”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்

சென்னை: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமைகளை அலசப்போகிறது வேறென்ன வேண்டும் திரைப்படம்.

சமூக வலைதள பயன்பாட்டின் அதிகரிப்பால் நன்மைகள் நடக்கின்ற அதே வேளை குற்றங்களும் பெருகியிருப்பதை மறுக்க முடியாது.

ஏ.எம்.ரெட் கார்பெட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.எஸ்.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்கும் படம் வேறென்ன வேண்டும்.

இப்படத்தை சிவபார்வதி குமரன் இயக்குகிறார். இப்படம் பற்றி பேசிய அவர், “இன்றைக்கு சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சமீபத்தில் ஒரு மருத்துவ மாணவியை ஃபேஸ்புக்கில் காதலித்த பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொன்றிருக்கிறார்.

இதுபோன்ற சம்பவங்களை இணைத்தே இப்படம் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களின் பின்னணியில் இன்றைய இளைய சமுதாயம் அடைந்திருக்கும் நன்மை தீமைகளை சொல்லும் படமாக இருக்கும்” என்றார்.

இப்படத்தில் நரேன்ராம் தேஜ், பெரானா கண்ணா, தர்ஷன், அனுபமா, சுப்பிரமணி, ஆதித்யா போன்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர். பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

-tamil.filmibeat.com