இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பும் ஆற்றல் படைத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
சினிமாவாக இருந்தாலும், நேரடியாக இருந்தாலும் துணிச்சலுடன் எந்த கருத்தையும் தைரியமாக சொல்லகூடியவர்.
சமீபத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி என்று இவர் சொன்னதற்கு ஆளுங்கட்சிகள் ஓன்று கூடி திட்டித்தீர்த்தன.
ஆதாரத்துடன் பேசு என்று சவால் விட்ட அரசியல்வாதிகளுக்கு அதிரடியாய் பதில் மடலாய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்.

-cineulagam.com


























கமல், உங்களை நான் வரவேற்கிறேன். ஊழலிலேயே உழன்று கொண்டு இன்னும் நான்று கொண்டு சாகாமல் இருக்கும் இவர்கள் வெகு சீக்கிரத்தில் குடும்பத்தோடு கும்பகோணம் போவார்கள்!
கமல் உண்மை இந்தியனாக மாறிவிட்டார் !! சினிமாவில் மட்டும் இல்லை உண்மையாக !!
ஜனநாயாக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது . அதே போல் விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது, அதே நேரத்தில் ஒரு குற்றம் சுமத்தினால் அதை நிரூபிக்கும் கடமையும் உள்ளது ..
இன்று உலக நாயகன் எனப்படும் கமலஹாசன் குற்றம் சுமத்தியுள்ளார் .. அதை நிரூபிக்க கவர்னரிடமோ அல்லது மத்திய அரசிடமோ லஞ்ச ஊழல் துறையிடமோ தகுந்த ஆதாரங்களை வழங்க வேண்டும் ..
இன்று உங்களை ஆளாக்கிய திரைத்துறை குற்றுயிரும் குலையுருமாக உள்ளது ..GST வரி விதிப்பு மட்டும் காரணம் அல்ல , மிக அதிகமான நடிகர் சம்பளம் , அதிகரிக்கும் தியேட்டர் கட்டணம் , பார்க்கிங் , தின்பண்டங்கள் விலை , வெளி வர முடியாத திரைப்படங்கள் என பல ..உங்களை வளர்த்து ஆளாக்கிய வீடு குப்பை மேடாக உள்ளது ..ஊரை சுத்த படுத்த கிளம்பிய நீங்கள் உங்கள் வீட்டை சுத்த படுத்தி வீட்டீர்களா ?