தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விவேகம் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
ஆனால் கர்நாடகாவில் கமாண்டோ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இந்த படத்திற்கு கர்நாடக ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கத்தை விட தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மேலும் பெங்களூரில் உள்ள பூமிகா என்ற தியேட்டரில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூரை சேர்ந்த சலுவாளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் விவேகம் படத்தை பெங்களூரில் திரையிட கூடாது என கூறி தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-athirvu.in