மலேசியாவில் தமிழ்மொழியும் தமிழ்ப்பள்ளிகளும் நிலைத்திருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆற்றி வந்த அரும்பணியாகும். காலனித்துவ காலம் தொட்டு ஆசிரியர் பணியை ஒரு தொண்டாகக் கருதி இந்த நாட்டில் தமிழ்மொழி வளர பெரும்பணி ஆற்றியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள்.
அவர்களின் சுவடுகளில் வளர்ந்த இன்றையத் தலைமை ஆசிரியர்களில் சிலர் தமிழ்வழிக் கல்வியின் மீது நம்பிக்கையற்ற நிலையில் இருமொழித் திட்டம் என்ற ஒன்றை ஆதரிப்பது வருந்தத்தக்கது என்கிறார்கள் தமிழ் எங்கள் உயிர் குழுவினர்.
இருமொழித் திட்டம் நமது தமிழ்வழிக் கல்வி நிலையை அழித்துவிடும் என்பதை உணர மறுக்கும் இவர்கள், ஆங்கிலமொழியில் அறிவியல், கணிதம் கற்பதால் குழந்தைகளின் அறிவுத்திறன் கூடும் என நம்புகிறார்கள்.
உலக அளவிலும் நமது நாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், ஆரம்பக் கல்வியில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் கருத்துணர்வு சார்பாக உள்ளதால் அவற்றின் கற்றல் கற்பித்தலை குழந்தைகளுக்கு அறிந்த, புரிந்த மொழிகளில்தான் சிறப்பாக நடத்த முடியும் என்பதை காட்டுகின்றன.
அதோடு, கடந்த காலங்களில் தமிழ்வழி அறிவியல் மற்றும் கணிதப்பாடங்களை பயின்ற நமது மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேசியத் தேர்ச்சி அளவைவிட அதிகமாக இருந்து வந்துள்ளதை இவர்கள் மறந்து விட்டனர்.
ஆங்கிலம் அனைத்துல வாணிப மொழி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆங்கிலமொழி ஆற்றலை தமிழ்ப்பள்ளிகளில் அதிகப்படுத்த அரசாங்கம் அது சார்பாக எம்பிஎம்எம்பிஐ (MBMMBI) என்ற கொள்கை வழி ஆறு வகையான வியூகத் திட்டங்களை வைத்துள்ளனர்.
அவற்றை அரசாங்கம் அமுலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். அதை விடுத்து அறிவியல், கணிதம் போன்ற பாடங்களின் வழி ஆங்கிலத்தை போதிக்க முயல்வது தவறாகும்.
மலேசியாவில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டு அடையாளமாக கட்டிக்காக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்வழிக் கல்வியைக் கட்டிக்காக்க தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும். அதை விடுத்து தமிழ்வழிக் கல்வியை மாற்றம் செய்யும் வகையில் உள்ள இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்ய இவர்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது, சட்டத்தின் வழியாக கடப்பாடும் இல்லை, மற்றும் கல்வி அமைச்சும் அவர்களை வற்புறுத்தவில்லை.
2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்த அனைத்து 47 தமிழ்ப்பள்ளிகளுக்கும், சமூக இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள், முறையாக கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்துடன் மலேசியக் கல்வி அமைச்சின் துணை இயக்குனர் அவர்கள் வழங்கிய கடித நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அதன் சாரம் என்னவென்றால், இருமொழித் திட்டம் அமுலாக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது, பள்ளிகள் அதில் இருந்து வெளியாக தலைமையாசிரியர் முடிவு செய்யலாம் என்பதாகும்.
மீண்டும் 2018-ஆம் ஆண்டு தொடங்கியவுடன், 40 பள்ளிகளில் இருமொழித் திட்டம் தொடரப்பட்டது. 2017-இல் அனுப்பப்பட்ட கடித்ததை புறக்கணித்ததால், 2018-இல் இந்தப் பள்ளிகளுக்கு வழக்கறிஞர் கடிதம் மீண்டும் அனுப்பும் சூழ்நிலை உருவானது வருந்ததக்கதாகும். தமிழ்வழிக் கல்வியை நமது பள்ளிகள் இழந்தால் அதன்வழியான பாதிப்புகளை பின்பு நிவர்த்தி செய்ய இயலாது. எனவேதான், இந்த 40 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மீதும் அவர்களின் பெயரிலேயே இந்த சட்ட நடவடிக்கையை எடுக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவானது என்கின்றனர் தமிழ் எங்கள் உயிர் குழுவினர்.
இந்தச் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டுமானால், அதற்கு தலைமையாசியர்கள்தான் முன்வர வேண்டும். அதைவிடுத்து, அவர்கள் பத்திரிக்கை செய்தி வழியும், மாற்று வழிகளையும் கடைபிடிக்க முற்படும் போது அவர்கள் தமிழ்ப்பள்ளியின் ஒரு தலைமையாசிரியர் என்ற வகையில் கொண்டுள்ள தார்மீக கடமையில் இருந்து விலகுவதோடு கல்விச் சட்டதிற்கு புறம்பாகவும் நடந்துகொள்கிறார்கள்.
வரலாற்றில் இது போன்ற சூழ்நிலை உருவாகும் போது, தமிழ்வழிக் கல்வியை பாதுகாக்கவும், தமிழ்மொழி நிலைபெறச்செய்யவும் வெகுசன மக்களின் உணர்வும் போராட்டமும் எழுச்சி பெருகிறது. தமிழ்ப்பள்ளிகள் தமிழ் சமூகத்தின் சொத்து என்பதும், தமிழ் அவர்களின் சுவாசம் என்பதும் உணர்வு நிலை வெளிப்பாடாகும்.
புத்ரா செயாவில் மே 19ஆம் தேதியன்று ஆர். பாலமுரளியின் ஒருங்கிணைப்பில் கூடிய பேரணி, சோகூர் முதல் புத்ரா செயா வரையில் தோழர்கள் தியாகுவும் அஞ்சதமிழனும் 350 கிலோமீட்டர் தூரம் கால்நடையாக ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டு மனு ஒன்றை பிரதமருக்கு வழங்கியது மற்றும் கலைமுகிலன் தலைமையில் நாம் தமிழர் இயக்கதினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் உட்பட அரசாங்கதிடம் அமைதியான வகையில் இதுவரையில் நான்கு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழ்வழிக் கல்வியைக் காக்க, தமிழ் ஆர்வலர்கள் பலர் பல இயக்கங்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட வகையிலும் பல வகையான முனைப்புகளை முன்எடுப்பதை தங்களின் தார்மீக கடமையாக கருதுகிறார்கள்.
அவ்வகையில்தான் இந்தச் சட்ட நடவடிக்கையும் அமையும் என்கிறார்கள் தமிழ் எங்கள் உயிர் குழுவினர். இக்குழுவில் சி. தியாகு, தமிழிணியன், ஜெகா, நா. இராசரத்தினம், ஆர். பாலமுரளி, வ. கௌத்தம், இலா. சேகரன், இரா. பெருமாள், ஜீவி காத்தையா, சி. பசுபதி, , சுப்பையா, கா. உதயசூரியன், சிவா, தினகரன், சி. பெருமாள், சு. முத்தழகன், ஜெயசீலன், நாச்செல் அமைச்சியப்பன் உட்பட இன்னும் மாநில பிரதிநிதிகளும் உள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராக கா. ஆறுமுகமும் மருத்துவர் செ. செல்வமும் இருக்கின்றனர்.
இது சமுதாயத்தின் அடையாளமாக உள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு. இதற்கு தமிழ் ஆதரவாளர்கள் வரவேற்பும் ஆதரவும் நல்குமாறு, ‘தமிழ் எங்கள் உயிர்’ பணிக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
வேலியே பயிரை மேய்ந்த உவமானதிற்கும் , கோடாரியே காம்பை பிளந்ததிக்கும் ஆசிரியர்கள் இந்த இருமொழி திட்ட ஆதரவு தலைமையாசிரியர்களை உதாரணமாக காட்டலாம். சுயநலவாத பெற்றோர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் தமிழ்வழி கல்வி நிலைத்திருக்க சமூகம்தான் முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு காரணமே அரசியல்வாதிகள்த்த்ததான். நஜிப் தமிழ் மற்றும் சீன ஆரம்ப பள்ளிகளை மூட வேண்டும் அப்ப தான் ஒற்றுமை வரும்னு சொல்றார். அதுல இருந்த நமக்கு தெரியும் உள்னோக்கம் என்னன்னு.
ஆனால், இந்த ம இ கா வும் செடிக்கும் ஜால்ரா போடுவது சகிக்க முடியில. தமிழா வித்தா பொலப்பு ஓட்டனும்? பாவம் இந்த 40 தலமை ஆசிரியர்கள்!
தமிழ் பள்ளிகளில் 47 பள்ளிகளில் இதனை கல்வி அமைச்சு அமலாக்கம் செய்துள்ளதாக துணை கல்வி அமைச்சரும் இதனை அமலாக்கம் செய்ய துணை புரிந்த முனைவர் ராஜேந்திரனும் கூறிவருவதாக இந்த கலந்துரையாடல் நிகழ்வின் வழி அறியப்படுகின்றது .
எங்க போச்சு இந்த மானங்கெட்ட மா இ கா ? இது வரை நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் தந்து வந்த ஆளும் கட்சி , இப்பொழுது இந்தியர்களை பயமுறுத்த நேரடியாகவே “SKETCH ” போடுகிறது ! இதை எதிர்க்க வேண்டாமா மா இ கா வில் உள்ள அல்லகை தலைவர்கள் ? அல்லது இன்னமும் எஜமானர்களின் கைகளை முத்தமிட்டு கொண்டு இருக்க போகிறீர்களா ? தமிழ் பள்ளி ஆசிரியர் பெருமக்களே , நீங்கள் எல்லோரும் அரசியல் செய்ய வேண்டிய நேரம் இது ! கவனமாக கேளுங்கள் : பெட்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் , தமிழ் பள்ளிகளின் நிலை பாட்டை இந்திய பெட்ரொர்களுக்கு விளக்குங்கள். நேரடியாக சென்று , ஒவ்வொரு பெட்ரொர்களையும் சந்தியுங்கள் ! தமிழ் பள்ளிகளின் முக்கிய துவத்தை புரிந்து கொண்டு , இன்னும் 1000 ஆண்டுகள் தமிழ் பள்ளிகள் நிலைத்திருக்க ஆவணம் செய்யுங்கள் ! ஒரு போதும், இரு மொழி பாட திட்டத்திற்கு வழி விடாதீர்கள். மா இ கா வை நம்பாதீர்கள் ஆசிரியர் பெருமக்களே நம்பாதீர்கள் ! எங்க போனாரு நம்ப ஜி. மோகன் – கிள்ளான் அவர்கள் ? ஏன் இன்னமும் மா இ கா வை வாங்கு வாங்கு வாங்கு என்று வாங்க வில்லை ? ஐயா தேனீ அவர்களே , நீங்களும் ஏன் தமிழ் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தார்மீக ஆதரவு தர வில்லை ?
எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரும் அல்ல. அவர் தமிழ் பள்ளி வழி ஆரம்ப கல்வியைப் பெற்றவரும் அல்லர். எஸ்.பி. எம். தேர்வில் தமிழ் மொழி பாட தேர்விர்க்கு அமர்ந்து தேர்ச்சி பெற்றவர். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவிக்கு வந்தவர். அப்பள்ளி சிறந்த தேர்ச்சி விகிதம் உடையது. ஆனால் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வைத்ததுதான் சட்டம். இப்பள்ளியில் இருமொழி கல்வித் திட்டம் அமுலாக்கத்தில் உள்ளது.
இப்படி இருமொழி கல்வி பாடதிட்டத்தை அமுலாக்க பரிந்துரைத்த தலைமை ஆசிரியரின் பின்னணியை ஆராய்ந்தால் அவர்தம் தமிழ் மொழி பற்று வெட்ட வெளிச்சமாகி விடும். இவர்களின் அடையாளங்களை புலனத்தில் பரவ விடுவோம். அப்பவாவது இத்தகைய பசுத்தோல் போர்த்திய புலிகளை தமிழுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்.
எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரும் அல்ல. அவர் தமிழ் பள்ளி வழி ஆரம்ப கல்வியைப் பெற்றவரும் அல்லர். எஸ்.பி. எம். தேர்வில் தமிழ் மொழி பாட தேர்விர்க்கு அமர்ந்து தேர்ச்சி பெற்றவர். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவிக்கு வந்தவர். அப்பள்ளி சிறந்த தேர்ச்சி விகிதம் உடையது. ஆனால் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வைத்ததுதான் சட்டம். இப்பள்ளியில் இருமொழி கல்வித் திட்டம் அமுலாக்கத்தில் உள்ளது.
இப்படி இருமொழி கல்வி பாடதிட்டத்தை அமுலாக்க பரிந்துரைத்த தலைமை ஆசிரியரின் பின்னணியை ஆராய்ந்தால் அவர்தம் தமிழ் மொழி பற்று வெட்ட வெளிச்சமாகி விடும். இவர்களின் அடையாளங்களை புலனத்தில் பரவ விடுவோம். அப்பவாவது இத்தகைய பசுத்தோல் போர்த்திய புலிகளை தமிழுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்.
இருமொழி கல்வி திட்டத்தை அமுல் படுத்தும் 40 தமிழ் பள்ளிகளின் பெயர் மற்றும் இடத்தையும் செம்பருத்தியில் பதிவிடுங்கள். அந்தந்த பகுதியில் உள்ள செம்பருத்தி வாசகர் அவரவர் அறிந்த உண்மையான தகவல்களை இவ்விடத்திலேயே பகிர்ந்து கொள்வோம்.
நம் நாடு மத சார்பற்ற அரசியல் சாசனம் கொண்ட நாடு; நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வரையப்பட்ட சாசனம். இன்று எழுதப் பட்டிருந்தால் அது மத சார்பற்ற சாசனமாக இருந்திருக்காது. தமிழ் சீனப் பள்ளிகள், சுதந்திரமான வழிப் பாட்டு முறைகள் சுதந்திர மலாயாவுக்கு இவையனைத்தும் தேசத் தந்தை, சுதந்திரத் தந்தையென்று போற்றப் படும் துங்கு அவர்களால் நம்மவர்களுக்கு அளித்த சுதந்திரப் பரிசுகள். சுதந்திர மலாயாவிற்கு முன் நடந்த முதல் பொதுத் தேர்தலின் போது கூட்டணி அறிக்கையிலேயே எழுத்துப் பூர்வமாக சுதந்திர நாட்டில் இப்பள்ளிகள், சுதந்திரமான மத வழிப்பாடோடு தொடர்த்திருக்குமென்ற உறுதிமொழியையும் கொடுத்துள்ளார்; உலகில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்கு நம் பள்ளிகள் இருக்கின்றனவா வென்று தெளிவாகச் சொல்லமுடியாது; நாம் இருமொழித் திட்டத்தை எதிர்க்க வில்லை. தமிழ்ப் பள்ளியில் தமிழ்தான் போதனா மொழியாகயிருக்க வேண்டுமென்பது நம் கொள்கை. நாட்டில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டுமென்றால் முதலில் அதை பொதுச் சேவைத் துறையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பின்பு அதேக் கோட்ப்பாட்டை நாட்டின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் தொழிற் றுறையிலும் அமல்படுத்த வேண்டும். நல்லிணக்கத்தையும் ஒற்றுமைப் பற்றியும் யாரும் நமக்கு இனி உபதேசிக்க வேண்டாம். இந்த உண்மையெல்லாம் இந்தத் தமிழ் ஆசரியர்களுக்குத் தெரியாதா? இங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் நம் சுய மரியாதையின் சின்னங்கள்; இதை நாம்தான் காப்பாற்ற வேண்டும்!.
“நம் நாடு மத சார்பற்ற அரசியல் சாசனம் கொண்ட நாடு: என்று யார் சொன்னது ? http://www.agc.gov.my/agcportal/uploads/files/Publications/FC/Federal%20Consti%20(BI%20text).pdf இதோ சாசனம், நிரூபியுங்கள் ………….
திரு. தேனீ 2.மார்ச் 2018 எழுதிய கருத்தை அப்படியே திரு .Dhilip 2 அவர்கள் 3 மார்ச் 2018 பதிவேற்றம் செய்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திரு. Dhilip 2 தான் சொல்லவேண்டும் தவறு எங்கே என்று. நன்றி
“நம் நாடு மத சார்பற்ற அரசியல் சாசனம் கொண்ட நாடு” – என்று யார் சொன்னது ? http://www.agc.gov.my/agcportal/uploads/files/Publications/FC/Federal%20Consti%20(BI%20text).pdf இதோ சாசனம், ஜி. மோகன் – கிள்ளான் நிரூபியுங்கள் பார்ப்போம் !
மூன்று கோமாளிகள் கதைகள் ஞாபகம் வருகிறது. தேனீ, திலிப் 2, வெடுக். வீராசாமி மூவரும் ஒருவர் என்று சந்தேகம் வருகிறது. வந்துள்ளது. பருவாயில்லை அது உங்கள் திறமை. புனை பெயரில் எழுதுவது. இருப்பினும் பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்பது ஒரு நியதி. அது உங்கள் மூலமாக நிருபணம் ஆகி உள்ளது.
என்னிடம் நிரூபியுங்கள் பார்ப்போம் என மிரடுவது உங்கள் கலையாக இருக்கும். முன்னுக்கு பின் எழுதுவது சிறு பிள்ளைதானம். அது உங்களிடம் அதிகம் உண்டு. அதை இங்கே படிபவர்களுக்கும் தெரியும்.
என்னிடம் சவால் விடும் நீங்கள் உங்கள் திறமையை எந்த அளவு உண்டு என முதலில் புரிந்துகொள்ளவும். சாக்கடையில் நின்றுகொண்டு அதன் நாற்றம் முகர்ந்து எழுதுவது சிறப்பு அல்ல. நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று நினைத்து கொள்ள வேண்டாம். உங்களின் பார்வையில் எழுத்தில் நிறைய தவறான கண்ணோட்டம் உள்ளது என முதலில் பார்க்கவும். அல்லது பதிவெற்றம் செய்யும் முன்பே ஒரு முறை பார்க்கவும்.
நம் நாடு மத சார்பற்ற அரசியல் சாசனம் கொண்ட நாடா? என என்னிடம் கேள்வி வினா தொடுப்பது உங்களின் சிறு பிள்ளை தனம் இங்கே காண்பிக்கிறது. உண்மையிலேயே இந்த நாடு ஒரு பூர்வ குடி மக்கள் (Orang Asli) அவர்களின் நாடு. இதை திரு. கர்பால் சிங் அவர்கள் ஆணிதரமாக பல முறை சொன்னது. இருப்பினும் ஒரு சில (UMNO) நண்பர்கள் இன்றுவரை ஏற்றுகொள்ள மாறுகின்றனர்.
அன்று சரித்திரம் பாடம் படிக்கும் பொழுது இவைகள் இருந்தன. YAP AH LOY என்ற ஒரு சீனர் கோலாலம்பூர் தோற்றுவித்தவர் என அன்று படித்தது. இன்று அது சரித்திரம் பாடத்தில் இல்லை.
SEKOLAH AGAMA ISLAM என பள்ளிகள் நிறைய இருக்கின்றன. இந்த பள்ளிகள் நமது தமிழ் பள்ளிகள் போல தான் இயங்குகின்றன. ஏன் அரசாங்கம் இந்த பள்ளிகளையும் அரவணைக்க கொள்ளவில்லை. நான் அல்லது கேட்டாள் பல பிரச்சனைகள் நாம் சந்திக்க நேரும். அரசியல் தலைவர்கள் கேட்கலாமே. ஒரு சமூகத்தை அழிக்க முதலில் தேவை படுவது அதன் கல்வி. அதை சிறுக சிறுக ஒழித்தால் அதன் அடி சுவற்றையே அழித்தி விடலாம் என்பது அவர்கள் அறிந்து உள்ளனர். இது நமது தலைவர்களுக்கும் தெரியும். இருந்தும் தலைவர்கள் பேசாமல் இருப்பது காரணம் அவர்களின் 3 தலை முறைக்கு பணத்தை சேர்த்து வைத்து உள்ளனர். இதுதான் அரசியல். நாம் ஏழைகள் கடைசிவரைக்கும் இப்படி போராடியே நமது வாழ்க்கையை கழிக்க வேண்டும். இந்த ஒரு அரக்கன் பல வருடங்கள் அமைச்சராக இருந்தான். என்ன செய்தான் நமக்காக நாம் ஏமாந்தது தான் மிச்சம். அவன் இன்று சுக போக வாழ்க்கை வாழ்கிறான். இனிமேல் நாம் சிந்திக்க வில்லை என்றால் முடிந்தது நமது வாழ்க்கை. சிந்திப்போம் செயல் படுவோம். நன்றி.
நாற்பது தமிழ்ப் பள்ளிகளில் நடத்தப்படும் இருமொழி கல்வி திட்டத்தால் விளையக் கூடிய எதிர்கால அபாயத்தை டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்கள் விளக்கக் கேட்கலாம்:
#மூன்று கோமாளிகள் கதைகள் ஞாபகம் வருகிறது. தேனீ, திலிப் 2, வெடுக். வீராசாமி மூவரும் ஒருவர் என்று சந்தேகம் வருகிறது.#
எமக்குப் பரமார்த்த குரு கதை ஞாபகத்திற்கு வருகின்றது.
எவரோ எமது கருத்தை மறுபதிவு செய்ததால் இருவரும் ஒருவர் என்ற கணிப்பு தவறானது அன்பரே! பாவம் இந்த ‘வெடுக் வீராசாமி’ யாரென்று சொல்லி விடுங்கப்பா. இல்லாவிட்டால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பெயரெல்லாம் எம்மை வந்து சாரும்.