கேரளாவுக்கு லாரி லாரியாக செல்லும் விஜயின் நிவாரண பொருட்கள்..

மழை வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ள கேரளா மக்களுக்காக தளபதி விஜய் ரூ 70 லட்சம் நிதியுதவி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது தளபதி விஜயின் பேனருடன் லாரி லாரியாக நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பட்டுள்ளன. இதனை வீடியோ எடுத்து கேரள ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் விஜய் வாழ்க வாழ்க எனவும் கோஷமிட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு நிகராக கேரளாவில் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in