லண்டனில் திரையிடப்பட இருந்த 18.05.2009 என்னும் முழு நீள திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என்ற பொய் பிரச்சாரத்தை, பல நபர்கள் முன்னெடுத்து வந்தார்கள். இது எந்த அளவு சர்சையை தோற்றுவித்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதில் நடு நிலை தவறிய ஐ.பி.சி தமிழ் மற்றும் அதன் உரிமையாளரான லங்கா ஸ்ரீ இணையமும் , ஒரு கட்டத்தில் அஞ்சி இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்ற கருத்துக்கு கண்மூடித்தனமாக முன்னுரிமை கொடுத்தார்கள். ஆனால் இன்று படத்தை பார்த்த பெரும் தொகையான மக்கள் ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார்கள்.
ஏன் ? இந்த படத்தில் என்ன குறை உள்ளது ? ஏன் இதனை பார்க்க வேண்டாம் என்று சிலர் தடுத்தார்கள் என்று பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அதிலும் லண்டனில் பிறந்து வளர்ந்த 2ம் தலை முறை தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இந்தப் படத்தை பார்த்து. இதனை போல எவரும் எமக்கு இது தொடர்பாக அறிவூட்டி இருக்க முடியாது என்று கூறி கதறி அழுதுள்ளார்கள். இவை அனைத்தும் இங்கே வீடியோ பதிவில் உள்ளது. குறித்த படத்தில் எது உள்ளது என்று தெரியாமலே பொய்யான வதந்திகளை நம்பி, ஊடகங்களும் சில தனிப்பட்ட நபர்களும் இந்த படத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது. இனி லண்டனில் இந்த கலாச்சாரம் தலை தூக்காமல் இருக்க என்ன பாடு பட்டாவது இந்த படத்தை காட்டவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கடும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்கள். மக்கள் தீர்ப்பே இறுதியானது என்பார்கள். தற்போது மக்கள் இது நல்ல படம். பார்க்க வேண்டிய ஒன்று என்று கருத்து வெளியிட்டு வரும் நிலையில். குறித்த ஊடகங்கள் தமது தவறுக்கு பொதுமன்னிப்பு கோருமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நடு நிலை அற்ற லங்கா ஸ்ரீ போன்ற ஊடகங்களும், சில தனி நபர்களும் மக்கள் கருத்துக்கு என்ன சொல்லப் போகிறார்கள் ?
ஒரு தனி நபரை பிடிக்கவில்லை என்றால், அவர் செய்யும் நல்ல காரியங்களை கூட கொச்சைப் படுத்தி. அவரை மட்டம் தட்டி, பேஸ் புக்கில் எழுதி, வைப் குரூபில் போட்டு, குறுஞ்செய்தி அனுப்பி அதனை கெடுப்பவர்களுக்கு இன்று மக்கள் ஒரு பாடத்தை புகட்டியுள்ளார்கள். இனி லண்டனில் எவர் எதிர்த்தாலும், எதனையும் சாதிக்க முடியும் என்ற , எண்ணம் பலருக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை ஊடாக…
-athirvu.in