியல் வேண்டாம் பிளீஸ் என கூறுகிறார்.
ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அரசியல் வேண்டாம் ப்ளீஸ் என கூறினார். மதுரை எம்எல்ஏ சரவணன் கூவத்தூர் பேர வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி, அரசியல் குறித்து பேசவிரும்பவில்லை என கூறினார். அர்ஜுன் சம்பத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றார் அவர்.
-dailythanthi.com
ஒரு முடிவையே உறுதியாக எடுக்க தகுதியில்லாதவன் எல்லாம் தமிழனை ஆழ நினைப்பது ………………………….
அது அவர் குற்றமல்ல! அவர் அரசியலுக்கு வருவேன் என்று இன்னும் சொல்லவில்லையே!
வந்தால் தமிழ்நாட்டில் முதன்மை மொழி தெலுங்கா, கர்நாட்டிக்கா? எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் எங்கள் தமிழகம்.