ஒட்டுமொத்த உலகத்தமிழர்களையும் உலுக்கிய சம்பவம் தமீழழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை. குறிப்பாக அவரது மகன் பாலச்சந்திரனையும், பாடகி இசைப்பிரியாவையும் இலங்கை அரசாங்கம் கொடூரமாக கொலை செய்த சம்பவம்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே புலிப்பார்வை என்ற படம் வெளியானது. தற்போது இதை போல சாட்சிகள் சொர்க்கத்தில் (Witness in Heaven) என்ற படம் ஆஸ்திரேலியாவிலும், பிரான்சிலும் தயாராகியுள்ளது.
இப்படத்தை இயக்குனர் ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். இப்படத்தில் பாலச்சந்திரனாக இயக்குனரின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். ஈழத்தில் நடந்த கற்பழிப்பு காட்சிகளோ, துன்புறுத்தல் காட்சிகளோ இல்லையாம்.
-cineulagam.com
“ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் உலுக்கிய சம்பவம் தமீழழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை. குறிப்பாக அவரது மகன் பாலச்சந்திரனையும், பாடகி இசைப்பிரியாவையும் இலங்கை அரசாங்கம் கொடூரமாக கொலை செய்த சம்பவம்”.- இந்த அத்துமீறிய செயல்களனைத்தும் பக்கத்து நாடான இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலிருந்திருக்குமா? ஆசியாவிலேயே முதல் நாடாக செவ்வாய்க் கிரகத்திற்கு கோளை அனுப்பியவர்கள்; அந்த அளவிற்கு தொழில் நுட்ப வளர்ச்சி; இருந்தும் கண்டும் காணாமலிருந்தது இந்தியா; இதற்க்கு மேலும் அவர்கள் ஒருப் படி மேற்ச் சென்று, ஒன்றுக்கு இரண்டு முறைகள் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு பாதுகாப்பாக நின்று செயல்பட்டார்கள்; மோசமானச் கடுமையான போர்ச் குற்ற விசாரணையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றியது இந்தியா. இலங்கைக்கு ஆயுத உதவிக ளும் செய்ததும் இவர்கள்தான். இந்த சம்பவங்கள் அனைத்தும் இந்தத் திரைப் படத்தில் இடம் பெற வேண்டும்; இந்தியாவின் அருமையை தமிழக மக்களோடு அனைத்துத் தமிழர்களும் உணர ச் செய்ய வேண்டும்; செய்வார்கள்சென்று நம்புகின்றேன்! அப்போதுதான் தமிழர்களுக்கு புத்தி வரும்; இந்தியாவைப் பற்றிய நல்லெண்ணம் மேலோங்கும்!. வெட்கித் தலைக் குனிய வேண்டிய இந்த மோசமானச் செயல்களால் இந்த இரண்டு நாடுகளும் மனித உரிமை ஆணையத்திலிருப்பதற்கு கொஞ்சமும் அருகதையில்லை!