அடுக்கடுக்காக படம், அதிருப்தியில் ரசிகர்கள்

இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதுதான் ரஜினியின் ஒரே டார்க்கெட் என்கிறார்கள்.

அது நிறைவடைந்ததும்தான் அடுத்த அறிவிப்பே வெளியிடப் போகிறாராம்.

இதை மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் தெரிவித்த வினாடியிலிருந்தே சுறுசுறுப்பாகிவிட்டார்கள் அவர்கள்.

இந்த இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்வதற்குள் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்து வருவதாக திட்டமாம்.

இதற்குள் ரஜினியை மேலும் ஒரு படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறதாம்.

இப்படியே அவர் நடித்துக் கொண்டேயிருந்தால் எப்போ கட்சி ஆரம்பிச்சு… எப்போ நாற்காலிய புடிக்கறது என்கிற முனகல் சவுன்ட் நாலாபுறத்திலிருந்தும் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

-4tamilmedia.com