வெண்மதி: அக்கா, உன் பையன் கட்டைவிரல் சப்புற பழக்கத்தை எப்படி விட்டான்?
வான்மதி: அது அப்படி ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல… இடுப்புல நிக்காத தொள தொள கால் சட்டையைப் போட்டு விட்டேன்….அவ்வளவுதான்.. ..; அதுனால அவன் பட்ட பாடு எனக்குதானேத் தெரியும்! அந்த கால்சட்டை நழுவாம இருக்க, அப்பப்ப இரண்டு கையாலையும் பிடிச்சு பிடிச்சே விட்டுக் கொண்டு இருந்தவன், காலப் போக்குல கட்டைவிரல் சப்பும் பழக்கத்தை மறந்துட்டான்.
இது எப்படின்னா.. நாம்கூட, விலைவாசி, வேலைவாய்ப்புப் பிரச்சினை, கல்விக் கூடத்துல இடப் பிரச்சினை, ஏழ்மை, ஏற்றத்தாழ்வு, பெட்ரோல் விலை உயர்வு எல்லாத்தையும் மறக்க தமிழ்ப்பள்ளிக்கு மானியம், ஆலயத்துக்கு மானியம் என்று நாள் தவறாம செய்திய படிக்கும்படி செய்யுறாங்கள்ள; அது போலத்தான்!
என்னன்னா, இப்பொழுது தேர்தல் காலம் என்பதால, அது என்ன பொன்னு, மறந்து போச்சு.. ஆங்க்.. வந்துருச்சி புள்ள மனசுல ‘அசிம்’ திட்டம்…
வெண்மதி: அது என்னாக்கா ‘அசிம்’ திட்டம்…
வான்மதி: அதுதான் புள்ள, அமானா சகாம் 1 மலேசியத் திட்டம், அப்புறம், இந்தியர்களுக்கு கட்டுப்படி வீட்டுடைமைத் திட்டம் என்றெல்லாம் அடிக்கடி செய்தி சொல்றாங்க; செய்தி போடுறாங்க.. இல்லையா?
இதெல்லாம் ஏன்னா..? இப்படி தொள தொள சட்டையை மாட்டி விட்டுட்டா… மக்கள் அனைத்தையும் மறந்து அதப் பிடிச்சுக்கிட்டே அலைவாங்க இல்லையா? அதுக்காகத்தான்.
– மாசற்றான்.
சரியான செருப்படி….
இரண்டு பெண்கள் பேசுவதை லாவகமாக கதை சொல்லி இருப்பது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்று. (கட்டைவிரல் சப்புற பழக்கத்தை எப்படி விட்டான்) ஆம் அன்று இருந்த… அதாவது துன் சம்பந்தன் இருந்த காலத்தில் என்று தொடங்கி இருக்கலாம். காரணம் சுதந்திரம் அடைந்த பிறகு தமிழர்கள் நாம் திக்கு தெரியாத இருந்த நேரத்தில் (கட்டைவிரல் சப்புற நேரம்) நம்மை கை பிடித்து சிறுக சிறுக பத்து வெள்ளி சேமியுங்கள் என்று சொல்லி அதற்கு ஏற்ப அவரை நம்பிய மக்கள் கொடுத்த தொகைதான் இன்று தேசிய கூட்டுறவு சங்கம். இன்று அதன் பெயரில் கோலாலம்பூரில் மிக பெரிய அழகான ஒரு கட்டிடம் இருக்கிறது. அடுத்து, மாணிக்கவாசகம் அவர் காலத்தில் மா.இ.கா கட்டிடத்தை கட்டி முதல் அரசியல் கட்சி கட்டிடம் என அந்த கட்டிடம் பேர் எடுத்து கொடுதது. இன்னும் இந்த இரண்டு தலைவர்களை பற்றி நிறைய சொல்லலாம். அது இக் கட்டுரை படிப்பவர்களுக்கு நன்கு தெரியும் என நினைக்கிறேன். அடுத்து வந்த தலைவர், தாய் கட்சி தலைவர் (தெரியாதவர் யாரும் இருக்க முடியாது) நிறைய செய்தார் யாரும் மறுக்க முடியாது உண்மை. அதுவும் இங்கே சொல்ல வேண்டாம் என்று விடுகிறேன். இப்போ இருக்கும் தாய் கட்சி தலைவர் என்ன பல திட்டங்கள் நமக்காக திட்டம் வைத்து இருக்கிறார். இது கட்டைவிரல் சப்புற பழக்கம்தான் நினைவுக்கு வருகிறது நமக்கு. நாம் இப்போ நிறைய எதிர்பார்ப்பது இந்த தாய் கட்சி என்ன செய்ய போகிறது நமக்காக. துன் சாமிவேலு மிகவும் திறமையானவர் நல்ல பேச்சாளர் துணிவுடன் பேச கூடியவர். அதுவும், அவரை போல் இல்லாமல் (இருக்காமல்) மக்கள் என் தோழன் அவனுக்காக நான் எனக்காக மக்கள் என்று இருப்பவர் தான் நாம் எதிர்பார்ப்பது. எனக்கு தெரிந்தவரை தாய் கட்சியில் ஒருவர் துன் சாமிவேலுவுக்கு சமமான ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் திரு. சரவணன், ஏனோ தெரியவில்லை சில சமயங்களில் வேண்டாத பிரச்சனைகளில் மாட்டி கொள்கிறார். இல்லை என்றால் அவருக்கு தாய் கட்சியில் தலைவர் பொறுப்புக்கு வந்து சேவைகள் செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது. அதுவும் அந்த தாய் கட்சி என்று சொல்லும் தலைவரோ அல்லது எதிர் கட்சி தலைவரோ யாராக இருந்தாலும் சரி, இன்று ஒரு சுத்தமான தலைவர் ஒருவர் வரவேண்டும் நமக்கு இப்போது. ‘அசிம்’ திட்டம்’ ஆம், இது ஒரு புரியாத திட்டம், காரணம் அமானா சகாம் 1 திட்டம் இதற்கு முதலிடு செய்ய நமக்கு நிச்சயம் பணம் வேண்டும். அந்த பணம் தாய் கட்சி நமக்காக ஒரு தொகையை முன் பணமாக கொடுத்து முதலிடு செய்து பிறகு மாதந்தோறும் தாய் கட்சியில் நம்மை செலுத்தும் மாறு சொல்லலாம். பிரதமர் அவர்கள் நமக்காக கொண்டு வரும் பல நல்ல திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த தாய் கட்சி தலைவர்கள் ஒரு ரூம் போட்டு யோசித்தாள் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தலைவர்கள் நமக்காக பிரதமர் அவர்களிடம் கேட்டால் நிச்சயம் உதவி செய்வார். (இப்படி தொள தொள சட்டையை மாட்டி விட்டுட்டா… மக்கள் அனைத்தையும் மறந்து அதப் பிடிச்சுக்கிட்டே அலைவாங்க இல்லையா? அதுக்காகத்தான். என்று கட்டுரையாளர் தன் கருத்தை முன் வைக்கிறார்) அப்படிதான் தலைவர்களும் நம்புகிறார்கள். அது மிக பெரிய தவறு என உணர வேண்டும். இன்று மிக பெரிய தகவல் மையம் மூலமாக நொடிக்கு நொடி நீங்கள் (தலைவர்கள்) செய்யும் சேவைகள் பேசும் பேச்சுக்கள் மக்களிடம் சென்று விடுகின்றன. கவனமாகக் இருந்து நல்லதை செய்தால் வெற்றி நிச்சயம். அது எதிர்க்கட்சியோ, அல்லது ஆளும்கட்சியோ. நமக்கு தேவையான ஒரு துய்மையான தலைவர்கள் இன்று. நடக்குமா….ம்ம்ம் பார்ப்போம்..எதுவரை என்று. நன்றி
ஜி மோகன், மிகவும் பொருமையாக எழுதி இருப்பது வரவேற்க தக்கது. இருப்பினும் தாய் கட்சி என்று தாங்கள் கூறும் தேசிய முன்னணி, புறையோடி கிடக்குது. அதை மாற்றுவதுதான் நல்லது. 60 ஆண்டுகள் ஒரே கட்சியின் கீழ் நாம் இருப்பது, நம்மை வைத்து அவர்கள் கொள்ளை அடிக்க தான். சனநாயகம் என்ரால் என்ன வென்று மக்கள் உணர வேண்டும். என்வே இந்த மஇகா, அம்னோ, எம் சி ஏ போன்றவை கொஞ்ச காலம் எதிர் கட்சிகளாக இருக்க வேண்டும்.
குறிவிக்கும் கூடு உண்டு ! நமக்கு ஒரு வீடு இல்லை ! என்று ,தோட்டத்தில் கூலிகளாக வாழ்ந்த இந்த ஏழை இந்திய சமுதாயத்திற்கு ! அன்றைய பொருளாதார சூழ்நிலையில் ! நம் கையே நமக்கு உதவி என்று தன் சொந்த சொத்தை விற்று ! பத்து வெள்ளி ! மாதம்,மாதம் பத்து வெள்ளி என்ற தாரக மந்திரம் பாடி ! ( மேடைகளிலும் இது பாடலாகவும் ! நாடகமாகவும் ! அரங்கேறியது ) இன்று தலை நகரில் ! தமிழன் தலை நிமிர விஸ்மா துன் சம்பந்தன் என்ற தமிழ் வானை முத்தமிட்டு உயர்ந்து நிற்கிறது ! தோற்றுநர் மறைந்தும் வந்தவுடன் லாபம் என்று சுருட்டி கொண்டு மறைந்து போகாமல் ! இன்றும் இந்த இந்திய சமுதாயத்திற்க்காக சங்கத்தை கட்டி காத்து !பல வழிகளில் ! குறிப்பாக பல வீடமைப்பு திட்டங்களிலும் ! இலக்கிய நிகழ்யுகளிலும் ! சமுதாயத்திற்கு தொன் ராட்ரி வரும் டான்ஸ்ரீ சோமா அவர்களையும் ! போட்ரி புகழ வேண்டும் ! சங்கத்தின் வீடமைப்பு வளர்ச்சியை காண வேண்டுமெனில் !சங்கத்தின் இரண்டாவது தோட்டமான ரிஞ்சிங்தோட்டம் ! நாட்டின் வரை படத்தில் தன் பெயரை பதித்து கொண்டு ஆயிரக்கணக்கான நமது இந்தியர்களுக்கு வீட்டுரிமையை வழங்கி பண்டார் ரிஞ்சிங் துரித வளர்ச்சி அடைந்து வருகிறது !