ஈழத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலை தொடர்பாக இசை அஞ்சலியைச் செலுத்துமுகமாக இசை அல்பம் ஒன்றை வெளியிடவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே யுவன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த யுவன்,
”இலங்கையில் இறுதிப் போரின் போது கொலை செய்யப்பட்ட உயிர்களை நினைவு கூரும் வகையில் இசை அஞ்சலி செலுத்துவது எனது கனவாகும். இது தொடர்பாக கடந்த மூன்றாண்டுகளாக செயலாற்றி வருகிறேன். ஈழத் தமிழர்களின் பிரச்சனை குறித்து விழிப்புணர்வினை என்னால் ஏற்படுத்த முடியாது. ஆனாலும் கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்பதை இசை ஆவணமாக வெளிப்படுத்த முடியும். விரைவில் இந்த இசை ஆவணத்தை வெளியிடவுள்ளேன்.” என்றார்.
யுவன் சங்கர்ராஜா தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் என்பதுடன் இசைஞானி இளையராஜாவின் வாரிசு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-athirvu.in