நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ராஜிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்று கூறினார். மேலும் அவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமால் இருப்பதுவே அவருக்கு நல்லது என்று கூறினார்.
மேலும் ரஜினிகாந்த் படிப்பறிவு அற்றவர் என்றும் அரசியலுக்கு வர அவருக்கு தகுதி கிடையாது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த சர்ச்சைக் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு ரஜினிகாந்த் எந்த பதில் கருத்தும் கூறவில்லை. மேலும் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் பொழுதெல்லாம் அரசியலுக்கு வந்தால் தெரிவிக்கின்றேன் என்றே பதில் கூறிவருகிறார்.
இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து ரஜினி ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
-lankasri.com
ஆண்டவன் சொல்லலைஅரசியலுக்குவரலை
தமிழக மீடியாக்கள்அரசியலுக்கு இழுத்து
நாரடிக்காமல் விடமாட்டாரகள்!
ஏனென்றால் திருட்டு கூடடம் நீ ரஜினி எதோ சாக கொஞ்ச நாள் இருக்குது இந்த ரஜினி கூத்தாடி எதோ கொஞ்ச கூத்தடித்து எதோ நீங்கள் ,செய்ய தவறிய சில தேவகைளை செய்ய மக்களுக்கு செய்ய வர ஆசைப்படுகிறான் அதாவது தனது மருமகன் தனுஷ் மூலம் மக்களுக்கு சினிமா காரிகளை கூட்டி கொடுக்கும் தொழில் செய்ய ஆசைப்படுகிறான் ஜொள்ளுவிடும் மக்கள் இந்த சினிமாக்கார நாதேரிகளுக்கு வோட்டு போட்டு கொஞ்சம் சுகம் நடிகைகளை அனுபவித்து பெற்று கொள்ளலாமே . வுடுங்கப்பா இவான் மூலம் கொஞ்ச சுகம்நமக்கு கிடைக்கட்டும்
ரஜனி அடுத்த முதல் அமைச்சராக வருவது மிகவும் இலகு..காரணம் இந்தியாவில் படிக்காத ..பஞ்சம் பிழைக்கும் மக்கள் வாழ்வது தகர தமிழ் நாட்டில் தான் …யாரோ எழுதி கொடுக்கும் வசனத்தை ..மேக் அப் போட்டு வெளிச்சம் முன் ..கமெராவில் சொல்வதை நம்பி விசில் அடிக்கும் கூடம் இருக்கும் வரை ரஜனி அரசியலுக்கு வரலாம் ….அரசியலுக்கு வர படிப்பு எதட்கு?
இதை சொல்லும் ஒருவர் தமிழின துரோகி .தமிழனின் எந்த துயரிலும் இன்றுவரை பங்கு பெறாதவர் .தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க கூடாது என சிங்களவனுக்கு சொல்லி கொடுத்தவர் ,இருவருமே தகுதியற்றவர்கள் .ஒருவருக்கு சொல்ல தகுதி இல்லை .மற்றவருக்கு ஆளத்தகுதி இல்லை
ஐயா pothu tertal அவர்களே– ரஜினி/தனுஷ் பற்றி அப்படி பேசுவது தவறு என்று நான் நினைக்கிறேன். தமிழ் நாட்டில் நடக்கும் நாற்றம் குமட்டுகிறது– ரஜினி ஆட்சிக்கு வந்து என்ன செய்ய முடியும் என்று நான் கூற முடியாது– காரணம் அங்கு எவனையும் நம்ப முடியாது. ஊழல் அங்குள்ள வாழ்க்கை முறை– அங்கு சிங்கையின் லீ குவானைப்போல் யாரும் வருவார்களா என்பது நடக்காது. MGR -அன்டன் பாலசிங்கம் /பிரபாகனுக்கு 3 கோடி கொடுத்தது எப்படி? MGR ரே இப்படி என்றால்……………………..? எனினும் மற்றவர்களை அப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும். நான் ரஜினியின் படங்களை பார்ப்பதை எவ்வளவோ தவிர்த்து விட்டேன்– ஒன்று மட்டும் நடக்கும்– ரஜினி அரசியலுக்கு வந்தால் கட்டாயம் வெற்றி பெறுவது நிச்சயம் காரணம் தமிழ் நாட்டில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் மதிப்பில்லை -தமிழ் உணர்வும் இன உணர்வும் மொழி பற்றும் பேருக்குத்தான் – அட்டைக்கு பால் அபிஷேகம் பண்ணும் ஈனர்களை என்ன என்று சொல்வது? மற்றவர்களை குறை கூறி ஆகப்போவது ஒன்றுமில்லை. நம் முதுகை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும்.
ம்ம்ம்,,,,, நல்லவன் வல்லவன் ஒருவனே தமிழ் நாட்டிற்கு தேவை. இருக்கும் தமிழ் நாட்டு அரசியலில் நல்ல தமிழன் என்று ஒருவரும் அரசியல் வாதி இல்லை. யார் வந்தாலும் காமராஜரை போன்று நேர்மையின் சின்னமாக இருந்து இந்திரா காந்தியை போல் இரும்பு கரம் கொண்டு ஊழல் மற்றும் நாட்டை குட்டிசுவராக்கும் கயவர்களை ஒடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழும் சரி தமிழ்நாடும் சரி மிளிரும். இல்லையேல் புரையோடிய நோயாளியாய் காட்சி தரும்.
சுப்பிரமணிய சாமி நரித்தனமாகப் பேசுகிறார். எப்படியாவது ரஜினியை அரசியலுக்கு கொண்டுவந்து அப்புறம் பா.ஜ.கா. விற்கு இழுக்க வேண்டும் என்பதட்காக இப்படியெல்லாம் பேசுகிறார். அது ரஜினிக்கும் தெரியும்.
படிக்காத மேதை காமராசர் முதலமைச்சர் ஆக வில்லையா ! படிக்காத MGR முதலமைச்சராக வில்லையா ! கருணாநிதி எந்த காலேஜில் படித்தார் ! சினிமா கதை வசனம் தானே ! கொள்ளையடித்த ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்த பின் முதலமைச்சர் ஆக வில்லையா ! இன்று கொள்ளை சொத்துக்களையும் பணத்தையும் கொள்ளை அடித்த சசிகலா முதலமைச்சராக ஆக முயற்சிக்க வில்லையா ! ரஜினி என்றவுடன் ஏன் இந்த வயித்தெரிச்சல் ! இந்த சுப்பிரமணி சுவாமியெல்லாம் ! தரமான வாழ்வை இழந்து பரிதவிக்கும் ஏழை தமிழனின் நாடியை தொட்டு பார்க்க முடியுமா ! வீர வசனம் பேசி மக்களை முட்டாளாக்கும் மேல் ஜாதி காரனை எல்லாம் ஓரம் காட்டினால்தான் நாடு உருப்படும் ! ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னால் ! முதலமைச்சர் ஆகி விடுவார் என்று அர்த்தமா ! எதாவது ஒரு அரசியல் கட்சியின் ஆலோசகர் ஆக கூட இருக்கலாமில்லைய !! தமிழ் , தமிழன் என்று வீர வசனம் பேசி தமிழனை சுரண்டி தின்னும் அரசியல் வாதியை விட , தமிழ் நாட்டில் சம்பாதித்ததை தமிழனுக்கு அர்ப்பணிக்க நினைக்கும் ரஜினி உயர்ந்த மனிதர் .
90 வயது கிழவன் மகாதீர் ,90 வயது கிழவன் கருணாநிதி கண் தெரியாமல் , வாய் உளறலோடு அரசியல் நடத்தும் போது ரஜினி 67 வயதில் அரசியலுக்கு வந்தாள் குற்றமா ! இந்த ஜாதி காரன் தான் அரசியல் நடத்த வேண்டும் என்று சட்டமா ! மலேசியக்காரனும் ,மானம் கேட்ட , சுய புத்தி இல்லாத தமிழ் நாட்டு காரனை போல் சிந்திக்காதீர்கள் !!
நன்றாக கூறினீர் மணியம் அவர்களே. தமிழ்நாட்டுக்கு நல்லவன் வல்லவன் ஒருவன் தலைமையேற்று திருத்தங்களை செய்து தமிழ்நாடு மிளிரவேண்டுமே தவிர இனம் பார்ப்பது தவறு.
தமிழர் நலனுக்காக ஒரு சின்ன கனைப்பு கூட செய்யாத ரஜினிக்கு பலர் வக்காலத்து வாங்குவதும் நல்ல பல அரசியல்வாதிகள் இன்னும் தமிழ் மண்ணில் களமாடிக்கொண்டிருக்கும் இருக்கும் போதே தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறுவது எனக்கு சரியாகப்படவில்லை.
என்ன செய்வது? தமிழனுக்கு சினிமா நடிகனை விட்டால் உண்மையான அரசியல்வாதியை அடையாளம் தெரியாதே! சினிமா நடிகன் தான் அவனுக்கு எல்லாமே! ரஜினி தான் இப்போதைக்கு சினிமாவில் நல்லவனாக நடிக்கிறார்! அது போதுமே நாட்டை ஆள!
ஐயா நாராயணன் அவர்களே சென்னையில் மட்டும் 40 % தெலுங்கர்கள். அதிலும் பணபலமும் அதிகாரத்திலும் இருக்கும் தெலுங்கர்கள் அதிகம்– இவ்வளவுக்கும் திரை உலகமே அவர்களை சார்ந்து இருக்கிறது. இவர்களை எல்லாம் ஓரங்கட்ட வேண்டும் என்று நான் கூறவில்லை– ஆனால் அவர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன நல்லது செய்திருக்கின்றனர்? அதன் வழி அவர்கள் ஏற்றவர்களாக எடுத்துக்கொள்ளலாம். தமிழ் நாட்டில் கைதான கோடீஸ்வர ரெட்டியின் கையில் பல அரசியல் வாதிகள் — இப்படி இருக்கையில் அங்கு என்ன நடக்கிறது என்று நான் கூற தேவை இல்லை.
எம் தாய் தமிழ் அவர்களே, தமிழன் இப்பொழுதுதான் மெல்ல துயில் எழுகிறான். அவன் எந்த வகையிலும் இன உணர்வும் இன பெருமையும் கொண்டுவிடக்கூடாது என்று ஆரியமும் திராவிடமும் வீரியத்துடன் செயல்படுகின்றன. நாமும் விடாமல் இன உணர்வை விதைத்துக் கொண்டே இருப்போம். பலன் வர நாளாகலாம். ஆனால் பலன் நிச்சயம்.
ஐயா naarayanan அவர்களே உங்களின் “நிச்சயம்” நடந்தால் மகிழ்ச்சியே . ஆனால் எத்தனை ஜென்மங்கள் எடுக்கும் என்று காலம் தான் பதில் சொல்லும்.
“எத்தனை ஜென்மங்கள் எடுக்கும்” என்பது பிரச்சனையல்ல. நாம் எடுக்கிறோமா என்பது தான் பிரச்சனை. நாம் எடுத்தால் மற்றவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள்.
நான் எப்போதே எடுத்து விட்டேன். ஆனால் மற்றவர்கள்? மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் எத்தனை பேர்? ஆனால் செம்பருத்திக்கு விருப்பம் தெரிவித்தவர்கள் 7000 கூட தாண்ட வில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?