அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு நினைவூட்டல்,
ஆசிரியர்களும் ஒரு குழந்தைக்குப் பெற்றோராக இருக்கிறார், நம் குழந்தைகளை அவர்கள் வடிவமைப்பதை எளிதாக்க அவர்களுக்கு உதவுங்கள்.
மனதில் நிறுத்துங்கள்,
- நம் பிள்ளை மிகவும் நல்லவன் அல்ல
வீட்டில் நல்லவனாக தெரியும் நம் பிள்ளை, வெளியில் குறும்புக்காரனாக இருக்கலாம். ஆக, அவன் ஆசிரியரை எதிர்த்துப் பேசலாம், தன் நண்பனை அடிக்கலாம், நாம் எதிர்பாராதப் பலவற்றைச் செய்யலாம்.
- வகுப்பில் நம் பிள்ளை மட்டும் இல்லை
வீட்டில் நமக்கு, அதிகப்பட்சம் 6 அல்லது 7 பிள்ளைகள் இருக்கலாம். இவர்களில் நாம் எல்லோர் மீதும் கவனம் செலுத்த முடிவதில்லை. பிள்ளைகள் கொஞ்சம் அதிகம் பேசினால், அமைதியாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் நாம் சொல்கிறோம். 40 இரட்டையர்கள் இருப்பதாக கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், அதுபோலதான் ஆசிரியர் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் போது அனுபவிக்கிறார்.
- நம் பிள்ளை நம்மை ஏமாற்றலாம்
நம் குழந்தைகளின் கதைகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் நம்மை ஏமாற்றலாம். அவர்களின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கும் வாய்ப்புண்டு என்பதை நினைவில் நிறுத்துங்கள். விசாரிக்காமல், சட்டென குற்றம் சுமத்தாதீர்கள், உண்மை தெரியவரும்போது நாம் தலைகுனிய வேண்டி வரலாம்.
- நம் பிள்ளை திட்டு வாங்க தகுதியானவர்தான்
நம் பிள்ளை தேவதை அல்ல, மிகச் சிறந்தவனும் அல்ல, நிறைய தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளவன்தான். பள்ளியிலும் வீட்டிலும் அவன் செய்கை மாறுபட்டிருக்கலாம், வகுப்பில் அவன் நடவடிக்கை எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருக்கலாம். ஆசிரியர் அவனைத் திட்டுகிறார் என்றால், அவனைச் சரிபடுத்துகிறார் என்று அர்த்தம்
- நாம் அவர்களை எதற்காக பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று சிந்தியுங்கள்.
குறை சொல்லக்கூடாத அளவுக்கு அவன் உயர்ந்தவனா? கற்பிக்க முடியாத அளவுக்கு அவன் முரடனாக, ரவுடியாக மாறவா?
- அவன் கற்பிக்கப்படுகிறான், நாம் விரும்பும் வழியிலோ அல்லது பிடிக்காத முறையிலோ.
வேறு ஒருவர் போதிக்கும் முறையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மற்றவர்கள் நம் வழியைப் பின்பற்ற நாம் எதிர்பார்க்க முடியாது, நமது முறை சரியானது என்றும் சொல்லமுடியாது.
- பிள்ளைக்குத் தேவையான அனைத்து அறிவுகளையும் நம்மால் கொடுக்க முடியாது.
நமக்கு ஆசிரியர்கள் தேவை. நாம் வேதியியலாளர்களாக இருக்கலாம், ஆனால் கணிதம், புவியியல், உயிரியல் மற்றும் பல நமக்குத் தெரியாது. ஆசிரியர்கள் நம் குழந்தைகளுக்கு தங்கள் அறிவை அர்ப்பணிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம், ஆக அவர்களுக்கு மரியாதை கொடுப்போம்.
- பணம் அனைத்தும் அல்ல
நாம் பணக்காரனாக இருக்கலாம், ஆனால் பணம் நம் குழந்தைகளை முழுமையான மனிதனாக்க முடியாது. பணம் நம் பிள்ளையின் ஒழுக்கத்தை உருவாக்க முடியாது. நம் பிள்ளை கல்வி கற்று, உருவாக்கப்பட்டால்தான், சிறந்த மனிதனாக உருவாக முடியும்.
- நாம் அதைத் தனியாக செய்ய முடியாது.
சமூகத்துடன் வாழ்வதற்கு நம் குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். வன்முறை நிறைந்த உலகத்தை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகில் எப்படி உயிர்வாழ்வது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முதல்படிதான் பள்ளிக்கூடம். இந்த உலகத்தை அவர்கள் பார்க்க நமக்கு உதவுபவர்கள்தான் ஆசிரியர்கள். ஆக, ஆசிரியர்கள் நமக்கு உதவ, அவர்களுக்கு இடம் கொடுங்கள்.
- இவ்வுலகில் மிகச் சரியான மனிதர் நாம் அல்ல.
ஆசிரியர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், அவர்களின் போதிக்கும் திறன், நாம் அதனுடன் உண்மையில் போட்டியிட முடியாது. நாம் நம் பிள்ளைகள் ஆறு, ஏழு பேருக்கு போதித்து இருப்போம். ஆனால் அவர்கள், அவர்களின் ஆறு, ஏழு பிள்ளைகளோடு, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிறர் பிள்ளைகளுக்கும் போதிக்கின்றனர், தங்கள் சொந்தப் பிள்ளைகள் போல.
- ஆசிரியர்களிடம் ஆணவம் காட்டாதீர்கள். குர்ஆனில் ஆசிரியர்களின் தரம் உயர்வானது என்று அல்லாஹ் கூறியுள்ளார்.
அவர்கள் சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றவில்லை, ஆயிரக்கணக்கான மக்களுக்கு நன்மை தரும் அறிவை வழங்குவதன் மூலம் அவர்கள் தொண்டு செய்கின்றனர்.
- ஆசிரியர்கள் மகிழ்ச்சி கொள்ளாமல், நம் குழந்தைகள் அறிவைப் பெற முடியாது.
நம் பிள்ளையின் மனதில் இதைப் பதியுங்கள், தேர்வில் 11A எடுத்துவிட்டு, ஆசிரியரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொன்டால், அதில் புண்ணியமில்லை, அது அவருடைய வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும் என்பதில் நிச்சயமல்ல. ‘A’ குறைவாக இருந்தால் பரவாயில்லை, நடத்தையில் குறைவில்லாமல் பார்த்துகொள்வோம். அறிவைப் பெறுவோம், வெற்றி பல வழிகளில் வரும்.
- பெற்றோர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டுமென ஆசிரியர்கள் எப்போதும் நம் பிள்ளைகளுக்கு நினைவூட்டுகிறார்கள்.
ஆசிரியர்கள் நம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூற, பெற்றோர்கள் எப்பொழுதும் முக்கிய உணர்வுகளாக இருக்கிறார்கள். நாம் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? ஒரே ஒரு காரணம்தான், நம் பிள்ளைகளின் ஆசிரியர்களைவிட, நாம் சிறந்தவர்கள் என நினைக்கிறோம்.
பொறுமையாக இருங்கள்.
அறிவு என்பது ‘A’ எண்ணிக்கையில் அல்ல.
மாறாக, உலக வாழ்விலும் மறுவுலகிலும் நம் குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டியாக என்ன கிடைக்கிறது என்பதுதான்.
ஆதாரம் :- தகாஃபூல்
மாதா பிதா குரு தெய்வம் என்பது தமிழர் பண்பாடு. அதனையும் போற்றுவோம்.