இளையராஜாவுக்கு பத்ம விபூஷன்: தமிழகத்தின் மேலும் நால்வருக்கு பத்ம விருதுகள்

இந்தியாவின் இரண்டாவது முக்கிய சிவில் விருதான பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தமிழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசுவாமிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த 98 வயது யோகா ஆசிரியர் வி. நாகம்மாள், நாட்டுப்புறப் பாடகர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், சென்னை கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய ராமுலஸ் விட்டேகர், பொறியாளர் ராஜகோபாலன் வாசுதேவன் பத்மஸ்ரீ விருதினை பெறுகிறார்கள்.

இந்தியா முழுவதற்கும் மொத்தம் மூன்று பத்மவிபூஷண் விருதுகளையும், ஒன்பது பத்மபூஷண் விருதுகளையும், 73 பத்மஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்திருப்பதைப் பற்றி கேட்டபோது, இது தமிழகத்துக்கே கிடைத்த விருது என்று இளையராஜா குறிப்பிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. -BBC_Tamil