தாய்மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளியையும் பிரித்து வைத்திருப்பது நாட்டின் ஒற்றுமையைப் பாதித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.
செய்திகளின்படி, 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் கல்வி அமைவுமுறையைப் புதுப்பிக்கப் போவதாக நஜிப் வாக்குறுதி அளித்துள்ளார்.
இன்று மலாய்க்காரர்கள் தேசியப்பள்ளியில் இருக்கிறார்கள். அதே வேளையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளும் சமயப்பள்ளிகளும் இருக்கின்றன என்று நஜிப்பை மேற்கோள் காட்டி த ஸ்டார் டெய்லி கூறுகிறது.
நாம் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்திருக்கிறோம். நாம் இப்போது தனியாக பிரிக்கப்பட்ட அறைகளில் கற்கும் முறையைக் கொண்டிருக்கிறோம் என்று எக்ஸிஎடா மற்றும் செல்கோம் தொழிலாளர்களுடம் நேற்று நடத்திய ஒரு சந்திப்பில் நஜிப் கூறினார்.
நம்மிடம் இதற்கு உடனடியான தீர்வு இல்லை. ஒருவர் மற்றொருவருடன் தொடர்புகொண்டு செயல்படுதல் மற்றும் பரஸ்பர மரியாதை கொண்டிருத்தல் போன்ற நற்பண்புகளை நாம் பள்ளியில் போதிக்கலாம் என்று நஜிப்பை மேற்கொள் காட்டி த நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.
மலேசியாவின் இன அடிப்படையிலான, பிரித்து வைக்கப்பட்ட பள்ளி அமைவுமுறை பிரிட்டீஷ் காலனித்துவ வழி வந்ததாகும். இது வெவ்வேறு மொழி-வகை பள்ளி ஆதரவாளர்களிடையே கடும் விவாதப் பொருளாகியுள்ளது.
தேசிய ஒற்றுமைக்கு சீன மற்றும் தமிழ் தாய்மொழிப்பள்ளிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதும் மலாய் தேசியவாதிகள் அவற்றை மூட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இது சீன மற்றும் தமிழ் கல்விமான்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தாய்மொழியில் கல்வி கற்பது தங்களுடைய குழந்தைகளின் உரிமை என்று அவர்கள் நம்புகின்றனர்.
இதனிடையே, நடுத்தர வர்க்க பெற்றோர்கள் ஆங்கிலமொழிப்பள்ளிகளுக்கு திரும்ப வேண்டும் என்று கோருகின்றனர்.
நான்காவது தொழில் புரட்சிக்கு தயாராவதற்காக கல்வி அமைவுமுறையை அரசாங்கம் மறு ஒழுங்கு செய்யும் என்று நஜிப் தெரிவித்ததாக த நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.
-த மலேசியன் இன்சைட்
தமிழ்ப்பள்ளிகளை நாங்கள் அழிக்க மாட்டோம், தானே அது அழிய வழி அமைப்போம் என்பது இவன் அப்பனின் கல்வித்திட்டம், அதனை இவ்வேளையில் பிரதமர் மறைமுகமாகத் தெளிவு படுத்தியுள்ளார் . நன்றி. அது பற்றி பல கருத்துகளை, சம்பவங்கள் குறித்து மிக விரிவாக எழுதலாம், ஆனால் ஓரளவு விஷயம் அறிந்தவர்கள், இது பற்றி அறிந்திருப்பர். ஆக, அம்னோவிற்கும் ம.இர விற்கும் ஓட்டு கேட்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, இது.. பாரிசான்- அம்னோவின் பலம் தமிழ்ப் பள்ளிகளை அளிக்கும். இதற்கு முன் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நம் மாணவர்களைத் தெருவெல்லாம் கையேந்த விட்ட இர கூட்டம். மூடப்பட்ட எத்தனையோ தமிழ்ப் பள்ளிகளைப் பட்டணங்களில் நிறுவ அனுமதி மற்றும் வசதிகள் வழங்காத அரசு, புதிய 6 தமிழ்ப்பள்ளிகளுக்குக் காரணமின்றி அனுமதி வழங்க வில்லை என்பதை இந்தியர்கள் { குறிப்பாகப் பாரிசான் தூக்கிகள் } கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நாட்டு மக்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டால், இன, சமய ரீதியான அரசியல் கட்சிகள் ஒழிக்கப் பட்டால் நாட்டு ஒற்றுமை தானாக வளரும்.
எங்க போச்சு இந்த மானங்கெட்ட மா இ கா ? இது வரை நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் தந்து வந்த ஆளும் கட்சி , இப்பொழுது இந்தியர்களை பயமுறுத்த நேரடியாகவே “SKETCH ” போடுகிறது ! இதை எதிர்க்க வேண்டாமா மா இ கா வில் தலைவர்கள் ? அல்லது இன்னமும் எஜமானர்களின் கைகளை முத்தமிட்டு கொண்டு இருக்க போகிறீர்களா ? தமிழ் பள்ளி ஆசிரியர் பெருமக்களே , நீங்கள் எல்லோரும் அரசியல் செய்ய வேண்டிய நேரம் இது ! இந்த கார்ல் மாஸ் சொல்வதை கவனமாக கேளுங்கள் : இந்த அறிவிப்பின் படி சுதந்திரமாக கல்வி போதிக்கும் உங்கள் தொழில் , இனி ஒருவருக்கு அடிபணிந்து பயந்து கட்டுப்பட்டு வாழவேண்டி வரலாம் ! அல்லது வராமலும் போகலாம் ! எனவே நீங்களே பெட்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் , தமிழ் பள்ளிகளின் நிலை பாட்டை இந்திய பெட்ரொர்களுக்கு விளக்குங்கள். நேரடியாக சென்று , ஒவ்வொரு பெட்ரொர்களையும் சந்தியுங்கள் ! தமிழ் பள்ளிகளின் முக்கிய துவத்தை புரிந்து கொண்டு , இன்னும் 1000 ஆண்டுகள் தமிழ் பள்ளிகள் நிலைத்திருக்க ஆவணம் செய்யுங்கள் ! அப்படி நீங்கள் செய்ய தவறினால் , இனிமேல் உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் , அதாவது தமிழ் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் , மக்கள் வரமாடடார்கள் ! மா இ கா வை நம்பாதீர்கள் ஆசிரியர் பெருமக்களே நம்பாதீர்கள் !
நம் பிரதமர் அவர்கள் எந்த ஒற்றுமையைப் பற்றிப் பேசுகின்றார்; அன்று மக்கள் ஒற்றுமையாய் இருந்ததனால்தானே நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது; அன்று ஒற்றுமையிருந்ததானால்தானே நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கமினூஷ பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முடிந்தது; அந்த ஒற்றுமையால்தானே நம் நாடும் பொருளத்துறையில் வளர முடிந்தது. அன்று இந்த இனங்களிடையையே இருந்த ஒற்றுமை நல்லிணக்கம்தால்தான் தேசத் தந்தை துங்கு அவர்களின் தலைமையில் சுதந்திர மலாயா என்ற நல்ல நாடும் உருவானது. ஆனால் இந்தத் தியாகங்களையெல்லாம் மறந்துவிட்டு இன்றுமட்டும் அந்த ஒற்றுமையில்லையென்றுச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியவில்லை; மஇக வினர் இதை பற்றி ஏதாவ்து வெளிப் படையானக் கருத்துக்கள் சொல்வார்களா! மஇக வினர் பிரதமர் அவர்களிடம் தமிழ்ப் பள்ளிகளிகளின் அவசியம் பற்றிமனம் விட்டுப் பேச வேண்டும்! சும்மாவாவது வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்கள் மஇக விடம் இருப்பார்களென்றுப் பேசுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை.