இருமொழித் திட்ட அமுலாக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பை மே19 இயக்கம் இன்று பதிவு செய்தது. சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் நாளடைவில் தமிழ்ப்பள்ளிகளீன் கட்டமைப்பை அழிக்கும் புற்று நோயாக உருவெடுக்கும். எனவே, அதன் அமுலாக்கத்தை முடக்க வேண்டும் என கருத்துரைக்கப் பட்டது.
பிரிக்பீல்ட்ஸ் நியுப் கட்டிடத்தில் இன்று ஒரு நாள் விவாதப்பட்டரையை மே 19 இயக்கம் நடத்தியது. இதில் விரிவுரையாளர்கள், சமூக இயக்கங்களின் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட நிலைகளில் இருந்து சுமார் 60 பேர்கள் கலந்து கொண்டனர்.
“பல மொழிகளில் ஒரு கணிணியை இயக்கினாலும், அதனால் கணிணி மொழியான பைனரியில் மட்டுமே செயல்பட முடியும். தாய்மொழிக் கல்வியும் அப்படித்தான். குறிப்பாக ஆரம்ப கல்வியில் அறிவாற்றலை அதிகரிக்க குழந்தைகளுக்கு புரியும் மொழியைப் பயன்படுதுவதுதான் சிறந்தது”, என யுனெஸ்கோ அறிக்கையை குறிபிட்டு வாதிட்டார் தியாகு லோகநாதன்.
பெற்றோர்கள் கேட்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இரு மொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்கிறோம் என சில தலைமை ஆசிரியர்கள் காரணம் காட்டுகிறார்கள். இது ஒரு மாபெரும் தவறு என்பதை இவர்கள் உணரவில்லை. தார்மீகத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, சட்டப்படியும் இது தவறாகும்.
அரசமைப்பு விதி 152 இன்படி தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பின் மாற்றம் முறையான சட்டம் வழியாகவும் அரசாங்க கொள்கை வழியாகவும்தான் செய்ய இயலும். ஆனால், இந்த இருமொழித் திட்டத்தின் திணிப்பு, அது போன்ற அதிகாரம் அற்ற தலைமை ஆசிரியர் வழி நுழைக்கப் படுகிறது. இது நமது கண்களை நாமே குத்திக்கொள்வது போலாகும் என்கிறார் இதில் உரையாற்றிய தமிழ் இணியன் பஞ்சு.
“எனவே, தமிழ்ப்பள்ளிகளின் நிலைப்பாட்டை குலைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உரிமை அறவே இல்லை. தமிழ்ப் பள்ளியின் கட்டமைப்புக்கு கல்லறை கட்டினோம் என்ற பலிச்சொல் தமிழை நேசிக்கும் தலைமை ஆசிரியர்களுகு வரக்கூடாது”. மேலும், இது போல் செய்யும் தலைமை ஆசிரியர்கள், நமது அடையாளத்தை கட்டிக் காக்கும் தமிழ்ப்பள்ளிகளின் துரோகிகள் என கருதப்படுவர், வரலாற்றில் பதிவு செய்யப்படுவர் ன்என்கிறார் மே 19 இயக்கத்தின் கௌத்தமன் வாமன்.
இப்படிப் பட்டவர்களெல்லாம் தலைமை ஆசிரியர்களில்லை; தரித்திர ஆசரியர்கள். பள்ளிப் பிள்ளைகளின் எதிர்க்காலத்தையேக் கேள்விக் குறியாக்கிவிட்டார்கள்; தலைமை ஆசிரியர் அரசு ஊழியரென்ற முறையில் அரசு அவ்விதிமுறைகளை அரசிடம் அனுமதிக்க கேட்காமலே இவர் மீறியுள்ளாரார்; விதிமுறைகளை மீறியதற்க்காக இவர் மேல் அரசு கட்டொழுங்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்!
தமிழர்களில் எட்டப்பன்களுக்கா பஞ்சம்?