அனைவரும் எதிர்பார்த்திருந்த தமிழ்படத்தின் இரண்டாம் பாகம் போன வாரம் திரைக்கு வந்து பலரது பாராட்டுகளை பெற்றது. ஸ்பூப் மூவியாக உருவாகியிருந்த இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் பேசப்பட்டார்கள்.
அதிலும் முக்கியமாக வில்லனாக நடித்திருந்த காமெடியன் சதீஷ்க்கு இப்படம் ஒரு புதுவாழ்வையே அளித்துள்ளது. கிரெஸி மோகனின் நாடக குழுவில் நடித்து கொண்டிருந்த சதீஷ்க்கு ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்லபோறோம் படம் அறிமுகப்படமாக அமைந்தது.
அதன்பின் மெரினா படத்தில் கதாநாயகன் கதாபாத்திரமும் வரவிருந்தது, ஆனால் சில காரணங்களால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துவிட்டது. பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்திருந்தாலும் இன்னமும் அவருக்கென தனி அடையாளம் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் அவரிடம் பாடி லாங்குவேஜ் இல்லாததுதான் காரணம்.
ஆனால் இந்த விமர்சனத்திற்கெல்லாம் சற்றும் இடம் கொடுக்காமல் தமிழ்படம்2வில் நடித்திருந்ததால், இப்போது சதீஷை தேடி படவாய்ப்புகள் வந்து குவிகின்றன. இவ்வளவு ஏன் சீரியஸான வில்லன் கேரக்டரே வருகிறதாம்.
-cineulagam.com

























