-கி. சீலதாஸ், ஜனவரி 9, 2018.
சினிமா நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் பிரவேசத்தைப் பிரகடனப்படுத்தி விட்டார். அவரது அரசியல் பிரவேசம் தமிழ் நாட்டு எல்லையோடு நின்று ஒரு மாநில கட்சியாகத் திகழுமா அல்லது அகில இந்திய அரசியலில் முழுமூச்சாக ஈடுபாடு கொண்ட கட்சியாகத் திகழுமா என்பது தெரியவில்லை.
சினிமா நடிகர்கள் அரசியலில் புகுந்து வெளுத்துக்கட்டுவது ஒன்றும் புதிதல்லவே. அதே சமயத்தில், அரசியலில் புகுந்த எல்லா நடிகர்களும் புகழின் உச்சிக்குப் போனதாக வரலாறு கிடையாது. தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் எம்.ஜி. இராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைச் செழுமையாக்கிக் கொண்டார். இவர் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தார் என்றப் பேச்சும் உண்டு. திமுகவில் இவருக்குத் தனிச்சிறப்பு இருந்தது. அண்ணாதுரையின் மரணத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் தகுதியும், அண்ணாதுரையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரா.நெடுஞ்செழியன் ஒதுக்கப்பட்டு மு.கருணாநிதி தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். இந்த சூழ்நிலைக்கு முக்கியமான பங்கை நல்கியவர் நடிகர் இராமச்சந்திரன், இவரோடு திமுகவில் இருந்தவர்களில் எஸ். எஸ். இராஜேந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிவாஜி கணேசன் திமுகழகத்தில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவரால் அரசியலில் பெரும் மாற்றத்தைக் காணமுடியவில்லை. எஸ்.எஸ்.ஆர் சுமாராக அரசியல் வாழ்க்கையை நடத்திச் முடித்துவிட்டு சென்றார்.
கருணாநிதியோடு ஏற்பட்ட கருத்துப் பிணக்கானது இராமச்சந்திரனை புதுக் கட்சியைக் காண உசுப்பியது. அதுவே அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தமது கட்சியின் கொள்கை அண்ணாவின் கொள்கை என்றார். அரசியலில் அவர் கண்ட வெற்றி பிரமாண்டமானது. இராமச்சந்திரனுக்கு சிலை அமைத்து கும்பிடும் அளவுக்கு மனநிலை கொண்ட மக்களிடம் அவரின் செல்வாக்கு வலுப்பெற்றிருந்தது. தமிழக அரசியல் நடிகர்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை உணர்த்தி வலுப்படுத்தியது, இராமச்சந்திரனின் மரணத்திற்குப் பிறகு நடிகை ஜெயலலிதா அண்ணா திராவிட இயக்கத்தின் பொறுப்பு, அதோடு சேர்ந்து வந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் அந்தஸ்து யாவும் தமிழக அரசியலில் சினிமா நடிகர்களின் வசீகர ஈடுபாடு அளப்பரிது என்ற நிலை உறுதியாயிற்று. சுருக்கமாகச் சொன்னால் தமிழகத்தை ஆளும் அதிகாரத்தை தமிழ் மக்கள் நடிகர்களிடம் ஒப்படைத்துவிட்டார்களா என்ற சந்தேகம் மேலிடுகிறது. இது போதாது என்றால் நடிகர் விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் வியப்பை அளிக்காதது மட்டுமட்டுமல்ல, நடிகர்களை விட்டால் தமிழக அரசியலுக்கு விமோசனம் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது என்பதும் ஒரு கருத்து.
இப்பொழுது, ரஜினிகாந்த் தமது அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
ஜனநாயகம் படுமோசமான நிலையில் இருக்கிறது. பிற மாநிலங்களில் நம்மை (தமிழ்நாட்டை) எள்ளிநகையாடுகிறார்கள். ஜனநாயகத்தின் பேரில் அரசியல்வாதிகள் நம்மை, நம் சொந்த நாட்டிலே சூரையாடுகிறார்கள். அடிமட்டத்தில் இருந்து மாற்றத்தைக் காணவேண்டும். மன்னர்களும், ஆட்சியாளர்களும் பிறநாடுகளைச் சூரையாடினர். இன்றையக் காலகட்டத்தில் ஆட்சிபுரிபவர்கள் சொந்த நாட்டையே சுரண்டுகிறார்கள். உண்மை, உழைப்பு, உயர்வு (முன்னேற்றம்) தமது இயக்கத்தின் தாரக மந்திரங்களாக இருக்கும். இந்த கொள்கைகள் புதியன அல்ல.
தமிழ் நாட்டு அரசியல் இந்தியாவில் மட்டும் கேளிக்கூத்தாக மாறிவிடவில்லை. உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஊழல் என்பது உலகெங்கும் பரவி அழிவை வளர்க்கும் தரத்தைக் கொண்டிருக்கிறது. ஊழலை ஒழிக்க முற்பட்டால் அந்த நல்ல காரியத்தில் ஈடுபடுவோரை ஒழிப்பதில் ஊழல் கலாச்சாரத்தில் ஊறிப்போனவர்களின் தீவிர கவனம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல. ஜனநாயகம் பாழான நிலையில் இருப்பதாகக் கூறுவது நியாயமாக இருக்கலாம். அதுபோலவே, எங்கெல்லாம் பணஅரசியல், குடும்ப அரசியல், அதிகார வெறி காணப்படுகிறதோ அங்கெல்லாம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது, ஊழலை ஒழிக்கமுடியாது, குடும்ப அரசியல், வாரிசு அரசியல் போன்ற ஜனநாயகத்தை அழிக்கவல்ல புல்லுருவிகளை அழிக்க இயலாது. மக்கள் மனம் மாறவேண்டும். ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படும் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.
இதை எல்லாம் நினைக்கும்போது நடிகர்கள் அரசியலைப் பயன்படுத்தி தலைவர்களானவர்களால் நாடு செழிக்காது, அரசியலில் நாகரிகம் வளராது. ஏன் தெரியுமா? மக்கள் சினிமாவில் வரும் மாய நிலையை நம்பி மோசம் போவதால், அதிகாரத்தில் இருப்பவர்களை நம்புவதால், அதிகார துஷ்பிரயோகத்தை உணராததால் மக்கள் ஏமாறுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். இதற்குத் துணையாக இருப்பவர்கள் நடிகர்கள். அவர்களின் நடிக்கும் திறமை மாறுபடும் தரத்தைக் கொண்டது. சில நடிகர்கள் நாணயமிக்கவர்களாக நடிப்பதால் அவர்கள் வாழ்க்கையிலும் அந்த நாணயம் காணப்படும் என்பது வெகுளித்தனம்.
தமிழ் நாட்டில் நிகழ்வது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் பாதிக்கும். பிரபல தமிழ்ச் சினிமா நடிகர்களோடு தொடர்பு, நட்பு என்று கூறி இங்குள்ள அரசியல்வாதிகள் இந்திய, தமிழ் வாக்காளர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். கவனமாக இருப்பது நல்லது. சிந்தித்து செயல்பட இந்தியர்கள் – தமிழர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும்.
Tamil Nadu (????) politics depend by liquor…buriyani ..and cash.Rs.20
PS: sorry unable to move to Tamil letters
இக்கட்டுரையைப் படைத்த கட்டுரையாளருக்கு நன்றி.
தமிழ் நாடு என்று மட்டுமல்லாமால் இந்தியா முழுமையுமே சினிமாக்காரர் அரசியலில் நுளைந்து கூத்தடிப்பது புதியதல்ல.
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்னும் மனப்போக்கிற்கு வந்து விட்டனர் தமிழ் நாட்டு மக்கள்.
ஜனநாயகமென்னும் பூட்டுக்கு ஓட்டு சாவியாக உள்ளதை தமிழ் நாட்டவர் மறந்து பல காலமாகி விட்டது. ஆகையால் அங்கே பணநாயகமென்பதே அப்பூட்டைத் திறக்கும் சாவி என்பதையறிந்து அரசியல்வாதிகளும் கருப்புப் பணத்தை தேர்தல் காலத்தில் வாரி இறைக்கின்றனர். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகமென்று வெறுமனே பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவின் தேர்தல் ஆணையம் கண் முன்னே நடக்கும் தேர்தல் திருகு தாளங்களைக் கண்டும் காணாதது போல் தேர்தலை வழி நடத்துகின்றது.
படித்தோரும் பாமரரும் பொங்கல் விழா முதல் தீபாவளி விழா வரைக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி பவனாகக் காட்சியளிக்கின்றனர். அப்புறம் அவர் முன்னேறுவது எப்படி? ஆகையால் தமிழ் நாட்டைப் பற்றி நாம் அதிகமாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
#பிரபல தமிழ்ச் சினிமா நடிகர்களோடு தொடர்பு, நட்பு என்று கூறி இங்குள்ள அரசியல்வாதிகள் இந்திய, தமிழ் வாக்காளர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். கவனமாக இருப்பது நல்லது.#
கட்டுரையாளரின் இக்கருத்து வரவேற்கத்தக்கது. மலேசியாவிலும் சினிமா கலாச்சாரம் புகுந்து நம்மை வீணே பொழுது போக்கும் மக்களாக்கியது ஒரு காலம். அதே நிலையில் இன்றும் தமிழர் இருப்பார் என்று இக்கால பிரதமர் மனப்பால் குடித்து சினிமாக்காரருடன் ‘போஸ்’ குடுத்து ஓட்டு வாங்க நினத்தால் ‘டோஸ்’ தான் கிடைக்கும்.
நடந்து முடிந்த ‘நட்சத்திர கலை விழா’ தமிழ் நாட்டு சினிமாக்காரர்களுக்கு ஒரு படிப்பினையாக இந்நாட்டு இந்தியர் பாடம் கற்பித்தது வரவேற்கத் தக்கது. இதற்கு நாம் தமிழர் அன்பர்களுக்கும் அவர்களோடு சேர்ந்து இந்தியரிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பிற இயக்கங்களுக்கும் நன்றி கூறுவோம்.
ஐம்பது கால ஆட்சியில் தமிழன் இழந்தவைகள் ஏராளம். அதில் நமது மொழியும் ஒன்று. சாதியை ஒழிப்போம் என்று சொல்லி சாதியை வளர்த்து விட்டு வயிற்றை வளர்த்தவர்கள் இந்த திராவிடத் திருடர்கள். தமிழர்களுக்குப் பெருத்த தலைக்குனிவை ஏற்படுத்தியவர்கள். இனி இவர்களை எதிர்க்க ஒன்று சேர்வோம்.
ரஜினி தமிழன் இல்லை, இந்த ஒரு தகுதி போதும் தமிழ் நாட்டை ஆள்வதற்கு…டிடிவி தினகரன் என்ற திருடனெக்கே பணம் வாங்கி கொண்டு வோட் போட்ட இந்த முட்டாள் மக்கள், ரஜினிக்கு வோட் போட மாட்டார்களா??????????????
சினிமாகாரர்களால் தமிழர்களுக்கு தலைகுனிவு என்றால் , உங்களால் என்ன பெருமை ? யாரையாவது குறை சொல்ல வேண்டும் ! உடனே நீங்கள் மக்கள் திலகன் ஆகிவிடுவீர்கள் ? சினிமா காரனான MGR , இலங்கையில் தமிழர்களின் தன்மானம் காக்க எதிர்த்து அடிப்பதுதான் ஒரே வழி என்று நினைத்த பொழுது , மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 32 லட்சம் இந்திய ரூபாயில் பணம் தந்ததாக அண்டன் பாலசிங்கத்தின் வாழ்க்கை வரலாட்ரில் குறிப்பிட்டுளார் ! இப்படி சினிமா பின்னணியில் வந்த RONALD REGAN , 40 தாவது அமெரிக்க ஜனாதிபதி. NASA வின் விண்வெளி ஆராய்ச்சிக்கு கொட்டி கொடுத்து அறிவியலை வளர்த்தவர் ! USSR ருடனானா பனி போரை முடிவுக்கு கொண்டு வந்தவர் ! NUCLEAR ஆராய்ச்சியை 3 மடங்காக குறைத்து , உலகத்தில் சிறிய நாடுகளின் பயத்தை போக்கியவர் . எனவே சினிமாகாரர்களால் தமிழர்களுக்கு தலை குனிவு என்பது ஒரு தனி பட்ட மனிதனின் கருத்து ! அதை அவரே வைத்துக்கொள்ளட்டும் !
இங்கே கட்டுரையாளர் குறிப்பிட்டது:
#நடிகர்கள் அரசியலைப் பயன்படுத்தி தலைவர்களானவர்களால் நாடு செழிக்காது, அரசியலில் நாகரிகம் வளராது. ஏன் தெரியுமா? மக்கள் சினிமாவில் வரும் மாய நிலையை நம்பி மோசம் போவதால், அதிகாரத்தில் இருப்பவர்களை நம்புவதால், அதிகார துஷ்பிரயோகத்தை உணராததால் மக்கள் ஏமாறுகிறார்கள்.#
எம்.ஜி.ஆர். இலங்கை வாழ் தமிழருக்கு உதவினார் என்றால் அதற்கு காரணம் அவர்தம் தகப்பனார் கோபால மேனனுக்கும் இலங்கை மண்னுக்கும் இருந்த தொடர்பினால் செய்ததாகும். இப்படி பல தனிநபர் உதவிகளை அவர் செய்துள்ளார் என்பது அவர்தம் தொண்டர்கள் சொல்லி நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் அரசியல் தலைவர் என்ற முறையில் தனக்குப் பின் அ.தி.மு.க. – வை வழி நடத்த தகுதியான ஒரு தலைவரை அவர் விட்டுச் செல்லவில்லை. அதன் காரணமாகவே மீண்டும் ஒரு நடிகை தலைவியாக வந்து கொள்ளையடித்தார்.
அரசியல் தலைவன் என்ப்போன் தன் நிலையை மட்டும் பார்த்துக் கொண்டு போவோர் அல்ல மாறாக மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கும் வழி காட்ட வேண்டியவராக இருக்க வேண்டும். அந்த வகையில் எம்.ஜி. ஆரும் தோற்றார்.
அதுபோலவே ஜெயலலிதாவும் தோற்றார். கருணாநிதியும் தோற்றார். இவ்வளவு நடந்தும் இன்னுமா சினிமா அரசியல் தலைவர் மீது இவ்வளவு பற்று?
ரொனால்ட் ரேகன் தனது சினிமா கவர்ச்சியைக் கொண்டு அரசியலில் வெற்றி பெறவில்லை. அமெரிக்கர்கள் சினிமாவைப் பார்த்து தலைவரைத் தேர்ந்துதெடுக்கும் முட்டாள்கள் அல்ல.
TTV தினகரனிடம் 70 கோடிக்கு RK NAGARAI அடகு வைப்பதுதான் சினிமா காரர்களை வரவிடாமல் செய்வதா ? நாம் தமிழர் கட்சி மூளை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களையும் தேர்ந்தெடுக்க வில்லையே !
ஆர்.கே. நகர் தேர்தலில் நடந்ததென்னவென்று அறியாமல் பேசுவது எலி வாலுக்கும் யானை வாலுக்கும் முடிச்சுப் போடுவதாக உள்ளது.
ஆர்.கே நகர் தொகுதி நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் நிறைந்த பகுதி. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பணம் அவசியம். இது இடைத் தேர்தல் என்பதால் அத்தொகுதியின் வெற்றி தோல்வி அரசாங்கத்தை நிர்ணயிக்கப் போவதில்லை என்பதை அத்தொகுதி மக்களும் அறிவார்.
அதே வேளையில் அ.தி.மு.க-வின் உட்பூசலும், தி.மு.க-வின் அரசியல் சித்தாட்டமும் தினகரனை பெரும்பான்மையில் வெற்றி கொள்ள வைத்தது.
தேர்தலுக்கு முதல் நாளன்றே அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணி களத்திற்கு தலைமேயேற்றியிருந்த அமைச்சர் ஜெயகுமார் தொகுதியை விட்டு வெளியேறி விட்டார். அவர் பின் வெளியூர் அ.தி.மு.க. தொண்டர்களும் வெளியேறி விட்டனர். அப்புறம் எப்படி அ.தி.மு.க அணி தேர்தல் நாளன்று சிறந்து பணியாற்ற முடியும்? இது மதுசூதனன் எடப்பாடியிடம் கேட்ட கேள்வி எடப்பாடி – பண்ணீர்செல்வம் கூட்டணி வாயளவில்தான் உள்ளது. உள்ளதின் அளவில் ஒன்று சேரவில்லை.
தி.மு.க அதன் பங்கிற்கு, அ.தி.மு.-வை உடைக்க வேண்டுமென்றால் தினகரன் வெற்றிபெற வேண்டுமென்பதை அறிந்து இருந்தது. முதிர்ந்த அரசியல் அனுபவம் பெற்ற வை. கோ. இதைக்கூட ஸ்டாலினுக்குச் சொல்லி கொடுக்க மாட்டாரா? அதன் காரணமாக தி.மு.க மாநில தலைவர்கள் அதிகமாக பங்கேற்கவில்லை. ஸ்டாலினே கடைசி மூன்று நாட்களில் தேர்தல் பிரசாரத்தில் முழுமையாகக் கலந்து கொண்டார். அதனால் தி.மு.க-விற்கு வழக்கமாக கிடைத்துக் கொண்டிருக்கும் வாக்குகளும் பெற முடியாமல் போனதின் காரணம் தி.மு.க-வினரில் ஒரு பகுதியினர் தினகரனுக்கு ஓட்டு போட்டு வெற்றி கொள்ள வைத்தது. அடுத்து வரும் தேசிய பொதுத் தேர்தலை முன் வைத்து தி.மு.க செய்த அரசியல் சித்தாட்டாம் என்பதை புரிந்து கொண்டால் தமிழ் நாட்டு அரசியல் நடப்பு விளங்கும்.
அண்மையில் இங்கு ‘அரங்கேறி’ நடந்து முடிந்த தமிழக நட்த்திர கலை விழாவுக்கு சென்றிருந்தவர்கள் சொற்ப எண்ணிக்கையிலான மலேசியத் தமிழர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த அதேவேளை அந்த நிகழ்ழ்ச்சியை புறக்கணித்து தமிழன் மானத்தைக் காத்த மானமுள்ள தமிழர்கள் இங்கே நிறையவே இருக்கிறோம் என்பதை அறிந்து பெருமை அடைகிறேன்.
தீடீரென்று மக்கள் மாறிவிட மாட்டார்கள்! கொஞ்சம் நாள் பிடிக்கும். இப்போது தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீக்கிரம் புத்தி தெளியும்!
Hats off to Malaysian Thamilar .. They have taught an unforgettable lesson to these Cinema beggers …
இதை போன்ற நிகழ்வுகளில் மக்களை குறை கூறுவதில் எந்த பயனும் கிடையாது ! தமிழ் நாட்டு நடிகர்கள் என்ன தானாக இங்கு வந்து நிகழ்ச்சியை நடத்தி பணம் பண்ண பார்த்தார்களா ! அங்கிருந்து வரும் நடிகர்களுக்கு புக்கிட் ஜலீல் தெரியுமா ! நமது நாட்டில் உள்ள ஏற்பாட்டாளர்கள் தானே இந்த விழாவின் முக்கியமாணவர்களாக இருந்திருக்க வேண்டும் ! அரசியல் தலைவனும் இதில் சம்பந்த பட்டு இருக்கிரன்தானே ! வரும் தேர்தலுக்கு ஆள் பிடிக்க அரசாங்கம் கொடுத்த மானியத்தை இந்த வகையில் தமிழ் நாட்டு ( டமில் ) சினிமா நடிகைகளை (குட்டிகளை ) வரவழைத்து கும்மாளம் போடா செய்ய படும் ஏற்பாடுகள் ! நடிகர் சங்க நிதி ! கட்டட நிதி என்பதெல்லாம் இங்கு உள்ள நமது தமிழ் மக்களின் மண்டையில் மிளகாய் அரைப்பது ! குட்டிகளை கூட்டி கொடுக்க அரசியல் கட்சியில் சில மாமாக்கள் இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை ! இங்கு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் இங்கு வந்து நடிகர்கள் இங்கு உள்ள குட்டிகளோடும் ! நடிகைகள் டத்தோ ! டான்ஸ்ரீ களோடும் கும்மாளம் போட்டு பணம் பார்க்கத்தான் இந்த ஏற்பாடுகளெல்லாம் ! ரூபாய் நோட்டை பார்த்து சலித்தவர்களுக்கு ! RM வேண்டாமா ! அங்கு கும்மாளம் போட்டால் மறு நாளே அம்பலமாகி விடும் ! மலேஷியா சும்மா போலே ! சிலாதாஸ் 60 பதுகள் 70 பதுகள் சினிமா உலகிலிருந்து இன்னும் வெளியில் வர வில்லையா ! எனது அருமை நண்பர்களே ! தினகரனும் ! திராவிடனும் ! நடிகனும் ! நடிகையும் ! அங்கு பண அரசியலோ !மானம் கேட்ட அரசியல் நடத்தினால் நமக்கு என்ன ஐயா ! இங்கு நமக்கு ஆயிரத்து எட்டு பிரச்னை ! வரும் தேர்தலில் ம .இ .கா . என்ற ஒன்று இல்லாமல் ஒழிந்து போகும் ! தமிழ் மந்திரி எவனும் இருக்க மாட்டான் ! மூன்றாவது பெரிய இனமாக இருக்கும் நாம் ! பங்களா வுக்கு அடுத்து நான்காவது இனமாக ஆகிவிடுஓம் ! அதேர்ஸ் ( லைன் லைன் ) என்று ஆகி விட்டாலும் ஆச்சரியம் இல்லை !
உண்மையைச் சொன்னால் இவர்கள் வந்தது பொதுத் தேர்தலில் ம.இ.கா. வை காப்பாற்ற! இங்குள்ள மக்குகள் நினைத்தது ரஜினியும் கமலும் வந்தாலும் இவர்களைத் தூக்கி நிறுத்தி விடுவார்கள் என்று! இப்போது அனைத்தும் எதிர்மறையாகி விட்டது! இது…இது…இதுதான் நமக்கு வேண்டும்!!
stop supporting any Indian film stars and arasiyal viyaathikal