மலேசிய இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் வழி கீழ்மட்டத்தில் குறைந்த வருமானத்தில் வாழ்கின்ற இந்தியர்கள் பயன் பெற நமது அரசாங்கம் 50 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதற்கு வட்டி கிடையாது . இதை வங்கிகள் மூலம் விண்ணப்பம் செய்து அசிம் என்ற Amanah Saham 1 Malaysia என்ற பங்குகளை வாங்கலாம்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தாக்கல் செய்ததை தற்போது உடனடியாக அமுலாக்கத்திற்கு கொண்டு வந்தது பராட்டத்தக்கது. அதற்கு காரணம் பொதுத் தேர்தல் நெருங்கி விட்டதுதான் என்பதையும் மக்கள் உணர்வர். ஆனால் இதில் அவமானமும் அடங்கியுள்ளது.
2009 –ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பங்குகளில் பூமிபுத்ராக்கள் ஆர்வம் கொள்ளவில்லை. இதில் ஒதுக்கப்பட்ட பங்குகளில் சுமார் ரிம200 கோடி ஒதுக்கப்படாமல் இருந்தாக 2013-இல் வெளியான அறிக்கைகள் கூறின.
இந்தியர்களிடையே 227,600 குடுபங்கள் கீழ்மட்ட 40% இல் வாழ்கின்றனர் என்று பெருந்திட்ட அறிக்கை கூறுகிறது. அதில் 100,000 குடும்பங்கள் மட்டும்தான் இந்த அசிம் பங்கு திட்டத்தில் பங்கி பெற இயலும். இது சார்பாக கருத்துரைத்த மஇகா தலைவரும் அமைச்சருமான டத்தோ சிறி சுப்ரமணியம், இந்த திட்டம் 400,000 இந்தியர்களுக்கு பயன் அளிக்கும் என்று கூறியிருந்தார்.
மேலும் விளக்கமளிக்கையில், இதன் வழி விண்ணப்பம் செய்பவர்களுக்கு மலேசியர் என்ற ஒரு தகுதி போதும், வேலையில்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்பவர்களின் பங்குகளை வங்கிகள்தான் வைத்திருக்கும். அதன் வழி கிடைக்கும் இலாப ஈவுகளை கொண்டு கடன் கட்டப்படும். முழுமையாக கடன் கட்டி முடித்தவுடன் பங்குகள் கையில் கிடைக்கும் என்றார் சுப்ரமணியம்.
அசிம் பங்குகளை 2009 –இல், பிரதமராக பொறுப்பேற்ற தனது 100-வது நாளன்று பிரதமர் டத்தோ சிறி நஜிப் அவர்கள் தொடக்கி வைத்தார். கடந்த ஆண்டு 6% இலாப ஈவாக வழங்கியது. 2010 முதல் 2017-க்குமான இலாப ஈவுகளில் அதிகமானது 6.7% அது 2013 தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டது. மிகவும் குறைவானது 2017-இல் 6% வழங்கப்பட்டது. இதன் சராசரி இலாப ஈவு 6.41% ஆகும் (அட்டவணையில் காண்க).
அசிம் பங்குகளை பெரும் ஒரு குடும்பத்தினர், ரிம5,000 –ஐ கடனாக பெறுகிறார்கள். இலாப ஈவு சராசரி 6.5% (கடந்த 8 ஆண்டுகளில் அதன் சராசரி 6.41 மட்டுமே) என்று எடுத்துக்கொண்டால், அதன் வழி ஒரு வருடத்திற்கு கிடைக்கும் பணம் ரிம325 ஆகும். இதை வங்கி வைத்து கொண்டு கொடுத்த ரிம5,000-க்கான கடனில் கழித்து விடும். இப்படியாக முதலீடு செய்த ரிம5,000-ஐ இலாப ஈவு வழியாக கட்டுவதற்கு 15.38 வருடங்கள் ஆகும். அதாவது 5,615 நாட்கள் ஆகும். அதன் பிறகுதான் அந்த ரிம5,000 –ஐ அந்த குடும்பத்தினர் பெற இயலும்.
பிரதமர் அறிவித்த அசிம் பணமான ரிம5,000 என்பது 5,615 நாட்களுக்கு பின்புதான் கையில் கிடைக்கும். அதாவது இதன் வழி ஒரு குடும்பம் அடையும் பயன் நாள் ஒன்றுக்கு என கணக்கிட்டால் வெறும் 89 காசுதான். அந்த குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஆள் ஒன்றுக்கு 22 காசு கிடைக்கும்.
கடந்த ஆண்டு விலைவாசிகளின் ஏற்றம் அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் பணவீக்கமாகும். கடந்த ஆண்டி அது 3.7% மாகும். இப்படி விலைவாசி ஏற்றம் கண்டு வரும் சூழலில், அசிம் பங்கு முதலீட்டால் நாள் ஒன்றுக்கு 22 காசு என்ற வகையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ஒரு சொற்பமான ரிம5,000 எவ்வகையில் ஏழ்மை இந்தியர்களை மேம்படுத்தும்?
இது ஒரு திட்டம் என்பதை கேட்கவே அவமானமாக உள்ளது. நமது நிலைமை இந்த அளவுக்கு கீழ்மையான நிலையில் அனுமாணிக்கப்பட்டுள்ளதை எண்ணி நமது தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து கைதட்டி ஆரவாரம் செய்து நமது காதுகளில் பூ சுத்துவதுக்கு காரணம் அறியாமையா அல்லது நாம் எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தாழ்ந்து விட்டோமா?
சரி இன்னைக்கு ஒருநாளைக்கு தேனீ அவர்களுக்காக பறிஞ்சு பேசறேன்: “மா இ கா தலைவர் அவர்களே …. இந்த 89 காசில் எத்தனை விழுக்காடு தை முதல்நாள் தமிழர் வருட பிறப்பு கொண்டாடுபவர்களுக்கு ? எத்தனை விழுக்காடு சித்திரை முதல்நாள் தமிழர் வருட பிறப்பு கொண்டாடுபவர்களுக்கு ? தெலுங்கர்களும் மலையாளீகளுக்கும் சீக்கியர்களுக்கு , இந்து முஸ்லிம்களுக்கு , இந்து கிறிஸ்துவர்களுக்கும் எத்தனை விழுக்காடு எத்தனை விழுக்காடு எத்தனை விழுக்காடு….. (ECHO) ….அதிகமாக இருக்கும் தமிழர்களுக்கு, அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது முடியாது முடியாது …. (ECHO) (திலீப்பின் சொந்த மனக்குமுறல் : மானங்கெட்ட பொழப்புடா இது ! )
அண்ணன் ஆறுமுகம் சொல்வது சரியாக இருந்தால், இந்த திட்டம் ஒரு கண்கட்டி விளையாட்டாக அமைந்து விடும். சாலை ஓரமாக கை யேந்தும் அயல் நாட்டவர் இதை விட அதிகமாக பெருவார்கள் போல் உள்ளது. 89 காசில் ஒரு தேநீர் கூட வாங்க இயலாது! ம இ கா தயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள்.
நீங்கள் சொல்வது இன்று சரியாக இருக்கும் அதுவும் விளாவரியாக கணக்கு வைத்து புள்ளி விவரம்மாக சொல்லி இருப்பது வரவேற்க ஒன்று அதில் மாறுபட்ட கருதும் இல்லை. உங்களின் திறமைக்கு இது ஒரு சர்வசாதாரணமான ஒன்று. (கணக்கு விசயத்தில்) இந்த அசிம் திட்டதை எடுது கொண்டால் ஒரு விசயத்தில் வரவேற்க ஒன்றாக கருதுகிறேன். நீங்கள் இன்றைய நிலையை வைத்து சொல்லி இருகிறிர்கள் அனால் 15 வருடம் கழித்து பார்க்கவேண்டும் என கேட்டும் கொள்கிறேன்.
(வருடத்திற்கு கிடைக்கும் பணம் ரிம325 ஆகும். இதை வங்கி வைத்து கொண்டு கொடுத்த ரிம5,000-க்கான கடனில் கழித்து விடும். இப்படியாக முதலீடு செய்த ரிம5,000-ஐ இலாப ஈவு வழியாக கட்டுவதற்கு 15.38 வருடங்கள் ஆகும்.) சரிதானே உங்கள் கணக்கு. (மலேசியர் என்ற ஒரு தகுதி போதும், வேலையில்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்பவர்களின் பங்குகளை வங்கிகள்தான் வைத்திருக்கும். அதன் வழி கிடைக்கும் இலாப ஈவுகளை கொண்டு கடன் கட்டப்படும். முழுமையாக கடன் கட்டி முடித்தவுடன் பங்குகள் கையில் கிடைக்கும் என்றார் சுப்ரமணியம்.) சரிதானே நீங்கள் சொன்னது இந்த 15 வருடத்தில் சரியாக பாருங்கள் (அதன் வழி கிடைக்கும் இலாப ஈவுகளை கொண்டு கடன் கட்டப்படும்.) அரசாங்கம் கொடுத்த அந்த ரிம5,000-ஐ அப்படியே இருகிறது அதில் ரிம5,000-ஐ வட்டியை மட்டுமே எடுது கொள்கிறது. சரிதானே. இது ஒரு வட்டி இல்லாத கடன் சரிதானே.
இப்போது பிறக்கும் ஒரு குழந்தைக்கு அந்த தந்தை அல்லது தாய் இப்போது ஒரு முதலிடு செய்கிறார் ரிம5,000-ஐ அந்த குழந்தை 15 வருடம் கழித்து அதன் படிப்பு செலவுக்கு ஒரு சிறு தொகை கிடைக்கும் பொழுது சந்தோசம்தானே அந்த குடும்பத்திற்கு. 15 வருடம் கழித்து. இதில் அவர் முதலீடு மட்டுமே செய்கிறார். அத்துடன் முடிந்தது. இதில் என்ன தவறுகள் இருகிறது. இன்றைய நிலையில் இந்த கணக்கு சரியாக இருப்பினும் 15 வருடம் கழித்து ஏன் நீங்கள் யோசிக்க வில்லை. இது ஒரு வட்டி இல்லாத கடன் திட்டம்.
உண்மைத்தான் திரு.ஆறு அவர்களே, ஜி .மோகன் சொல்வது போல் ஒரு மலேசியருக்கு எந்த இடர்பாடும் இல்லாமல் பணம் அளிக்கப்படுவதை வரவேற்கலாம். ஆனல் அதனை எவரின் அரசியல் வாழ்வுக்கும் பனையமாகவோ, வேறு எந்த கைமாரையும் அல்லது நானும் இந்தியர்களுக்கு செய்தேன் என்று சொல்லி கொள்ள செய்வதாக இருக்க கூடாது.. ஏழைகளின் துயரை துடைக்கும் வழியா இது என்றால் நிச்சயம் இல்லை, ஆறு குறிப்பிட்ட அதே ஒரு லட்சம் குடும்பத்தினருக்கு உதவ வேறு வழிகள் உண்டு, அவை மிக சிறந்த பலனை சமூதாயத்திற்கு வழங்கும்
1. அந்த 1 லட்சம் குடும்பங்களில் 10 % விழுக்காட்டினருக்கு அரசாங்க வேலை.
2. அடுத்த இலவச வீட்டு மனை (வீடு கட்டும் நிலம்) 10%
3. அடுத்த 10% விவசாய நிலம்.
4.. அடு- 10 % வாகன ஓட்டும் லைசன், வாடகை கார் விடும் உரிமம்
5.- அடு 10 % சிறு வியாபார சிறப்பு உரிமம் .
6. அடு 10% பசார் மீன் முதல் சைவர் வரை
7. அடு 10% வாகான பழுது, முடிதிருத்தம்,அங்காடி வியாபாரம் , தையல், மாலை தொடுத்தல் பயிற்சிக்குபின் சிறு தொழில் தொடங்க எல்லா, நகரங்களிலும், மாநிலங்களிலும் நடவடிக்கை எடுத்தால், 5 வருடங்களில் இந்த சமுதாயம் எங்கோ போய்விடும்.
ஆனால் கையால் ஆகாதவன் காட்டும் வழியே ”அசிம்” ஆனால் இந்த ம.இ.கா வும் ”அசிம்” பிடித்து தொங்குவதுத்தான் அசிங்கம்.
மோகன், சொல்வது, கெழ்வரகில்ந்நெய் வடிகிறது எம்றால் வடியும் வரையில் ப்டித்துக் கொள்ளுங்கள் என்கிறார். ஐயா மோகன், ஆறுமுகம் கேட்கும் கேள்வி, இந்த குறைவான, அதுவும் பூமிபுத்ரா ஆட்கள் வாங்காத மீதியை நம் தலையில் கட்டி அது வறுமையை போக்கும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும்.
கடன்ல தவிக்கிற மக்களுக்கு காட்ற காணல் நீர் தாகத்தை தீர்க்காது. அதுவும் ஒரு அட்பமான அளவில். இவர்களின் அடிப்படை சம்பளத்தை உடனடியாக 500 கூட்டினால அது வருடம் 6,000 மாகும்.
ஜி. மோகன் – கிள்ளான் அவர்களே , நீங்கள் தான் சார் உண்மையான மா இ கா தொண்டன்; கடைசியில் முகத்திரை கிழிந்தது . பாவம் திரு க. ஆறுமுகம் அவர்கள் நொந்து பொய் இதனை சொல்கிறார், நீங்கள் என்ன வென்றால் : “லாபம் தானே , இலவசமாக தானே, குழந்தை கல்வி செலவுக்கு ஆகுமே எங்கீறீர்கள் !” அடுத்த 15 வருட பயணத்தில் இந்தியர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது , அயல் நாட்டவருக்கு கூட கிடைக்கலாம் ஆனால் நம்மவர்களுக்கு இதை காட்டியே புறக்கணிக்க படுவோம். இதனை ஏன் நீங்கள் கண்டு கொள்ள வில்லை ? மேலும் மலேஷியா 20 பொது பல்கலை கழகங்கள் இலவச கல்வியை அறிவித்தாகி விட்ட்து. இருப்பினும் நீங்கள் மா இ கா சொல்லும் சாக்குகளை போலவே சாக்குகளை சொல்கிறீர்கள். என்ன சார் நியாம் இது ? B40 பிரிவினர்களின் தேவை என்பது அடிப்படை தேவைகள் அவை 15 வருடத்திற்கு பிறகு வரும் ஒரு சிறு உதவி அல்ல. 30 ஆண்டுகள் இந்தியர்களின் வளர்ச்சியை கொள்ளையடித்தான், சாமி வேலு என்ற ஒரு தமிழன் ! இப்பொழுது நீங்கள் இன்னமும் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ஏந்துகிறீர்கள். காலம் தவறி வழங்க படும் நீதி , நீதியற்றது ! திரு க. ஆறுமுகம் அவர்களின் ஆத்ம குமுறலை கொச்சை படுத்தாதீர்கள் , நாலு பேராவது நல்லவனா வாழட்டுமே !
பணவீக்கத்தை ஆண்டுக்குச் சராசரி 3.5% வைத்தாலும் 15 வருடங்கள் கழித்து இன்றைய RM5,000/= – யின் மதிப்பு என்னவென்று ஆராய்ந்து பாருங்களேன். 15 ஆண்டுகள் கழித்து அந்த பணத்தின் ‘purchase power’ மதிப்பு இன்றைய RM2,500/= – க்குச் சமம். இந்தியருக்கு இப்படி ஒரு சலுகை என்று தேர்தல் காலத்தில் காட்டி முட்டாளாக்குவதை ம.இ.க. முட்டை போட்ட பெட்டைக் கோழி மாதிரி கொக்கரிக்கின்றது. தானைத் தலைவர் செய்த பித்தலாட்டத்திற்கு இது சற்றும் சோடை போகாத திட்டமாகும்.
இத்தகைய அரசியல் மோசடியை நம்பி இந்தியர் தே.மு. – க்கு ஓட்டு போடுவதை நிறுத்த இத்தகவல்களை இந்தியர்களிடம் புலனச் செய்திகளின் வழி கொண்டு செல்வதே சால சிறந்தது. நடுவண் அரசுக்கு எதிர்கட்சிகளாக செயல்படுவோர் இவ்வழியை முன்னெடுக்க வேண்டும்.
திரு. கா. ஆறுமுகம் சொன்னதை அப்படியே தருகிறேன். பாருங்கள்.
(50 கோடி ரிங்கிட் வட்டி இல்லாத கடன். இதை வங்கிகள் மூலம் விண்ணப்பம் செய்து அசிம் என்ற Amanah Saham 1 Malaysia என்ற பங்குகளை வாங்கலாம். விண்ணப்பம் செய்பவர்களின் பங்குகளை வங்கிகள்தான் வைத்திருக்கும். அதன் வழி கிடைக்கும் இலாப ஈவுகளை கொண்டு கடன் கட்டப்படும். முழுமையாக கடன் கட்டி முடித்தவுடன் பங்குகள் கையில் கிடைக்கும். இதை வங்கி வைத்து கொண்டு கொடுத்த ரிம5,000-க்கான கடனில் கழித்து விடும்.)
இந்த கடனை கட்டி முடிக்க சுமார் 15 வருடம் பிடிக்கும் என்றும் கூறுகிறார்கள். தேனை எடுது வாயில் ஊட்டும் பொழுது அது கசக்கிறது என்பது போல் உள்ளது. ஒரு சிலர் கருத்துகள்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் ரிம5,000 முதலிடு செய்து விட்டு சும்மா இருக்க போகிறோம். அது 15 வருடம் கழித்து ஒரு ரொக்கமாக கிடைக்க போகிறது இதில் ஏதும் தவறுகள் இருக்க என்று பாருங்கள். நாம் முதலிடு செய்யும் பொழுது வாரிசு காரர்களையும் எழுத போகிறோம். நல்லதை எதை செய்தலும் எதையாவது சொல்லி குழப்பம் செய்வதே ஒரு சிலர் நோக்கம். அன்று ஒரு திருடன் இருந்தான் அப்போது அரசாங்கம் அவனிடம் வாரி அள்ளிக் கொடுத்தது. அப்போது எங்கேயா போனிர்கள். அன்று இது போல் கேட்டு இருந்தால் நாம் இப்படி கையேந்த வேலையே வந்து இருக்காது. அன்று வாய் பேச முடியாத உமைகாளகா இருந்து விட்டு இன்று அரசாங்கமே முன் வந்து செய்யும் பொழுது தவறுகளை கண்டு பிடிக்கிறார்கள். கணக்குகள் எல்லாம் சரியாக பார்த்து சொல்ல முடிகிறது உங்களால். வரவேற்க ஒன்று. இதில் ஒருவர் சொல்கிறார் கேழ்வரகில் வடிகிறது நெய் என்று. அரசாங்கம் தேர்தல் சமயத்தில் நல்லதை செய்யும் பொழுது வரவேற்போம். தேர்தல் சமயத்தில் ஓட்டு போடும் பொழுது உங்களின் முடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள். இது ஒரு கடன் இல்லாத திட்டம் முதலீடு போடாமல் இருக்கும் ஒரு திட்டம். இன்று மரம் நட்டு நாளையே கனியை (பழம்) பலனை எதிபார்ப்பது சரியாக இருக்குமா. நன்றி
புலியின் அவர்களின் பட்டியலோடு இதையும் சேர்க்கலாம்:
1. அந்த 100,000 குடும்பத்தனரின் முழுமையான கல்வி சுமையை அரசாங்கம் ஏற்க வேண்டும். MARA, UITM, Residential Colleges – இவற்றில் ஒதுக்கீடு வேண்டும்.
2. பெல்டா போன்ற நில வீட்டுடமை திட்டம் வேண்டும்.
3. சம்பளத்தை குறைந்தது 1,500 ஆக்க வேண்டும்.
மஇகா பொய் சொல்லி ஏமாத்தக்கூடாது. இந்த அற்ப பணத்தை அதுவும் 15 வருடம் கழித்து கிடைக்கும் 5,000 மதிப்பு பணவீக்கத்தால் பாதி குறைந்து கடைசியில் அதன் மதிப்பில் இப்போது வங்குவதி பாதிக்கு வந்து வுடும். http://www.moneychimp.com/calculator/compound_interest_calculator.htm இதன் வ்ழி கணக்கிட்டால் ற்M 2,316 தான் கிடைக்கிறது விலைவாசி 5% என்று எடுத்தால்.
மக்களை மந்தைகளாக நினைக்கும் அரசாங்கம், அதற்கு கூஜா தூக்கும் ம இ கா – சகிக்க வில்லை!
ஜி மோகன் – அவர்களே, உங்கள் கருத்து தவறு அல்ல. ஐயா ஆறுமுகம் என்ன சொல்கிறார்:
1. இப்படி விலைவாசி ஏற்றம் கண்டு வரும் சூழலில், அசிம் பங்கு முதலீட்டால் நாள் ஒன்றுக்கு 22 காசு என்ற வகையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ஒரு சொற்பமான ரிம5,000 எவ்வகையில் ஏழ்மை இந்தியர்களை மேம்படுத்தும்?
இந்தியர்களிடையே 227,600 குடுபங்கள் கீழ்மட்ட 40% இல் வாழ்கின்றனர் என்று பெருந்திட்ட அறிக்கை கூறுகிறது. அதில் 100,000 குடும்பங்கள் மட்டும்தான் இந்த அசிம் பங்கு திட்டத்தில் பங்கி பெற இயலும். இது சார்பாக கருத்துரைத்த மஇகா தலைவரும் அமைச்சருமான டத்தோ சிறி சுப்ரமணியம், இந்த திட்டம் 400,000 இந்தியர்களுக்கு பயன் அளிக்கும் என்று கூறியிருந்தார்.
இப்போது நீங்கள் சொல்லுங்கள்? ஓரங்கட்டப் பட்ட இந்தியர்களுக்கு இதுதான் தீர்வா?
நாம் எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தாழ்ந்து விட்டோமா?
ஒருமுறை ஏமாற்றப்ப்டதால் தொடர்ந்து ஏமாற வேண்டுமா? ஏமாறுவதும் அரசாங்கம் கொடுப்பதை கேள்வி கேட்காமல் பெற்றுக்கொள்வதும் நமது ்ம்முட்டாள்தனம்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்!
maanmulla india vamsaavaliyinare puthiyathoru arasaangam nam malaysiyaavai aala thol koduppir.
arumugam iyah…..avarkale…DLP patri karuthu sonnir………………….