மீண்டும் இந்திய படத்தில் ஜாக்கி சான்! முன்னணி ஹீரோவுடன் கூட்டணி

நடிகர் ஜாக்கி சான் உலக அளவில் பிரபலமான நடிகர். அவர் படங்களுக்காக ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அவர் 5 வது இடத்தில் உள்ளார்.

அவர் இதற்குமுன் குங்பூ யோகா என்ற இந்திய படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அமிதாப் பச்சன் அடுத்து நடிக்கவுள்ள Aankhen 2 படத்தில் தான் ஜாக்கி சான் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதே படத்தில் தோனி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

-cineulagam.com