கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை – ரஜினிகாந்த் வேதனை

சென்னை, சென்னையில்  காமராஜர் அரங்கத்தில்  நடிகர் சங்கம் சார்பில்  கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில்  ரஜினி, நாசர், விஷால், விக்ரமன், குஷ்பு உள்ளிட்டோர் மலர் தூவி கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

நடிகர் சங்க நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

தமிழகத்த்தில் 50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தை கட்டிக்காத்தவர்.  அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி.

தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் ஸ்டாலின் யாரை அழைக்கப்போகிறார் என்று தெரியவில்லை. எத்தனையோ துரோகங்கள், வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. பழையவராகவே, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்.

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. மெரினா பிரச்சனையில் அரசுமேல்முறையீடு செய்து இருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன். திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்-அமைச்சர்  இல்லை?  கருணாநிதியின் இறுதி மரியாதையின்போது முதல்-அமைச்சர் வந்து இருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

-dailythanthi.com