கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் காயீர் முகமட் யுசொப் அனைத்து மாநில கல்வி இயக்குனர்களுக்கும் இருமொழி கல்வித் திட்டம் (DLP) குறித்து 27.10.2016 தேதியிடப்பட்ட கடிதத்தின் வழியாக அறிவிப்பு செய்திருந்தார். அந்த அறிவிப்போடு இந்தத் திட்டத்தில் இடம் பெற அரசு அனுமதி பெற்றுள்ள சுமார் 486 தொடக்கப்பள்ளிகளின் பட்டியலையும் இணைத்திருந்தார். அந்தப் பட்டியலில் மொத்தம் 47 தமிழ்ப்பள்ளிகள் இடம் பெற்று இருந்தன.
அதாவது, மொத்தமே 47 தமிழ்ப்பள்ளிகளுக்குத்தான் இருமொழித் திட்டம் அமல்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. 2015-இல் எந்தத் தமிழ்ப்பள்ளியுமே அரசு நிர்ணயித்துள்ள அடைவுநிலையில் இல்லாதால் இத்திட்டத்தில் எந்தப் பள்ளியும் இடம் பெறவில்லை.
இருப்பினும், 2016-இல் திடீரென 47 பள்ளிகளுக்கு அடைவு நிலை இல்லாத சூழலில் இந்தத் திட்டம் அமுலாக்கப்பட்டது. இதைக் கடுமையாக ஆட்சேபித்து மே-19 இயக்கத்தினர், பல சமூக இயக்கங்களின் ஆதரவோடு, கடந்த மாதம் ஒரு கண்டனப் போராட்டத்தை புத்ராஜெயாவில் நடத்தி கல்வி அமைச்சர் இந்தத் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் இருந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
நிலமை இவ்வாறு இருக்கையில், அதிர்ச்சியான தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் மே-19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஆர். பாலமுரளி. அதாவது 27.10.2016 பட்டியலில் இடம் பெறாத ஒரு தமிழ்ப்பள்ளியில் பெற்றோர்களின் எதிர்புக்கு மத்தியில் DLP அமல் படுத்தப்பட்டு வருகிறது என்கிறார்.
இது பண்டார் உத்தாமாமாவில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்.
இது சம்பந்தமாக பள்ளியில் தங்கள் குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்த்துள்ள பெற்றோர்கள் புகார் கொடுத்தும் புகார்தாரர்களை அழைத்து விசாரிக்கவோ பதில் கொடுக்கவோ கல்வி அமைச்சும், கமலநாதனின் அலுவலகமும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவ்வாட்டாரத்தை சார்ந்த தமிழ் ஆர்வலர் கணியமுதன் கருத்துரைத்தார்.
இது சார்பாக கல்வி அமைச்சுக்கு புகார் கொடுக்கப்படும். அதோடு சம்பந்தப்பட்ட தலைமையாசியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தப் போவதாக அவர் மேலும் கூறினார்.
தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பு மீது இந்த இருமொழித் திட்டம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இத்திட்டம் தமிழ்ப்பள்ளிக்கு உகந்ததல்ல என்ற நிலையில், ஒரு தலைமையாசிரியர் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு செய்திருந்தால் அதை அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்கிறார் இன்னொரு தமிழ் ஆர்வலர் சிவகுமார்.
தலைமை ஆசிரியர் மற்றும் கமலா அவர்களும் கண்டனத்துக்கு உரியவர்கள் …..
உருளணும் மக்களும் திருந்தி நாதேரி BN க்கு வோட்டு போடாதீங்க டா
தாணு சொன்னாலும் அவன் கொடுக்கிற சம்சு போட்டோளுக்கும் mic ….மவனுங்களின் ஆட்டு கரி சாப்பாடுக்கு நட்டுட்டு போயி மலேஷியா தமிழனுங்க அதிலும் குறிப்பா நம்ம தமிழ் பொம்பளையிங்க பொது அறிவே இல்லாமல் ……வோட்டு போட்டுதுங்க அப்பறம் மரிப்பிடியும் நக்கிட்டு இருக்கணும்
தமிழறிவே இல்லாத கமலநாதனிடம் நாம் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழி மேம்பாடு குறித்து மோதுவது கேவலம்.
ம இ கா தலைவர் சுப்ரமணியம் அவர்களும் டி எல் பி போதிக்கும் 46 பள்ளிகளின் முடிவு வரட்டும் பிறகு பார்ப்போம் என்று தமிழ்க்கல்வி உரிமை பற்றி தெரியாமல் உளறி இருக்கிறார். குட்டிப்பூனை என்ன செய்யும்? காய்ந்துப்போன பூனையின் புட்டியை அரசியல் பால் ஊற்றி சப்பி எடுக்கவேண்டியதுதான் மிச்சம்.
அப்பவே சொன்னேன் மகஜிரை பிரதமருக்கு அனுப்பவேண்டும் என்று ..சரி என்று சொல்லிவிட்டு கல்வி அமைச்சசருக்கு எழுதிய மகஜிர் கல்வி துணை அமைச்சர் ஆபிஸ் பையனிடம் சேர்பித்துவிட்டு இப்போது புது ஒப்பாரி நடக்கிறது.
ஒரு டெலிபோன் உரையாடலில் கமலநாதன் இப்படி கேற்கிறார் ” கல்வி அமைச்சரவுக்குத்தானே தந்தீர்கள் ?” இதன் பொருள் என்ன ? சமூகம் என்னதான் நாயா கத்தனாலும் என்க்கு உரைக்காது அந்த குரைச்சல் பல்லில்லா எனக்கு ஏறாது என்பது போல உள்ளது.
டி எல் பி அமுல் படித்தியுள்ள சுமார் 46 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து ” டி எல் பி நடத்தும் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள் எந்த சட்ட நடவடிக்கை வந்தாலும் சிந்திப்போம்” என்ற துரோகத்தன துணை அமைச்சருக்கு தமிழ் மொழி கல்வி அதன் தொன்மை பற்றிய அறிவுகள் கிடையாது.
தமிழர், தமிழ் மொழி தொன்மை தெரியாத, விளங்காத BN தோழமை காட்சிகள் அரசியல் காட்சிகள் BN னுக்கு கூஜா தூக்குவதால் BN மாண்புமிகுகள் டி எல் பி பாதிப்பு குறித்து கவலைப்படுவதில்லை என்ற அரசியல் அராஜகம் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் இந்த டி எல் பி அடுத்த PRU 14 கில் BN னுக்கு எந்த ஆபத்தை தரும் என்று நம்து பிரதமருக்கு புரியவில்லை என்பதுதான் வக்கர ஆச்சிரியத்தை தருகிறது. யாருமே பிரதமருக்கு எடுத்து சொல்லும் நிலையில் இல்லையா > அல்லது அது கிடக்குது என்று ஜாலியா இருக்கிறார்ரா என்றும் புரியவில்லை.
டி எல் பி யை சீனர்கள் முழுசா எதிர்க்கிறார்கள். மலாய்க்காரர் இயக்கங்கள் எதிர்க்கின்றனர்! இந்தியர்கள் பதுங்கி புடுங்குகிறார்கள் என்பதெல்லாம் பிரதமருக்கு சங்கூதி தனமா தெரிவது வியப்புதான்.
கள்ளத் தனமான தலைமை ஆசாரியரென்று சொல்லிவிட்டிர்கள். இவர்ப் பள்ளி பட்டியலில் இடம் பெறாதப பள்ளி. மேலும் பெற்றோர்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளார். இந்தக் கள்ளத்தனத்தின் செயலால் இவர் ஆசிரியர் தொழிலுக்கே தகுதியற்றவர். ஒரு வகையில் இவர் அரசு விதிமுறைகளை மீறியுள்ளதால் இவர் மேல் கட்ட்டாய ஒழுங்கு நடவடிக்கையெடுக்க அரசை வலியுறுத்த வேண்டும்.