அரசியலுக்கு வந்திருந்தால் நான்தாங்க தமிழகத்தின் முதல்வர்- பாரதிராஜா நம்பிக்கை

சென்னை: அரசியலுக்கு வந்திருந்தால் நான் தமிழகத்தின் முதல்வர் ஆகியிருப்பேன் என்று பாரதிராஜா தெரிவித்தார்.

பாரதிராஜா ஓம் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நான் 45 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய படங்களை இயக்கியுள்ளேன். சில படங்களில் நடித்தும் உள்ளேன். அன்னக்கொடிக்கு பிறகு ஒரு நல்ல கதை கிடைத்தது. அதில் சிலமாற்றங்கள் செய்து ஓம் என்ற பெயரில் இயக்கியுள்ளேன்.

வியப்பு

இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நட்சத்திரா என்ற புதுமுகம் நடித்துள்ளார். ஒரு எழுத்தாளரை பற்றிய கதையாகும். தமிழ் சினிமாவுக்கு வரும் இளம் தலைமுறையினர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். 12 இயக்குனர்களின் திறமைகளை பார்த்து வியக்கிறேன்.

விருப்பம் இல்லை

டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது. அதனை அரசிடம் வற்புறுத்துவேன். தொடர்ந்து படங்கள் டைரக்டு செய்வேன். ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பெரிய பதவி தருவதாகவும் கூறினார்கள். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்து விட்டேன்.

நடிகைகள்

நான் அரசியலுக்கு வந்து இருந்தால், முதல்வராகி இருப்பேன். முன்பெல்லாம் சினிமாவில் தமிழ் நடிகைகள் இருந்தனர். இப்போது இல்லை. கேரளா, மும்பை, கர்நாடகாவில் இருந்து நடிகைகளை அழைத்து வருகிறார்கள்.

திறமை உண்டு

இது வருத்தமான வி‌ஷயம். தனுஷ், சிம்பு திறமையானவர்கள். நடிகைகளில் நயன்தாரா சிறப்பாக நடிக்கிறார். தமிழ் கலாசாரம் சார்ந்த பொலிவும் அவர் முகத்தில் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்றார் அவர்.

tamil.oneindia.com