சென்னை: தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்தியா டுடே டிவி சேனலுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது.
மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.
கருப்பு தான் என் நிறம்
என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது.
மக்களை நோக்கி பயணம்
அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன்.
மாற்றத்திற்கு தலை வணங்குகிறேன்
உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
மக்கள் ஒத்துழைப்பு
இதே போன்று டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் கமல் கூறியதாவது: மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.
மக்களுக்கு உதவும் கருவி
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தலைவரே நமக்கெதற்கு முள் கிரீடம்,அதற்குத்தான் தமிழன் ஒருவன் பிறந்து வந்துட்டதானே,அவனுக்கு என் ஆதரவு என்று சொல்லிவிட்டு நம் வேலையை பார்க்கப் போகலாமேம்,
உங்களால் முடியுமா முடியாதா என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் உங்களது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். உங்களிடம் சரக்கு உள்ளது என நம்புகிறேன்!
கூவத்தில் விழப்போகிறேன் என்று நீரே விரும்பும்போது நாம் சொல்ல என்ன இருக்கிறது….
எனக்கு நம்பிக்கை தான் ஆனாலும் டெல்லி கேஜ்ரிவாலுடன் அணி சேர்வது அவ்வளவு நம்பிக்கை இல்லை காரணம் கேஜ்ரிவாலும் ஒரு ஊழல்வாதி. உண்மையில் “இந்தியன்” போல் கறார் நடவடிக்கை இருந்தால் வரவேற்கலாம்.
இவன் முதல்வராகி என்ன கிழிக்க போறானாம்
நீங்களும் அரசியல் வாதி பட்டியலில் சேர்ந்திடுவீர்கள் என
நடுக்கமாக இருக்கின்றது
நடிகை கவுதமி கமலகண்ணனின்
வீட்டைவிட்டுபோனதற்கு ஊடக
பேட்டியில் சொன்ன காரணம் என்மகளின்
பாதுகாப்பை கருதியே வெளியே
வந்ததாக பேட்டிஅளித்தார் புரிந்தால் சரி!
கமல் சார், நீங்கள் ஓரளவுக்கு நல்லவர் இந்த அரசியல் வாதிகளை கணக்கிடும் பொழுது ! மேலும் நீங்கள் அரசியலுக்கு வருவது , ADMK அண்ட் DMK ஓட்டுக்களை உடைக்க உதவும் ! நீங்கள் என்னவாக வருவீர்கள் என்பது எனக்கு தேவையில்லாதது ! ஆனால் நாம் தமிழர் கட்சி மிளிர வேண்டும் என்றால் , உங்களை போன்ற ஒரு எதிர் கட்சி தலைவர் இருந்தால் தேவலாம் ! எனவே உங்கள் வருகை எப்படி பார்த்தாலும் மக்களுக்கு நம்மையே ! எனவே வருக வருக வருகவே ..
சந்தர்ப்ப வாதி …..தன் சினிமா முகவரியை வைத்து கொண்டு அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறான் ….இவனையும் நம்புவதற்கு நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா ?…..அன்புமணி அல்லது சீமான் போதும் ..வேண்டாம் பார்ப்பன குள்ளநரிகள்
அலை ஓசை, அவர் சொன்ன காரணத்தைத் திரித்துக் கூறுகிறீர்கள். திருமண ஆக வேண்டிய ஒரு பெண் வீட்டிலிருக்கிறார். நாளை திருமண நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார், கமல்ஹாசன் வீட்டில் இருந்தால், பிரச்சனைகளைக் கிளப்பலாம். அதனைத் தவிர்ப்பதற்கு, ஓர் தாய் என்னும் முறையில், கௌதமி தனது மகளின் எதிர்காலத்தை நினைத்து, அவர் பிரிந்து போயிருக்கலாம். அவர் பாதுகாப்பு கருதி என்பது இது தான். நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன்.
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி
என்பது தமிழகம் வாங்கி வந்த வரமோ ?
சீமானின் அரசியல் பேச்சால் நான்
வியந்து போனேன்ஜிவாஜி ராவு கய்க்வாட்,
தமிழகத்துக்கு சரியான ஆள்சீமான்
இசைப்புயல் ARரகுமான்,சீமான் வரட்டும்
மன்சூர் அலி,சமானுக்கு மேடைஏரி ஆதரவு
கரம் தயாரிப்பாளர் சேரன்!