தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாகக்கூடிய திரைப்படங்களை தனது தளத்தில் பதிவேற்றி இணையவெளியில் பகிரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் யாருடையது? அந்த தளத்தினை இயக்குபவர்கள் யார்? என சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பியுள்ளார் திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர்.
பல மொழிகளில் வெளியாகக்கூடிய திரைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இணையவெளியில் பகிரும் தமிழ் ராக்கர்ஸ் வெகு மக்களுக்கு பரிட்சயமான ஒன்றே. இந்த தளத்தினை முடக்குவேன் என்று அறிவித்த நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்களில் வெற்றியும் பெற்றார் விஷால். ஆனால், முடக்க.. முடக்க பல பெயர்களில் தமிழ் ராக்கர்ஸ் இயங்குவதாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர், “தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் யாருடையது? அந்த தளத்தினை இயக்குபவர்கள் யார்?. ஆன்ட்டி ஹீரோவாக தமிழ் ராக்கர்ஸ் நல்ல பெயரை எடுக்கிறது. அரசு அது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொண்டது” என கேள்வியெழுப்பி பேசினார்.
-athirvu.in