25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா!

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவும் இளையராஜாவும் மீண்டும் இணைய உள்ளனர்.

1970, 80 காலகட்டங்களில் இளையராஜா-பாரதிராஜா கூட்டணி ராஜ கூட்டணியாக வலம் வந்தது. பாரதிராஜா படம் என்றால் இளையராஜா இசை என எழுதி வைத்துக்கொள்ளலாம் என சொல்லும் அளவிற்கு இணைந்து ஹிட் கொடுத்தனர்.

அந்த கிளாசிக்கல் கூட்டணி இப்போது மீண்டும் இணைய உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை ஏ.எல்.விஜய் இயக்குவது தெரிந்த விஷயம்.

இப்போது அஸ்வின் பரத்வாஜ் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

25 வருடங்களுக்கு பிறகு இளையராஜா இசையமைக்கும் பாரதிராஜா திரைப்படம் இதுவாகும். கடைசியாக 1993 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மகள் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஏ.எல்.விஜய், இயக்குனர் மிஷ்க்கினின் உதவியாளர் என இரண்டுபேர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படங்களை அறிவித்திருக்கும் நிலையில் மூன்றாவதாக பாரதிராஜாவும் இயக்க உள்ளார்.

tamil.filmibeat.com