சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு பிரபலங்களுக்கு கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் 3 முதல் 4 கோடி சம்பளம் வாங்கும் பல நடிகர்கள் மிக குறைந்த அளவே நிவாரண தொகை அளித்துள்ளனர். அதை விமர்சிக்கும் வகையில் கேரள சுற்றுலா துறை அமைச்சர் Kadakampally Surendran தற்போது பேசியுள்ளார்.
“பிரபாஸ் 1 கோடி, விஜய் 70 லட்சம், முதலில் நிவாரண தொகை அறிவித்தது சூர்யா-கார்த்தி, லாரன்ஸ் 1 கோடி, விஜயகாந்த் 1 கோடி – என கேரளாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்களே வெள்ளம் பாதிப்பு பற்றி கேட்டு அதிகம் கொடுத்துள்ளனர். ஆனால் இங்கு 4 கோடி காரில் செல்லும் நடிகர் எவ்வளவு கொடுத்தார் என பாருங்கள். ஒரு படத்திற்கு 3 முதல் 4 கோடி சம்பளம் வாங்குகிறார்கள். இன்னும் அதிகம் கொடுத்திருக்க வேண்டாமா” என Kadakampally Surendran பேசியுள்ளார்.
இந்த விஷயத்தில் பிரபாஸை ரோல் மாடலாக அவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-cineulagam.com