சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.சுயேட்சை வேட்பாளராக விஷால் களமிறங்குகிறார். இதன் மூலம் விஷால் அதிகாரப்பூர்வமாக அரசியலில் குதித்துவிட்டார்.
ஜெ. மறைவால் காலியான ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி, இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன் களமிறங்குகிறார்.
திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். இதுதவிர சுயேட்சையாக தினகரன் போட்டியிட உள்ளார். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திங்கள்கிழமை வேட்புமனு
இதனிடையே, திடீர் வரவாக தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
மக்களுக்கு என்ன செய்தார்
அரசியலில் குதித்துள்ள, விஷால் இதுவரை தமிழக மக்களுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை சந்தித்து பேசியது மட்டுமே அரசியலில் குதிக்க தகுதியுடையதாகிவிடுமா என்று கேட்கிறார்கள் மக்கள்.
அரசியல், சினிமா அஸ்தமனம்
விஷாலுக்கு அரசியல் வாழ்வு மட்டுமல்ல, திரைப்பட வாழ்வும் அஸ்தமிக்கப்போகிறது என்று கூறியுள்ளார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. எம்ஜிஆர், ஜெயலலிதா போல திரையுலகில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்று அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும்– ஏன் பலர் அரசியலில் தனக்கு தகுதி உரிமை இருப்பது போல் எதிர்ப்பவனுக்கும் தகுதி உரிமை இருக்கும் என்று எண்ணுவதில்லை? மட்டம் தட்டியே காலத்தை ஓட்ட எண்ணுகின்றனர்? மக்கள் மாக்கள் ஆக இருக்கும் வரை ஒன்றும் ஒழுங்காக நடக்காது.