எவ்வளவு வரி போட்டாலும் அதை மக்கள் தலையில் சுமத்தும் தியேட்டர்காரரகள் ஸ்டிரைக் செய்தது அநியாயம் என்றும் நியாயமாக மக்கள்தான் தியேட்டர் உரிமையாளர்களை எதிர்த்து ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்றும் கண்டித்துள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.
தியேட்டர்காரர்களுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேட்டுள்ள 5 கேள்விகள்:
1. வாகன பார்க்கிங்கிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்க தயாரா?
2. தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருட்களை எம்.ஆர்.பி விலையில் விற்க தயாரா?
3. வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற சட்டத்திற்கு புறம்பான போக்கை மாற்ற தயாரா?
4. தியேட்டர் கவுண்டரில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்க தயாரா?
5. சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கருப்பு பண பரிமாற்றம் செய்ய மாட்டோம் என்று திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்கத்தயாரா?
இந்தக் கேள்விகளுக்கு சினிமாக்காரர்கள் யாராவது பதில் சொல்ல முன்வருவார்களா… குறிப்பாக திரையரங்க உரிமையாளர்களின் பிரதிநிதிகள்?
நல்ல கேள்வி. அப்படியே கொஞ்ச நாளைக்கு தியேட்டர்காரர்களின் வயிரைக் காயப்போட்டால் நல்லது! கோடிக் கோடியாய் பணம் வாங்கும் நடிகனின் படங்களை புறக்கணியுங்கள்!