இருமொழி திட்டத்தை தவறாக கையாண்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு இடையே, இந்தத் திட்டம் தமிழ்க்கல்வியின் கட்டமைப்பையே உடைத்துவிடும் வகையில் உள்ளது என்பதை உணரவைக்க ஒரு நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் தியாகு.
மருந்தியல் பட்டதாரியான தியாகு, வயது 27, சொகூர்பாருவிலிருந்து புத்ராசெயா வரையில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் 17 நாட்களில் 350 கிலோமீட்டர் தூரத்தை கடக்க முற்படும் அதே வேளையில் ஆங்காங்கே நடைபெறும் கவன ஈர்ப்பு கூட்டங்களில் தனது குறிக்கோளை விளக்கவுள்ளார்.
தனது இந்த நீண்ட நடை ப்பயணத்திற்காக கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி எடுத்து வருவதாக கூறும் தியாகு, “சிலர் ஆதரவு தறுகின்றனர், சிலர் இது ஒரு தேவையற்ற நடவடிக்கை என்கின்றனர். எனக்கு இது ஒரு வேள்விப் பயணம். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று கத்தியபோதெல்லாம் இரவில் தூக்கம் வராது. அதன் தாக்கம்தான் இந்த முடிவுக்கு காரணம்”, என்று புன்னகையுடன் கூறினார் தியாகு.
இந்த ஆண்டு அரைகுறையாக சுமார் நாற்பது தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி எனப்படும் இருமொழி திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் எடுத்த முடிவு முறையான வழியில் எடுக்கப்படவில்லை. ஆனால் தமிழ்பள்ளிகளில் திணிக்கப்பட்டன என்று இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மே19 இயக்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த மே19 தேதி, தமிழ்க்கல்வி ஆதரவாளர்களுடன் இருமொழி திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் இருந்து அகற்ற கோரி, ஒரு மாபெரும் கண்டன ஊர்வலத்தை மே19 இயக்கத்தினர் நடத்தினர். அதில் முக்கிய பங்குவகித்தவர்களில் ஒருவர்தான் தியாகு.
இவருக்கு ஆதரவாக இன்னும் சிலர் நடக்க முன்வந்துள்ளனர் என்று தியாகுவுடனிருந்து செயல்படும் கௌத்தம், தமிழிணியன், சிவா மற்றும் பாலமுரளி ஆகியோர் கூறுகின்றனர்.
இந்த நடைப்பயணம் 11.12.2017-இல் புத்ராசெயாவில் முடிவுரும் என எதிர்பார்கப்படுகிறது.
இதன் வழி சிலருக்கு தமிழ் விழிப்புணர்வு ஏற்படும் என்றால் சிறிதளவாவது பயன்– உடலை வறுத்து தமிழுக்காக செய்யும் இதை பாராட்டாமல் இருக்க கூடாது. எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
உங்களின் தியாகம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்! வாழ்த்துக்கள். கவனமாக நடங்க!
தம்பி தியாகுவின் தனியாத தமிழ்த் தாகம் பாராட்டுக்குறியது. டி.எல்.பி
திட்டத்தில் இருபக்கம் உள்ளன என்பது என் கருத்து. சிலரின் ஆதரவும் பலரின் எதிர்புக்களிடையே 40 பள்ளிகளில் இது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் புதிய சவால் பற்றி தம்பி தியாகுவுக்கு தெரியுமா என்று தெரியாது. அதுதான் கல்வி அமைச்சு புதிதாக அமுல் படத்தவிருக்கும் பன்மை வகுப்புத் திட்டம். இது குறைந்த மாணவ்ர்களுடைய தமிழ்ப் பள்ளிகளை அதிகமாக பாதிக்கவிருக்கிறது.ஒரு ஆசிரியரின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புக்கள் ஒப்படைக்கப்படும் என்பதுதான் இதன் சாராம்சாரம்.இதன் வழி குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்படும். கற்றல் கற்பித்தல் கேள்விக்குறியாகும்……..??? என்ன செய்யப்போகிறோம் ? யோசியுங்கள்
முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் .இந்த தியாகம் நம்மவரிடே யே மொழி உணர்வையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி அதன் வழி சமூகம் ஒன்றுபட்டு செயல்பட்டால் நமது சமூகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் .