வேலைக்காரன் பாக்ஸ் ஆபிஸை கூட தொட முடியாத விஸ்வரூபம்-2- இப்படி ஆகி விட்டதே

விஸ்வரூபம்-2 இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஆனால், இப்படம் கமல் திரைப்பயணத்தில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

அதிலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இப்படம் ரிலிஸாகவில்லை, விஸ்வரூபம்-2 சென்னையில் தற்போது வரை ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

படத்தின் மொத்த ஓட்டத்தில் ரூ 5.5 கோடி வரை இப்படம் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் சென்னையில் ரூ 6.2 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இது கமல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்து இருக்கும்.

-cineulagam.com