காப்புரிமை விவகாரத்தில் மீண்டும் எச்சரிக்கை! கொந்தளித்த இளையராஜா

தமிழ் சினிமாவில் ஒப்பற்ற இசையமைப்பாளர் இளையராஜா. கடந்த 2014 ல் அவர் தன் பாடல்களை பயன்படுத்த தடை கேட்டு நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார்.

அண்மையில் தன் பாடல்கள் காப்புரிமை குறித்து வழக்கு விசாரணையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தடை செல்லும். தீர்ப்பில் எந்த வித மாற்றமும் இல்லை. அதை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2010 ல் எக்கோ நிறுவனத்தின் மீது சட்டவிரோதமாக என் பாடல்களை விற்பதாக புகார் கொடுத்திருந்தேன். அதனை வைத்து அவர்கள் வழக்கை ரத்து செய்யக்கோரி தொடுத்த வழக்கின் தீர்ப்பு தான் நேற்று வெளியாகியுள்ளது.

அதில் நீதிபதி அவர்கள் குற்றவியல் நடவடிக்கையை மட்டும் ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என சொல்லவில்லை. இதற்கும் என் பாடல்கள் காப்புரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சிலர் இதில் தவறாக செய்தி வெளியிடுகிறார்கள். 4 ஆண்டுகளாக நடக்கும் வழக்கில் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். இந்நேரத்தில் உண்மையில்லாத செய்திகள் வெளியிட வேண்டாம் என கூறியுள்ளார்.

-cineulagam.com