விவேக் படத்தால் தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! இதை யாரும் கண்டிப்பா பாராட்டாம இருக்க மாட்டாங்க!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் விவேக். மக்கள் சிரித்து விட்டு போக வேண்டும் என்று மட்டும் நினைக்காமல் பல சமூக கருத்துக்களை தொடர்ந்து தன் படங்களின் மூலம் எடுத்துரைப்பவர்.

இவர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள படம் எழுமின். பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, படத்தை பாராட்டியுதுடன் இனி அடுத்த வாரம் முதல் எல்லா அரசு பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்றுத்தரப்படும் என்று அரசாணை விதித்துள்ளார்.

பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வரும் வேலையில் இந்த அறிவிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியதே.

-cineulagam.com