நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளிவந்து வெற்றிநடை போட்டுவரும் படம் வேலைக்காரன். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேட்டி எடுத்தார் பிரபல செய்தி ஆசிரியர்.
இந்த சினிமா உலகை சுற்றி நடக்கும் பல பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல் நடந்தது. குறிப்பாக நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதை பற்றி நெனைக்கிறீர்களா என்ற கேள்விக்கு சிவா ” யார் மேல வியாபாரம் இருக்கோ அவங்களே சுற்றி தான் சினிமாவின் முக்கியமான வியாபாரம் இருக்கிறது, அவர்கள் படங்கள் சினிமா உலகில் பணப்புழக்கத்தின் முக்கியமான பங்காக பார்க்கப்படுகிறது.
இதை வைத்து தான் சின்ன சின்ன படங்களின் வியாபாரமும் அடங்கும். ஆனால் நான் என்ன சொல்ல வரேன் என்றால் ஏன் தயாரிப்பாளர்கள் வட்டி விகிதம் குறைக்க சொல்ல முன்வரவில்லை. அதையும் மீறி படம் நஷ்டம் அடைந்தால் பல நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஈடு செய்து தருகிறார்கள், அதை பற்றிய தகவல் வெளியே வருவதில்லை என்பது தான் உண்மை என கூறினார்.
-cineulagam.com