இரு மொழித் திட்டத்திற்கு ஆதரவாக கல்வித் துணை அமைச்சர் ப. கமலநாதன் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளதாகவும் அதன் சார்பாக பலத்த கண்டனத்தை மே 19 இயக்கம் எனப்படும் தமிழ் அமைப்புகள் முன்வைத்துள்ளன. கடந்த மே 19 ஆம் தேதி கல்வி அமைச்சின் முன் ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. சுமார் 800 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வி ஆதரவாளர்கள் திரண்டு, கல்வி துணையமைச்சர் கமலநாதனினிடம் ஓர் ஆட்சேப மனுவை வழங்கினர்.
அது சார்பாக பல முறை நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டும், அந்த மனுவிற்கு கல்வி அமைச்சிடம் இருந்தும் கமலநாதனிடம் இருந்தும் இன்னமும் எந்த பதிலும் வரவில்லை என்கிறார் மே 19 இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர், ஆர். பாலமுரளி.
இந்த நிலையில் இரு மொழிப் பாடத் திட்டம் என்பது பெற்றோர் விருப்பம் மற்றும் பள்ளியின் தயார் நிலையைச் சார்ந்தது என்று சொல்லி வந்த கல்வி துணையமைச்சரான கமலநாதன் 09.06.2017 இல் 45 பள்ளிகளை அழைத்து இரு மொழி பாடத்திட்ட அமலாக்க நிர்வாகம் என்ற கருவில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது வருந்தத்தக்கது. பல கண்டன குரல்களுக்கு மத்தியில் அந்த கூட்டத்தை நடத்தியிருப்பது பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்கிறது மே 19 இயக்கம்.
மேலும், மே 19 இயக்கம் தனது பத்திரிக்கைச் செய்தியில், பல பள்ளிகள் ஆங்கில மொழியில் கணித அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு தமிழ் மொழிக்கு மீண்டும் திரும்பி உள்ளதாவும், ஆனால், கமலநாதன் மீண்டும் இருமொழித் திட்டத்தை சிறந்த முறையில் அமலாக்கம் செய்வதை கருவாக கொண்ட இன்னொரு கூட்டத்தை எதிர்வரும் 25.08.2017 அன்று காலை 8.30 மணி முதல் புக்கிட் கியரா என்னும் இடத்தில் நடத்தத் திட்டம் போட்டுள்ளார். இது சார்பான கடிதங்களை பள்ளிகள் பெற்றுள்ளன.
மேலும், நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் இந்த வேளையில் கமலநாதன் இந்த இரு மொழித் திட்டத்தின் மீது காட்டும் அக்கறை தமிழ்க்கல்விக்காக போராடும் ஆர்வலர்களுக்கு பலத்த அதிர்ப்தியை ஏற்படுத்துகிறது. தமிழ்க்கல்வி இருப்பதால்தான் அவருக்கு அந்தப் பதவி என்பதை கமலநாதன் மறந்து விட்டார் என்று மே 19 இயக்கம் சாடுகிறது.
மே 19 இயக்கம் இதுவரை வழங்கியுள்ள இரண்டு மனுக்களுக்குமே பதில் கூறாத கமலநாதனின் போக்கு தமிழ் வழிக் கல்வியின் மீதும் தமிழ்ப்பள்ளிகளின் மீதும் அவர் கொண்டுள்ள பார்வையை கேள்விக்குறியாக்குகிறது. இவரின் போக்கு தமிழ் வழிக் கல்விக்கு ஆபத்தாக அமையும் வகையில் உள்ளது.
கல்வி துணை அமைச்சர் என்ற வகையில் எங்களது மனுவுக்கு அவர் பதில் தர வேண்டும். அதை விடுத்து, இருமொழித் திட்டத்தை ஆர்வத்துடன் தமிழ்ப்பள்ளிகளில் திணிக்க இவருக்கு சமுதாயம் அரசியல் அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பதை இவர் உணர வேண்டும்.
மேலும், தமிழ்ப்பள்ளியின் அடையாளத்தையும் அடிப்படையையும் இந்த இரு மொழித் திட்டம் மாற்றிவிடும் என்பதால், இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ள அனைத்து சீனப்பள்ளிகளைப் போல தமிழ்ப்பள்ளிகளும் நிராகரிக்க வேண்டும். அதோடு கமலநாதன் இரு மொழித் திட்டம் சார்பாக கூட்டும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிக்க வேண்டும் என மே 19 இயக்கம் கேட்டுக்கொள்வதாக அதன் பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
பெரிய சப்பி– சப்பிகள் எப்படி இருப்பார்கள்?
என் சிந்தனைக்கு உட்பட்டது : கல்வி அமைச்சு ஒரு நிலையான ஒரே சூழ்நிலையின் அமைத்திட வேண்டும் , அதாவது இதனைத்தான் பள்ளிகள் கோட்பாடுகளில் கீழ் நடத்திடவேண்டும் , நடத்தவேண்டும் என்பதனை உறுதியாக கூறிவிடவேண்டும் , அதனைவிடுத்து பெற்றோர்கள் விரும்பினால் , ஒரு பள்ளியில் 40 , 50 பெற்றோர்கள் விரும்பினால் , விண்ணப்பம் செய்தால் , அப்பள்ளியில் கணிதம் , அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் பாதிக்கலாம் என இருத்தலை கொல்லியாக நடந்து கொள்ளக்கூடாது . அதேவேளையில் பெற்றோர்களாகிய நாம் நன்கு சிந்தித்து செய்யப்பட வேண்டும் . அவர் சொல்கிறார் , இவர் சொல்கிறார் என தன் கையை உயர்த்தாமல் நன்கு ஆலோசனை செய்து சிந்திக்க வேண்டும் , நம் தமிழ் மொழி பள்ளியினை அழிப்பதற்கான முன் ஏற்பாடுகள் இவை என்பதை நன்கு உணரவேண்டும் . யோசிக்க வழி தெரியாதவர்கள் சச்சரவுகளில் ஈடுபடாமல் தன் பிள்ளைகள் கணிதமும் , அறிவியலும் ஆங்கிலத்தில்தான் பயிலவேண்டும் என நிலையாக இருப்பவர்கள் தாராளமாக தேசிய ஆராம்ப மலாய் பள்ளியில் தன் பிள்ளைகளை இணைத்து அவர்களை மேன்நிலைக்கு உயர்த்தலாம் , யாரும் அதனை தடுக்க வில்லை . தமிழர்களாகிய நாம் நம் மொழியினை வளர்ப்போம் , ஒன்றிணைவோம் வாரீர் . நாம் வாழும்வரை நம் தமிழ்மொளையினை வளர்ப்போம் , வாழவைப்போம் .
தலைமை ஆசியர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கக்கூடாது.கமலநாதன் ஒரு துரோகி.
இரு மொழித் திட்டத்திற்கு ஆதரவாக கல்வித் துணை அமைச்சர் ப. கமலநாதன் செயல்பட்டு வருவதாலும், கடந்த மே 19 ஆம் தேதி கல்வி அமைச்சின் முன் ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணி நடத்தி சுமார் 800 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வி ஆதரவாளர்கள் திரண்டு, கல்வி துணையமைச்சர் கமலநாதனினிடம் வழங்கிய ஆட்சேப மனுவுக்கு இதுவரை பதில் சொல்லாததாலும், நாட்டின் தமிழினத்துக்கு எதிராக செயல்படுவதாலும் அவர் உடனடியாக அரசு பதவியிலிருந்து விலக வேண்டும் மேலும் ம.இ.கா பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்றும் மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ள அதேவேளை அவர் எப்போது பதவி விலகுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இங்கு எந்த நிலையான சூழ்நிலையையும் அமைக்க மாட்டார்கள்–குழம்பிய குட்டையில் தானே சுலபமாக மீன் பிடிக்க முடியும்?
கமலநாதன் ரொம்ப பிஸி. அடுத்த தேர்தல் சீட் தேட அலைகிறார். மக்கள் கேள்விக்கு பதில் வழங்க நேரமில்லை. கமல் கவலை வேண்டாம் . அடுத்த தேர்தலோடு நீங்கள் வீட்டில் பதவி இல்லாமல் அமைதியாக இருக்கலாம். மக்கள் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.