கள்ளத்தனமாக இருமொழித் திட்டத்தைத் திணித்த, தலைமையாசிரியர் தலை உருளுமா? என்ற தலைப்பில் செம்பருத்தி கடந்த 25.6.2017-இல் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. இது சார்பாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பண்டார் உத்தாமாவில் உள்ள எப்பிக்கம் தமிழ்ப்பள்ளியாகும்.
அரசாங்கம் அனுமதிக்காத பள்ளியில் தன்னிச்சையாக அதன் கட்டமைப்பைப் பாதிக்கும் வகையில் அவர் கள்ளத்தனமாக இருமொத் திட்டத்தை அந்தப் பள்ளியில் திணித்தது அம்பலமாகியுள்ளது.
தமிழ்ப்பள்ளியையும் தமிழ்க்கல்வியையும் காப்பாற்ற போராடும் உன்னத தமிழ் பற்றாளர்கள் மத்தியிலும் தமிழ் ஆசிரியர்கள் மத்தியிலும் இவரது போக்கு அருவருப்பை உண்டாக்கியுள்ளது.
தற்போது நடை பெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இது சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் இது சார்பாக கேள்வி எழுப்பினார்.
அதாவது, அரசாங்கம் ஒப்புதல் பெற்ற பள்ளிகளின் பட்டியலில் இந்தப் பள்ளி உள்ளதா, அப்படி இல்லையென்றால் பெற்றோர்களின் ஆட்சேபணைக்கு எதிராக எதனால் இங்கு இருமொழித் திட்டம் அமுலாலக்கப்பட்டு வருகிறது? என்பது கேள்வியாகும்.
25.7.2017 தேதியிட்ட பதிலில், கல்வி அமைச்சர், எப்பிக்கம் தமிழ்ப்பள்ளி அந்தப் பட்டியலில் இல்லை என்றும், அந்தப்பள்ளி அந்த திட்டத்தை 17.3.2017 இல் நிறுத்தி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலமை இவ்வாறு இருக்கையில், கடந்த 25.7.2017-இல் அப்பள்ளிக்கு சென்ற மே 17 இயக்கதினர், பள்ளியின் நிலைப்பட்டை தலைமையாசிரியர் மனோகரனிடம் கேட்டனர். அதற்கு அவர் இருமொழித் திட்டம் பள்ளியில் முதலாம் ஆண்டில் அமுலாக்கத்தில் தொடர்வதாக கூறியுள்ளார். மேலும் முதலாம் ஆண்டு முழுமையாகவே இருமொழித் திட்டத்தின் கீழ் உள்ளதாகவும், அதற்கான அனுமதியை அரசாங்கம் கொடுத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.
இதில் யார் உண்மையை பேசுகிறார்கள் என்ற சிக்கல் உள்ளதாக மே 19 இயக்கத்தினர் வினவுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற பதிலின்படி தலமை ஆசிரியர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாகியுள்ளது. இவர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலுவதின் நோக்கம் கேவலமாக உள்ளதாக தமிழ் ஆர்வாளர் மே 19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் சாடுகிறார்.
தமிழ்ப்பள்ளியின் ஒரு தலைமை ஆசிரியர் இப்படி ஒரு குளருபடியான வகையில் செயல்படுவது ஏற்புடையது அல்ல. அவர் அந்தப் பதவியில் இருந்து விலகுவதுதான் தமிழ்க்கல்விக்கு நல்லது என்கிறார். இது சார்பாக புகார்கள் செய்யப்படும் என்றார்.
நம்மில் எட்டப்பனுக்கா குறைவு?
தமிழ் நாட்டில் திராவிடர்களின் துரோகத்தினால் நாம் பலவற்றை இழந்தோம். அதுவே இங்கும் தொடர்கிறது!
இந்த பொரிக்கி ஆட்டு தோலில் உலவும் நரி. சூது கருவும் அப்புறம் கவவும்