ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 9, 2017.‘
உருவத்தால் சிறியது; இலக்கியத் தாக்கத்தால் பெரியது’ – திருக்குறள்; அதைப்போல மண்ணளவில் சிறியதாக இருந்தாலும் விண்ணளவில் புகழ்க்கொடியைப் பறக்க விட்டுள்ள சிங்கப்பூருக்கு இன்று விடுதலை நாள்!
தமிழ் மொழிக்கு ஆட்சிக் கட்டிலில் இடம் வழங்கியுள்ள சிங்கப்பூர் குடியரசிற்கு உலகத் தமிழர்களின் சார்பில் வாழ்த்துகள்!
வெறும் பாய்மரப் படகுகளை மட்டும் கைக்கொண்டு உலகளாவிய அளவில் ஆட்சி நடத்திய தமிழினம் இன்று, உலகளாவிய அளவில் ஒண்டுக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழினத்தின் தலைநிலமான தமிழ் நாட்டில்கூட இந்த நிலைதான். செம்மொழியான தமிழ் மொழிக்கு நீதி பரிபாலன கட்டமைப்பில் இடமில்லை. தமிழ் நாட்டின் உயர்நீதி மன்றத்தின் பெயர்கூட தமிழில் இல்லை. ஏறக்குறைய எட்டு கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் தமிழருக்கு கேபினட் தகுதியில் அமைச்சர் பதவி இல்லை; அந்த நாட்டில் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் மோடி தலைமையிலான அரசில்தான் தமிழருக்கு இத்தனை அவமானம் நேர்ந்திருக்கிறது.
பி.வி.நரசிம்ம ராவ் என்னும் பார்ப்பன பிரதமர்கூட தமிழருக்கு கேபினட் தகுதியில் அமைச்சர் தகுதி வழங்காவிடினும் நான்கு பேருக்கு ‘துணை’, ‘இணை’ தகுதியில் எடுபிடி பொறுப்பு வழங்கினார். 2019 மார்ச் மாதத்திற்குள் உலக நாடுகள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட நினைக்கும் மோடி, போகும் இடங்களில் எல்லாம் இந்தி மொழி வளர்ச்சிக்கும், உலக வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கும் தளம் அமைத்து வருகிறார்.
ஆனால், தமிழ் மொழிக்கு முடிந்த அளவிற்கு அடியறுக்கும் வேலையை பகிரங்கமாகவே செய்துவருகிறார். தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் அகழாய்வுப் பணிகளுக்கு தடை விதிக்கும் மோடி, செம்மொழி தமிழ் வளர்ச்சி மையத்தையும் மூடுகிறார்.
மலேசியாவிற்கு அடுத்து சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்கள் செம்மாந்த செருக்குடனும் மனமார்ந்த பெருமையுடன் வாழ்வாங்கு வாழ்கின்றனர். இலங்கையுடன் மலேசியா, சிங்கையில் தமிழர்கள் ‘கேபினட்’ அமைச்சர்களாக விளங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு மோடியின் பாதம்தாங்கிகள் இடையூறு ஏற்படுத்த முயல்கின்றனர். இந்தியாவில் அதிகமாகப் பேசப்படும் மொழி இந்தியாம்; அதனால், சிங்கையில் தமிழ் மொழிக்கு வழங்கப்படும் சிறப்பிற்கு மாறாக இந்தி மொழிக்கு அதை அளிக்க வேண்டும் என்று குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப்போல, புது டில்லி முயன்றதற்கு சிங்கை அரசு சுடு கொடுத்துவிட்டது.
ஆசிய மண்டலத்திலேயே நான்காவது பொருளாதார வல்லரசாகத் திகழும் சிங்கைத் திருநாடு விடுதலை பெற்றபோது, அங்கு சீன மொழியினர், மலாய் மொழியினருடன் தமிழ் மொழியினர்தான் கைகோத்தனர். அதனால்தான் தமிழ் மொழிக்கு அங்கு கொலுவீற்றிருக்கும் தகுதி வழங்கப்பட்டுள்ளது என்று மூக்குடைபடுமாறு சிங்கை சார்பில் பதில் சொன்னபிறகுதான், புதுடில்லி சூழ்ச்சிக் கூட்டம் வாலை சுருட்டிக் கொண்டது அண்மையில்.
மலேசியத் திருநாட்டின் தென்கோடி முனையை யொட்டி அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவு நாடான சிங்கப்பூர் ஒரு முக்கிய உலக நிதி மையமாகவும் திகழ்கிறது.
-ஞாயிறு’ நக்கீரன்
அந்தமானில் இதே நிலை.தமிழின் ஆதிக்கத்தை அங்கு குறைத்து விட்டார்கள். அறுபது ஆண்டு உறவைக் கொண்டு நம் மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழை அழிக்க நினைக்கும் மோடியின் அரசிடமிருந்து நம் மொழி யை காப்பது நம் இன ஒற்றுமை ஒன்றால் மட்டுமே முடியும்
தமிழர்களின் ஒற்றுமை உலகம் அறிந்ததுதானே . ஒற்றுமை இல்லை என்றால் இதுதான் கதி
ஞாயிறு நக்கீரன் கீர் கீர் என்று கிழிப்பது அருமை. மலேசியத் தமிழர் தங்களை இது நாள் வரை ‘இந்தியர்’ என்று சொல்லிக் கொண்டு வாழ்ந்ததில் பெரும் பயன் அடைந்தோர் தமிழர் அல்லாதார். தமிழரின் உரிமையைப் பாதுகாக்கின்றோம் என்று கூறி தமிழரை பொருளாதாரத்தில் அடிபாதாளத்திற்கு தள்ளிய பெருமை தானைத் தலைவரையும் அவர் சார்ந்த அரசியல் கட்சியையே சாரும். வாழ்க தானைத் தலைவர் அருவடிகள்.
1. யாரிந்த மோடி? பிரதமரானப் பின்பு கலந்துக் கொண்ட முதல் ஐநா பொதுச் சபை மாநாட்டில் அத்துணை நாட்டுத் தலைவர்கள் கூடியிருந்த சபையில் அவர்ப் பேசியது இந்தியில்தான்; அடுத்ததாக ஐநா சாசனத்தை அவர் வழக்கொழிந்த சமஸ்க்ரித மொழியில் மொழிப் பெயர்த்தது; மூன்றாவதாக இந்தியை ஐநா அலுவல் மொழியாக ஐநா ஏற்றுக் கொள்வதற்கு எடுத்த முயற்சிகள்; இவரொரு இந்தி வெறியர்; இந்திய நாட்டில் இந்திய மக்களுக்கு எண்ணற்றப் பிரச்சனைகள்; குறிப்பாக தமிழகத்தில் தமிழர்கள் அன்றாடம் சந்திக்கின்றப் பிரச்சனைகள் ஏராளம்; இதிலெல்லாம் இவர்க் கவனம் கொள்ளவில்லை; பிரதமராக வருவதற்கு முன் இவர் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தப் போது, ரஜினியிடம் வலியச் சென்று அவர்க் காலைத் தொடாதக் குறைதான். அப்படியானால் பதவிக்காகவும், பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் இவர் எதையும் செய்வாரா? மொத்தத்தில் தமிழர்களை பொறுத்த மட்டில் இவர் ஆபத்தான மாந்தராக தெரிகின்றார்; ஆக மொத்தத்தில் வெளியில் புன்முறுவல்; உள்ளூர எப்படியோ? ஆணடவனுக்குதான் எல்லா உண்மைகளும் வெளிச்சம். பாஜக தமிழகத்தில் வேரூன்றுவது ஏதொவொருவகையில் தமிழர்களுக்கு நல்லதல்ல. தமிழக மக்களின் நிலையே எதிர்க்காலத்தில்,கேள்விக் குறியாகிவிடும்!. இனிமேலாவது தமிழர்கள் இவரைப் புரிந்துக் கொள்வது நன்று; வேண்டாம் தமிழகத்திற்கு பாஜக என்றக் கட்சி; இவர்களைவிட ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி எவ்வளவோ மேல்! இந்து மதத்திலும் தீவிரவாதம் ஏதொவொருவகையில் மறைமுகமாக இருப்பதை பாஜக ஆட்சிக்கு வந்தப் பின்புதான் நன்குத் தெரிந்துக் கொண்டேன்!
தகர தமிழ் நாட்டில் தமிழர்கள் என்றோ மறைந்து விடடார்கள் .இப்பொது இல்லது உண்மை தமிழர்கள் அல்ல …இவர்கள் இன்று எழுதுவது ..பேசுவது ..எல்லாம் தமிங்கிலீஷ் ….YOU TUBE இல் வரும் நிகழ்ச்சிகளை பாருங்கள் ..விளங்க ஆங்கில அகராதி வேண்டும் இன்னும் ௫௦௦ வருடங்களில் இந்த கேவலமான மாநிலத்தில் தமிழும் ..இந்தியும் கலந்த ஒரு மொழி பேசப்படும் …இந்த ஈனர்களால் தான் அன்று தமிழ் ..மலையாளம் ..தெலுங்கு ..கன்னடம் என்று மாறியது ..சாராயத்திற்கும் ..பிரியாணிக்கும் இந்த ஈன பிறவிகள் எதையும் விட்பர்கள் …தமிழை விற்று அரசியல் வியாதிகள் கோடீஸ்வரர்கள் ஆகி விடடார்கள் ..தமிழ் அழிந்து கொண்டு இருக்கிறது இந்த தகர தமிழ் நாட்டில்
500 வருடங்களுக்கு முன்னர் இந்தி என்ற மொழி இருக்கவில்லை இந்த மொழி திணிப்பு குறைந்தது தமிழ் ரத்தம் ஓடும் தகர தமிழ் நாட்டு பிறவிகளை உசுப்புமா ..இல்லாவிடடால் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என வெற்றிலை பெட்டியின் வழியில் தான் செல்ல வேண்டும் மொழி திணிப்பே பல நாடுகள் உருவாக்க காரணம் இன்னும் டெல்லி வாலாக்கள் விளங்கவில்லை ..தகர தமிழக அரசியல் வியாதிகளும் விளங்கி கொள்ளவில்லை
இந்திக்காரனுக்கு இந்தி பற்றாளராக (மோடி) இருப்பதில் என்ன தவறு . தமிழனுக்குதான் அந்த அறிவே இல்லையே …
2. இந்திமொழியை சுமார் 500 ஆண்டுக் காலங்களென்றுச் சொல்வது சற்று மிகுதியாகயிருக்கலாம். இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் குஜராத்தில்தான் முதன் முதலில் குடியேறினார்கள்; நிர்வாக வசதிக்காகவும் மக்களோடுத் தொடர்புக் கொள்ளவும் இந்திய மண்ணைச் சேர்ந்தவொரு மொழியை அவர்கள் அடையாளம் கண்டார்கள்; அந்த இந்தி மொழிக்கு அடையாளம் கொடுத்ததே இந்தியாவையாண்ட அந்த ஆங்கிலேயர்கள்தான். வரலாற்றுப் பூர்வமாக இந்தி மொழியின் காலம் எவ்வளவென்று சொல்ல முடியாவிட்டாலும் அந்த மொழி சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலானமொழியென்று அறிந்துக் கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் 300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வருகைத தந்தார்கள்; அவர்கள் மட்டும் இந்தியாவிற்கு வருகைத தாராமலிருந்தால் இன்று இந்தியாவுமில்லை; இந்தி மொழியுமில்லை; இந்தியாவின் வரலாற்றை மாற்றியெழுதியதே அவர்கள்தான்; இதற்க்கு முன் சுமார் 600 வருடங்கள் இந்தியாவை ஆண்ட முஸ்லீம் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான்.
3. மன்னிக்க வேண்டுகின்றேன்; : “இதற்க்கு முன் சுமார் 600 வருடங்கள் இந்தியாவை ஆண்ட முஸ்லீம் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான்” என்பது உண்மையல்ல. சுமார் 300 வருடங்களென்பதே உண்மை. வரலாற்றுப் பூர்வமாக இந்திய துணைக் கண்டத்தில் தங்களின் மதத்தைப் பரப்புவதற்க்கே வடக்கே அடிக்கடி முஸ்லீம் படையெடுப்புக்கள் இதற்க்கு முன் பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் துவங்கியதும் மறுக்க முடியாத உண்மை.
எத்தனை வருடம் பழையமையான மொழி என்பதா பிரச்சனை, எவ்வளவு தமிழர்கள் மொழிமேல் பற்றாளராக இருக்கிறார்கள் என்பதுதானே நமக்கு பிரச்சனை