AAA படப்பிடிப்பில் சிம்பு நிறைய தவறு செய்தார், ஆனால் இதுபோன்று செய்தால் அவர் விட்ட இடத்தை பிடிக்கலாம்- பிரபலத்தின் ஆதங்கம்

சர்ச்சைகளுக்கு, பிரச்சனைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. ஆனால் இனி அப்படியெல்லாம் கிடையாது அதிரடி சரவெடி தான் என்று படத்தின் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் நடன இயக்குனர் ராபட் சிம்பு பற்றி பேசியுள்ளார். அதில், சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வராதது அப்போது இருந்தே அப்படித்தான். லேட்டாக தான் வருவார் ஆனால் ஒரே டேக், சரியான நேரத்தில் படப்பிடிப்பு முடித்துக் கொடுப்பார். பாடல் கூட ஒரே டேக்கில் முடிப்பார்.

ஆனால் AAA படப்பிடிப்பு சிம்பு மிகவும் லேட்டாக தான் வருவார், அப்போதெல்லாம் கஷ்டமாக இருந்திருக்கிறது. மணிரத்னம் படத்தில் அவர் சரியாக வருகிறார் என்கின்றனர். இப்படம் மூலம் சிம்பு விட்ட இடத்தை பிடித்துவிட்டா மிகவும் சந்தோஷம்.

எனக்கு தெரிந்த வரைக்கும் சிம்பு மறுபடியும் குத்து நடனத்தில் இறங்கி அடித்தால் கண்டிப்பாக விட்ட இடத்தை பிடிக்கலாம் என்று பேசியுள்ளார்.

-cineulagam.com