நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்று கோவையில் ஒரு திருமண விழாவில் அரசியலில் குதிப்பது பற்றி ஆவேசமாக பேசியுள்ளார்.
இது திருமண விழா அல்ல, ஆரம்ப விழா. ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். இதனை இப்படியே விட்டு வைக்க கூடாது. தமிழக அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை. இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள்.
“ட்விட்டர் மூலமாக நான் ஏற்கனவே அரசியலில் குதித்துவிட்டேன். கோரிக்கையை
வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கோட்டைக்கு செல்வதை போன்று செல்வேன். கோட்டைக்கு செல்வேன் என கூறியதற்காக வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-cineulagam.com