ரஜினி கமலையும் மிஞ்சிய விக்ரம்..

கேரளா மாநிலத்தில் கொட்டி தீர்த்து வந்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கேரளலாவில் பெரும்பாலான பகுதியில் வெள்ள காடாக மாறியுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களை சேர்ந்த மக்கள் திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகிலும் உள்ள நடிகர், நடிகைகள் கேரளாவிற்காக நிதி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் தலா ரூ 25 லட்சம் ரூபாயும் ரஜினி, தனுஷ் ஆகியோர் தலா ரூ 10 லட்சமும் நிதி அளித்து இருந்தனர்.

மேலும் சிவகார்த்திகேயன், சித்தார்த், நயன்தாரா, உதயநிதி ஆகியோர் ரூ 10 லட்சமும் நிதியுதவியாக அளித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் கேரள முதலமைச்சரின் நிவரான நிதிக்காக ரூ 35 லட்சம் கொடுத்துள்ளார். இதனால் விக்ரமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வாழ்துக்கள் குவிந்து வருகின்றன.

-athirvu.in