நடிகர் சிம்பு ஒரு திறமையான கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வருவதில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.
இந்நிலையில் அவர் நடித்த AAA படத்தின் தயாரிப்பாளர் தற்போது பேட்டிகொடுத்துள்ளாராம். இதில் அவர் மிருதன் படத்திற்கு பின் சிம்பு எனக்கு போன் கால் செய்தார். நான் முன்பு போல் கிடையாது.
மாறிவிட்டேன். ஐந்தாயிரம் ரூபாய்க்காக கஷ்டப்படுகிறேன். என்னை வைத்து படம் எடுங்கள். நான் ஒத்துழைக்கிறேன் என கூறினார். சரி என்றால் படத்தை சொன்னபடி ஆரம்பிக்கவில்லை.
வீட்டிற்கு சென்றால் பல மணிநேரம் காக்க வைக்கிறார். அவரால் எனக்கு ரூ 18 கோடி நஷ்டம். கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், அவர் திருந்துவதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.
-cineulagam.com

























